-
பூமியில் உயிர்கள் பரிணாமம் மிக நீண்ட காலம் நிகழ்ந்தது. இது பாலியோஸோயிக் காலம், மிஸோஸோயிக் காலம், சினோசோயிகு காலம் என பகுத்து அந்தந்த காலத்தில் ஒரு செல் உயிர்களாக இருந்தவை. எவ்வாறு பல செல் உயிர்களாக நீர் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, நிலத்தில் வாழ்வனவாக பரிணாமம் பெற்றன என்பதை எளிய முறையில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் நூலாசிரியர் விளக்குகிறார்.
புவி பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் மேற்பரப்பில் இருந்த உயிரினங்கள் பூமியில் புதையுண்டு போயின. இதன் மூலம் பலவிதமான டைனசர்கள், டிராகன்கள், பெரிய பல்லிகள் ஆகியன ஜூராசிக் காலத்தில் வாழ்ந்தன என்பதை இந்நூல் நிறுவுகிறது. அதன்பிறகு, ஊர்வன, பறப்பன, பாலுட்டிகள் தோன்றி மேலும் தாவரங்களின் பரிணாமம் பற்றியும் விளக்கப்படுகின்றது. ஆரம்பகால பாலூட்டிகளிலிருந்து சமீபகால பாலுட்டி உயிரினங்கள் எவ்வாறு பரிணமித்து வளர்ந்துள்ளன என்பதும், உடலமைப்பிலும் பண்பிலும் கூட எவ்வாறு வேறுபட்டிருந்தன என்பதையும் சித்திரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இறுதியாக மனத குரங்கு மனிதனாக மாறியதன் இரண்டு கோடி ஆண்டுகால வரலாறும் சுருக்கமாக விளக்கப்படுகின்றது.
- பதிப்பகத்தார்.
-
This book Boomiyin Uyirinangal is written by Bala and published by Paavai Publications.
இந்த நூல் பூமியின் உயிரினங்கள், பாலா அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Boomiyin Uyirinangal, பூமியின் உயிரினங்கள், பாலா, Bala, Aariviyal, அறிவியல் , Bala Aariviyal,பாலா அறிவியல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Bala books, buy Paavai Publications books online, buy Boomiyin Uyirinangal tamil book.
|