book

நங்கை மடவன்னம் அல்லது மந்திஜால மகா விசித்திரம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Nangai Madavannam Allathu Manthijala Maha Visithiram (Vanthuvittar !Thigambara Saamiyaar)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளிவந்த வடுவூராரின் விலாஸவதி என்பதைத்தான் சொல்ல முடியும். அது வெளிவந்த சமயத்தில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டதுடன் படிக்கவும்பட்டது. மூன்று ஆண்டுகளில் ஐந்து பதிப்புகள் வந்ததாக ஒரு தகவல் படித்திருக்கிறேன். வடுவூராரின் ஆரம்பக் காலத்திய நாவல்கள் எல்லாம் மாதாந்திரப் பத்திரிகையாக வெளிவந்த மனோரஞ்சிதம் (அல்லது மனோரஞ்சனியா?) என்கிற பத்திரிகையில் வெளிவந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பத்திரிகையைப் பார்த்திருப்பதாக எனக்கு நினைவில்லை. அந்தப் பத்திரிகையை முன்மாதிரியாகக் கொண்டுதான் வை.மு. கோதைநாயகி அம்மாள் தனது ஜகன்மோகினி நாவல் பத்திரிகையைத் தொடங்கியதாகவும் சொல்வார்கள்.