book

ஏன் கூடாது

Eaan kuudathu

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :140
பதிப்பு :3
Published on :2013
Add to Cart

எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் நடித்தார். 1964 'அன்டர் செகரட்டரி' என்ற நாடகத்தில் சோ கதாநாயகன். அதில் கதாநாயகியாக நடித்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர்களுடன் நானும் நடித்தேன் என்பது பெருமையாக உள்ளது. சினிமாவில் 'பேரும் புகழும்', 'பலப்பரீட்சை', ரஜினி நடித்த 'கழுகு' உட்பட பல படங்களில் சோவுடன் சேர்ந்து நடித்துள்ளேன். அரசியல் ரீதியாக பலரை கடுமையாக விமர்சித்தாலும் அவர்களுடன் நட்பு பாராட்டும் ஒரே அரசியல் விமர்சகர் சோ தான். நகைச்சுவை என்ற தேனை தடவி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர். அவரது விமர்சனத்தில் ஒரு குழந்தைத் தனம் இருக்கும். அதனால் அவரது விமர்சனம் யாரையும் காயப்படுத்தாது. 'சோ சொன்னால் சரியாக இருக்கும்' என்பது பலரது நம்பிக்கை.