book

கட்டபொம்மு கதை

Kattapommu kathai

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொத்தமங்கலம் சுப்பு
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189936082
குறிச்சொற்கள் :வீரர், போரட்டம், காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது.
மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக கட்டபொம்மன் மட்டும் போரிடவில்லை. தன்னோடு பல வீரர்களையும் இணைத்துக் கொண்டான். அதில் குறிப்பிடத்தக்கவன் அவன் தம்பி ஊமைத்துரை. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவன் விட்டுப் போன போராட்டத்தை தோளில் சுமந்தவன். வெள்ளையர், பீரங்கி குண்டுகளால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை துளைத்தெடுத்தபோது, நான்கே நாட்களில் மீண்டும் ஒரு கோட்டையை அதே இடத்தில் கட்டியவன். வெறும் மண்ணோடு சில மூலிகைகளையும் கலந்து கட்டப்பட்ட ஒரு 'இரும்புக் கோட்டை' அது.

அப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்களை பெயர் தெரியாத கவிஞர் ஒருவர் கும்மிப் பாடல்களாக வடித்திருக்கிறார். அந்தப் பாடல்களைத் தொகுத்து வீரபாண்டியனின் வீர வரலாற்றை எளிய மொழியில் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருக்கிறார். ஓவியர் கோபுலு விடுதலை வீரத்தைக் காட்சியாக வடித்திருக்கிறார். 1951_ம் ஆண்டு ஆனந்த விகடனில் 'கட்டபொம்மு கதை' என்ற தலைப்பில் இந்தப் பொன் எழுத்துக்கள் தொடராக வெளிவந்தது.

அது இந்திய சுதந்திரப் போராட்டம் முடிந்து அலை ஓய்ந்திருந்த சமயம். மென்மையான சுதந்திரக் காற்றில் ஒரு வீரச் சரித்திரத்தைப் படித்த வாசகர்கள் மெய்சிலிர்த்துப் போயினர். ஆண்டுகள் பல கடந்து விட்டன. புதிய தலைமுறையினர் வளர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு விடுதலைப் போராட்ட வரலாற்றை, அதன் தாத்பரியத்தை விளக்கும் அரிய நூல் இது.