book

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :140
பதிப்பு :3
Published on :2014
Out of Stock
Add to Alert List

காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்புகிறார்கள். இதற்குச் சான்றாக அதிமதுரகவி என்பார் இயற்றிய பாடலொன்றைக் குறிப்பிடுகிறார்கள். அந்தப்பாடல் இது:

வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற வௌ;வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.

இவர் வைணவ சமயத்தைச் சார்ந்த அந்தணர் ஆவார். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருமோகூர்  காளமேகப் பெருமாள் கோவில்  108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மூலவர் காளமேகப் பெருமாள் ஆவார். திருமோகூர் தலத்தின் மடப்பள்ளியில் (சமையல் கூடத்தில்) பரிசாரகராய் (சமையல் கலைஞராகப்) பணியாற்றிய ஒருவரின் மகனே காளமேகம் என்பது ஒரு சிலரின் கருத்தாகும். திருமோகூர் காளமேகப்பெருமாளைப் பற்றி காளமேகப் புலவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.