book

இயற்பியல் விஞ்ஞானிகள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. சாந்தகுமாரி
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2018
Add to Cart

"மானுடம் வென்றதம்மா” என்று பாடினார் கம்பர். எல்லாம் இயற்கையின் வழியே என்று ஏங்கிக் கிடந்த மனிதன் தனது அறிவைச் செலுத்திச் சிந்தனை ஆற்றலை வளர்த்தபோது அந்த இயற்கையையும் வென்று மனித வாழ்வுக்கு வழிகாட்டிகளான மகத்தான மனிதர்களே விஞ்ஞானிகள் ஆகின்றனர். மனிதன் வாழ்வாங்கு வாழ தமது வசதிகளைத் தாமே பெருக்கிக் கொள்ளும் வகையில் தேவையானவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான், உழைத்தான், வென்றான். அவனே மானுடம் வென்றதற்குச் சான்றாகத் திகழ்கிறான்.
மானுட வெற்றிக்குப் பலர் காரணமாயினர் என்றாலும் கலீலியோ, ஐன்ஸ்டீ ன், மேரி க்யூரி, சர்.சி.வி. இராமன், டாக்டர் சந்திரசேகர், ஐசக் நியூட்டன் ஆகிய அறுவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றினைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் நூலே இயற்பியல் விஞ்ஞானிகள் என்னும் இந்நூல். பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் நுண்ணிதின் தேர்ந்து தொகுத்துள்ளார் ஆசிரியர் திருமதி க. சாந்தகுமாரி அவர்கள்.