அழகு - Azhagu

Azhagu - அழகு

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: வசுந்தரா (Vasundra)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780890
Pages : 160
பதிப்பு : 9
Published Year : 2008
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, மகளிர், அழகுக் குறிப்புகள், செய்முறைகள்,
மூளை தனம் தமிழ் மண்ணே வணக்கம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான்.
  பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக வகைப்படுத்தியிருக்கிறது நமது இலக்கியம்.

  அதுபோல, பெண்ணின் அழகை வெளிப்படுத்தும் பாகங்களையும் ஏழாக வகைப்படுத்தலாம். கூந்தல், கண்கள், இதழ்கள், கன்னம், கழுத்து, இடை மற்றும் விரல்கள் ஆகிய ஏழு வகை பாகங்களும் அழகு பொருந்தி இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களும் நினைப்பார்கள்; அது இயற்கையே. ஆனாலும், தொடர்ந்து அழகைப் பேணிப் பாதுகாக்கும் பெண்களுக்கே இந்த ஏழு வகை அம்சங்களும் பொருந்தியிருக்கும்.

  சிலருக்கு அழகைப் பேணுவதில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாது. தெரிந்தாலும் அரைகுறையாகவே தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்காகவே 'அவள் விகடன்' இதழில் 'அழகு' தொடராக வெளிவந்தது. அழகுக்கலை நிபுணர் வசுந்தரா எழுதிவந்த இந்தத் தொடர் வாசகியர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

  இந்த நூல் முழுக்க இயற்கை முறையிலான அழகுக் குறிப்புகள் நிறைந்து இருக்கின்றன. எந்த வகை சருமம் உடையவர்களுக்கு, எந்த வகை ட்ரீட்மென்ட் சிறந்தது; எந்த வயதினர், எந்த முறையில் அழகு படுத்துவது நல்லது; டை, கலரிங் செய்பவர்கள் அவற்றை எப்படிக் கையாள வேண்டும்; நகங்களை எப்படிப் பராமரிப்பது; எந்த நிற உடைக்கு, எந்த நிற லிப்ஸ்டிக் உதட்டழகை உயர்த்திக் காட்டும்; எந்த வகை முக அமைப்புக்கு, எந்த வகை சிகை அலங்காரம் சரியானது... என்று பட்டியலிட்டுக்கொண்டே போகிறார் ஆசிரியர்.

  சிறப்பாக, திருமணத்துக்கு முன் மணப்பெண் தன்னை எப்படி ஆயத்தப்படுத்திக்கொள்வது, தன் நடை, உடை, பாவனைகளை எப்படி அழகோடு ஒன்றி அமைத்துக்கொள்வது... இப்படி, வாழ்க்கை அழகுடன் இனிமையாகச் செல்ல பல டிப்ஸ்களை, செய்முறைகளை, சிகிச்சைகளை இந்தத் தொகுப்பு முழுக்க வசுந்தரா வழங்கி இருக்கிறார்.

  ஆஃபீஸ் விட்டால் வீடு... வீடு விட்டால் ஆஃபீஸ் என்று இருப்பவர்களுக்கும், தங்கள் புற அழகையும் ஆரோக்கியத்தையும் கவனிக்காமல், அவசரகதியில் ஏனோதானோவென்று செல்பவர்களுக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்தான். ஆண்களும் இந்த நூலைத் தங்கள் தோழிகளுக்கும், மனைவி மற்றும் சகோதரிகளுக்கும் அன்புப் பரிசாகக் கொடுத்து மகிழ்விக்கலாம். படித்தும் நடைமுறைப்படுத்தியும் அழகை அழகாக்குங்கள்!

 • This book Azhagu is written by Vasundra and published by Vikatan Prasuram.
  இந்த நூல் அழகு, வசுந்தரா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Azhagu, அழகு, வசுந்தரா, Vasundra, Pengal, பெண்கள் , Vasundra Pengal,வசுந்தரா பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vasundra books, buy Vikatan Prasuram books online, buy Azhagu tamil book.

ஆசிரியரின் (வசுந்தரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour

இதுதாங்க பியூட்டி - Ithuthaanga Beauty

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


மெருகூட்டும் மெஹந்தி டிசைன்கள்

மாதர்குல திலகங்கள் (old book rare)

வெற்றி சமையல் 10 சிற்றுண்டி(டிபன்) வகைகள்

அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்

பண்டிகைக் காலக் கோலங்கள் - Pandigai Kaala Kolangal

பெண்களுக்கான சிறுதொழில்கள்

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

சுயமரியாதைச் சொன்மாலையும் பெண்ணுரிமைக் கீதங்களும்

பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும் - Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum

கீரை வகைகளும் பொடி வகைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

சுட்டிகளின் உலகம் - chutigalin ulagam

மனதின் ஓசைகள் - Manathin oosaigal

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

இவன்தான் பாலா - Ivanthaan Bala

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk