book

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. பாலகிருஷ்ணன், ரம்யா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2012
குறிச்சொற்கள் :Tnpsc books
Add to Cart

 1923 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியக் குடிமைப்பணியாளர்களின் ஊதிய விகிதத்தை ஆய்வுசெய்யும் பொருட்டு ஒரு பொதுப்பணியாளர் தேர்வுக் குழுவை ஏற்படுத்தியது. லீ பிரபுவை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்தக்குழு நான்கு ஆங்கிலேயர்களையும் நான்கு இந்தியர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. இந்தியக் குடிமைப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றில் இந்தியர்களுக்கான இடம் குறித்தும் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. பதினைந்து ஆண்டுகளில் இந்தியக் குடிமைப்பணியில் இந்தியர்களின் பங்கெடுப்பு ஐம்பது விழுக்காடாகவும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியக் காவல் துறையில் இந்தியர்களின் பங்கெடுப்பு பதினைந்து விழுக்காடாகவும் அமையும் வகையில் இந்தியர்களின் பங்கெடுப்பு விகிதத்தை இந்த லீ குழு நிர்ணயித்தது.

தங்களுக்கு சரியெனப்படும் வகையில், பொதுப்பணிகளுக்கான பணியாளர்களை தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல் ஆகியவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் தொடர்புடைய மாகாண அரசுகளிடமே வழங்கப்பட்டது. மேற்படி விருப்பார்ந்த அதிகாரத்தினைக்கொண்டு, மதராஸ் மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் தங்களுக்கென தனியான தேர்வாணையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தன. இவ்வகையில் 1929 ஆம் ஆண்டு மதராஸ் மாகாண சட்டமன்றத்தின் சட்டத்தின்படி மதராஸ் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்வாணையம் அமையப்பெற்ற மாகாணம் எனும் தனிப்பெருமையை மதராஸ் மாகாணம் பெற்றது. மதராஸ் தேர்வாணையம் தலைவர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக்கொண்டு செயல்படத் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப்பின் பல்வேறு தேர்வாணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1957 ஆம் ஆண்டு மதராஸ் தேர்வாணையம் சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு மதராஸ் பணியாளர் தேர்வாணையம் எனப் பெயர் பெற்றது. 1969ஆம் ஆண்டு மதராஸ் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் பெயரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என மாற்றம் பெற்றது.