book

சாதியம் கைகூடாத நீதி

Sathiyam: Kaikoodatha Neethi (Essays)

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்டாலின் ராஜாங்கம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789380240954
Add to Cart

தலித் வாழ்வு சார்ந்த உரையாடல்கள் அவற்றின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தருணம் இது. ஒடுக்குமுறைகளின் நுட்பமான வடிவங்களை அடையாளம் காண்பதும் அவற்றை அம்பலப்படுத்துவதும் அவற்றுக்கெதிரான போராட்டங்களை ஒருங்கிணைப்பதுமான தலித் இயக்கங்கள், அறிவுஜீவிகளின் செயல்பாடுகள் நம் ஜனநாயக அமைப்பின் போதாமைகளை உணர்த்துபவையாகவும் திட்டவட்டமான மாறுதல்களைக் கோருபவையாவும் புதிய வீச்சுகளுடன் மேலெழுந்து வருகின்றன. ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்த நூல் அத்தகைய தீவிரமான அறிவுத்துறைச் செயல்பாட்டின் ஒரு பகுதி. கடந்த பல ஆண்டுகளில் தலித் சமூகத்தின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறைகளையும் தலித் சமூகம் எதிர்கொண்டுவரும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் அவற்றுக்குக் காரணமான சாதி ஆதிக்கத்தையும் நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் இந்நூல் தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்களின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தவும் முயன்றிருக்கிறது. காவல்துறை, நீதிமன்றங்கள், அரசு அதிகார மையங்களின் அருவருப்பான நடைமுறைகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் சமரசமற்ற கூர்மையான விமர்சனங்களின் வழியாகவும் மறுக்க முடியாத ஆதாரங்களை முன்வைப்பதன் மூலமும் இந்த நூலை ஒரு போர் கருவியாக மாற்ற முயன்றுள்ளார்.