book

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

Eanippadigalil Maanthargal

₹450₹450 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :648
பதிப்பு :6
Published on :2017
ISBN :9789386433183
Add to Cart

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டும் ஆசிரியர், குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், காது குத்துதல், முடிஎடுத்தல், பாட்டனாரின் பெயரைப் பேரன்களுக்குச் சூட்டுதல், ஜல்லிக்கட்டுகளை நடத்துதல், லிங்கங்களை ஆராதித்தல் போன்றவை உலகம் பூராவிலும், பரவியிருந்தன என்று குறிப்பிடுகிறார். ஆன்மா இறைவனை அடையும் தனது நீண்ட நெடும் யாத்திரையில் பல நிலையைக் கடக்க நேரிடும். பாபி, பாமரன், விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகி அல்லது உலகைத் துறந்த துறவி, தெய்வ விவேகி, தெய்வ சாது, மகான், தன்னையும் துறந்த துறவி, ஞானி என்று பல நிலைகள். இந்த நிலைகளிலும் அவரவர் நடவடிக்கை, குணம், செயல், தன்மை, மனோபாவம், மனோநிலை ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வான நிலைகள் இருப்பதையும் விவரிக்கிறார். பதிப்புரையில் காண்கிறபடி, இந்நூல் ஸ்ரீ சிவன் சுவாமிகள் என்ற அருளாளரால் இயற்றப்பட்டிருப்பதை அறிகிறோம். பண்டைய எகிப்து, சீன, கிரேக்க ஞானிகள், அவர்களது வரலாறுகள், அங்கு நிலவிய ஆன்மிக ஸ்தாபனங்கள் ஆகியவை பற்றியும், ஆங்காங்கே விரிவான விளக்கங்களைத் தருகிறார்.