book

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மன்னாதி மன்னன் கதை வசனம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184027334
Add to Cart

தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!