-
இசை ஓர் அற்புதம். அது, குமுறலில் வாடும் எத்தனையோ இதயங்களை இதமாக்கி மகிழ்வித்திருக்கிறது. மருந்தாகும் அளவிற்கு இசையை பதமாக கலைஞன் தரவேண்டும். அந்தக் கலைஞனே வான்புகழ் பெற்று வரலாற்று நாயகனாகிறான். சங்கீத உலகில் வாழ்ந்து மறைந்த பலரின் வரலாறும் மேன்மையும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. காரணம், அவர்களின் வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை; மேன்மை போற்றிப் புகழப்படவில்லை. அந்த வகையில், இசையுலக இளவரசராக விளங்கி, பல கோடி மனங்களில் வீற்றிருந்த அரிய சங்கீதக் கலைஞனான ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் வாழ்க்கை வரலாறும் பலர் அறியாததே!
இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து, செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை ‘ஜி.என்.பி பாணி’ என்றே தனியாக அடையாளப்படுத்துவர்.
ஜி.என்.பி. படித்த படிப்பிற்கும் பழகிய சங்கீதத்திற்கும் இடைப்பட்ட வாழ்வின் போராட்ட மனதை விளக்குவதோடு, சங்கீதச் சக்கரவர்த்தியாக சரித்திரப் புகழ் மணக்க கோலோச்சிய ஜி.என்.பி_யின் வாழ்க்கையை முழுவதுமாக முறைப்படி பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர் லலிதா ராம்.
ஆதாரங்களின் செறிவும் அனுபவசாலிகளின் பகிர்வும் இந்நூலை உயர்த்திப் பிடிக்கிறது. ஜி.என்.பி_யின் வாழ்க்கை வரலாற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் ஜி.என்.பி. எழுதி விகடனில் வெளியான அரிய மூன்று சங்கீதக் கட்டுரைகள், இந்நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. தலைமுறைகள் தாண்டியும் ஜி.என்.பி_யின் இசையால் மயங்கிக் கிடக்கும், மயங்கப்போகும் ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.
-
This book Isai ulaga ilavarasar G.N.B. is written by Lalitha Ram and published by Vikatan Prasuram.
இந்த நூல் இசையுலக இளவரசர் ஜி.என்.பி., லலிதா ராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Isai ulaga ilavarasar G.N.B., இசையுலக இளவரசர் ஜி.என்.பி., லலிதா ராம், Lalitha Ram, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Lalitha Ram Iyal-Isai-Nadakam,லலிதா ராம் இயல்-இசை-நாடகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Lalitha Ram books, buy Vikatan Prasuram books online, buy Isai ulaga ilavarasar G.N.B. tamil book.
|