book

சிக்குன் குனியா

Chicken kuniya

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.வி.கே. ராஜாமணி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189780494
குறிச்சொற்கள் : தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போலவே மக்களை பீதிக்குள்ளாக்குகின்றன சில நோய்கள். மலேரியா, காலரா, டெங்கு... என வெவ்வேறு நோய்கள், அவ்வப்போது பருவகாலத்துக்கு ஏற்றாற்போல் பலரையும் ஆட்டுவிக்கின்றன. அந்த வரிசையில் தமிழ்நாட்டை மட்டுமின்றி, மேலும் சில இந்திய மாநிலங்களையும் வெகுவாக உலுக்கி எடுத்துக்கொண்டு இருக்கிறது 'சிக்குன் குன்யா' நோய். நம் நாட்டில் ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எவ்வித பாகுபாடுமின்றி, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது, 'சிக்குன் குன்யா'. இந்நோய் தாக்குவதற்கான காரணம், நோய்க்கான அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றை அறிவதற்கு முன்னரே, பலர் 'சிக்குன் குன்யா' என்ற பெயரைக் கேட்டவுடன் திகிலடைந்துவிடுகின்றனர். இந்நோய் குறித்த விழிப்பு உணர்வு முன்கூட்டியே இருந்திருந்தால், வீண்பயத்துக்கு அவசியமே இல்லை.

சிக்குன் குன்யா குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும், மக்களிடையே நிலவிவரும் தேவையற்ற அச்சத்தை களைவதும்தான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். இந்த நோய் தோன்றிய வரலாறு முதல் நோய் வராமல் தடுப்பதற்கான சுலபமான வழிமுறைகள் வரை அனைவருக்கும் புரியும்வண்ணம் எளிமையான நடையில் எழுதியிருக்கிறார்கள் டாக்டர் வி.கே.ராஜாமணி மற்றும் டாக்டர் கே.ராஜா வெங்கடேஷ்.

இதுபோன்ற நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசு முழு கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில், நோய்கள் குறித்த தகவல்களை மக்களும் தெரிந்துவைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது முக்கியம். இதற்கு துணைபுரியும் வகையில், அனைவருக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் 'விகடன் பிரசுரம்' இறங்கியிருப்பதற்கு இந்தப் புத்தகமே சான்று.

'சிக்குன் குன்யா' குறித்த தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகம், இந்நோய் உங்களை அண்டாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க தூண்டுகோலாக அமைந்து, விரைவில் இந்தப் பெயரையே மறந்துவிட வழிவகை செய்யும் என நம்புகிறேன்.