book

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள்

Sithargal Purindha Arputhangal

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935493
Out of Stock
Add to Alert List

உடலைப் பழித்திருக்கிறார்கள். கடவுளை மறுத்திருக்கிறார்கள். இங்கும், அங்கும், எங்கும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கிறார்கள். அறிவியல், அறவியல், ஆன்மிகம், அரசியல் அனைத்தையும் அறிந்து, அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார்கள்.

கொல்ல வரும் மதயானையைக் கூட நாய்க்குட்டியைப் போல சித்தர்களால் அடக்கி விட முடியும். கரடி புலி முதலிய காட்டு மிருகங்களின் வாயைக் கட்ட முடியும். சிங்கத்தின் முதுகில் ஏறிக் கொள்ள முடியும். உலோகங்களைத் தங்கமாக ரசவாதம் செய்ய முடியும்.

மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் உலவவும், மூப்பு, பிணிகளுக்கு ஆளாகாமல் எப்போதும் இளமையோடு இருக்கவும் சித்தர்களால் முடியும். மற்றவர்கள் உடலில் புகுந்து கொண்டு அவர்களை ஆளமுடியும். மனித குலம் உடலளவிலும் மனத்தளவிலும் ஆரோக்கியம் பேணுவதற்கான வழிகளை சித்தர்கள் கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். குறியீடுகளாகவும், ரகசிய சங்கேதங்களாகவும் அவை உலா வருகின்றன.

வெளித்தோற்றத்துக்கு சித்தர்கள் இயல்பானவர்கள். நம்முடன், நம்மைப் போல் வாழ்பவர்கள்தாம். அவசியம் என்றால் மட்டுமே அதிசயங்கள் நிகழ்த்துகிறார்கள். சித்து விளையாட்டுகள் நிகழ்த்துகிறார்கள். இந்தப் புத்தகம் அத்தகைய அதிசய சம்பவங்களைக் கோர்வையாகத் திரட்டித் தருகிறது. நாம் அறிந்த பல சித்தர்களின் அறிந்திராத சாகசங்களைக் கண்முன் நிறுத்துகிறது.