book

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

Brindhavum Ilam Paruvathu Aangalum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. வெண்ணிலா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184765618
Out of Stock
Add to Alert List

இனக்குழு சமூகத்திலிருந்தே கதை சொல்லும் மரபு தொடர்ந்து வருகிறது. தன்னுடைய வேட்டை அனுபவத்தைக் கற்பனை கலந்து புனைவாக்கினான் ஆதி மனிதன். பொதுவாக நீதியை வலியுறுத்தவே அக்கால கதைகள் பயன்பட்டன. கதை கேட்பவரின் சுவாரசியத்துக்காக முடிந்த அளவு பொய்யையும் கலந்து விதவிதமாக கதை சொன்னார்கள். கதையின் அடுத்த கட்ட வளர்ச்சியான சிறுகதை என்னும் வடிவம் ஒரு சமூகத்தின் வரலாறாக இன்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. அ.வெண்ணிலா ஒரு கவிஞராக தமிழ்ச்சூழலில் நன்கு அறிமுகமானவர். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘நீரிலையும் முகம்’ என்ற தொகுப்பின் மூலமாக அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். பள்ளி ஆசிரியர்; பதிப்பாளர்; பெண்ணியவாதி என்று பல முகங்களைக் கொண்டு இலக்கியச் சூழலில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். இவர் புனைவின் அடுத்த வடிவமான சிறுகதையையும் அவ்வப்போது எழுதி வந்தார். இவருடைய கதைகள் இதழ்களில் வெளிவந்தபோதே வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்போது நூல் வடிவிலும் வெளிவருகிறது. இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 17 கதைகள் உள்ளன. முதல் 5 கதைகளும் ஒரு பதின் வயது பெண்ணுக்கும் இந்த ஆண் மைய சமூகத்திற்கும் இடையே நிகழக்கூடிய மோசமான அனுபவங்கள். அடுத்த 12 கதைகளுமே பெண்களின் வெவ்வேறு மனநிலைகள், அவர்கள் இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் நிராசைகள், கிராமத்துப் பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் என விரிகிறது கதைகள். வெண்ணிலாவின் கதைகளில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் மொழி. இதுவரை பெரிய அளவில் இலக்கியங்களில் பதிவாகாத தான் சார்ந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் சார்ந்த பேச்சுத் தமிழில் கதைகளைச் சொல்லியிருக்கிறார். நெசவுத் தொழில் செய்யும் பெண்கள்தான் இவரின் கதைக்களம். குறிப்பாக சிறுமிகள். ஒவ்வொரு கதையின் முடிவுமே மனதைக் கனக்கச் செய்கின்றன.