book

அபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம்

Abiraami Andhaadhi

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2012
ISBN :9798184464213
Out of Stock
Add to Alert List

என்ன வேடிக்கை இது!அம்பிகையின் திருநாமங்களைப் பயன் கருதியே சொல்கின்ற நிலையைத் தாண்டி நிபந்தனையற்ற ஈடுபாடும், பக்தியும் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறாள் என்பதற்கு அபிராமி பட்டரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.அம்பிகையுடைய திருவுருவத்தை எழுதிகாட்டிக்கொண்டு வருகிற பட்டர், இந்த இடத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் யோசிக்கிறார். அவளுடைய உருவத்தை நாம் உள்ளத்தில் பதிப்பதெல்லாம் இருக்கட்டும்.உள்ளபடியே இந்த உருவம்தானா அம்பிகை என்றொரு கேள்வியைக் கேட்கிறார். அவள்தான் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தாள். அவளுடைய தனங்கள் தாமரை மொட்டுக்கள் போல் இருக்கின்றன என்று நாம் உவமை சொல்கிறோம். அவளுடைய கண்கள் மானினுடைய அம்கண்கள்போல் இருக்கின்றன என்று உவமை சொல்கிறோம்.தாமரை, மான், மனிதன், பூமி, நிலவு எல்லாவற்றையும் அவள்தான் படைத்தாள். அவள் படைத்ததையே அவளுக்கே உவமையாகச் சொல்கிறோமே, இது நமக்கே வேடிக்கையாக இல்லையா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறார்.