book

அறிவொளியூட்டும் அப்துல்கலாம்

Arivoliyutum Abdulkalam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190798082
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள், தலைவர்கள்
Add to Cart

தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1931 , அக்ரோபர் 15-ஆம் நாள் பிறந்தவர் அப்துல் கலாம்.கவிதை ஆற்றல் மிக்கவர். நூலாசிரியர், பைச்சாளர், சிறந்த கருத்துரையாளர் என அவரைப் பற்றிகச் சொல்லிக் கொண்டே செல்லலாம். மக்களின் முயற்சி இருந்தால், எந்த ஒரு நாடும் தனக்கு வேண்டியதைப் பெற முடியும். அத்தகைய ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது என்ற நம்பிக்கை  கொண்டவர். இந்த நம்பிக்கையானது விண்வெளித் துறை, பாதுகாப்பு மற்றும் அணு ஆற்றல் துறையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் உருவான தன்னம்பிக்கை, தலைசிறந்ததைச் சாதிக்கும் வல்லமை  கொண்ட, தனித்தன்மை பெற்ற மக்கள் இந்திய மக்கள் என்பதை நன்கு உணர்ந்தவர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுடன் உரையாடிய குடியரசுத் தலைவர், உலகிலேயே இவர் ஒருவர் தான். நேரு குழந்தைகளை நேசித்தார். கலாம் இளைஞர்களைச் சிந்திக்கவைத்தார். 2020 -ஆம் ஆண்டில் இந்தியா மாபெரும் வல்லரசாக , பெரும் முன்னேற்றம்  கண்ட நாடாக மாறவேண்டும்  என இலக்கை நிர்ணயித்து முன்னேறு, மேலே மேலே என உற்சாகப் பெருவெள்ளமாய்  நாடு முழுவதும் பாய்ந்தோடிய நதியானார்.

                                                                                                                                                       -  பதிப்பகத்தார்.