book

ஆப்பிள், நிலா, நியூட்டன்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வினோத் குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788177357134
Out of Stock
Add to Alert List

அறிவியல் கலைக் களஞ்சியத்தில் எந்த விஞ்ஞானியையும்விட சர் ஐசக் நியூட்டன் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.சர் ஐசக் நியூட்டன் அவர்கள் 1642ல் இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர்.  இவர் பிறப்பதற்கு முன்பே இவரது தந்தையார் இறந்துவிட்டார்.  இவருக்கு மூன்று வயது ஆகும்போது இவரது தாய் மறுமணம் செய்து கொண்டார். இளம் வயதில் வளர்ப்புத் தந்தை இவரை வெறுத்து ஒதுக்கினார்.  இவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் இருந்தது.  தனது பாட்டியிடம் சென்று தங்கினார்.

                தனது 12 வது வயதில் பள்ளியில் சேர்ந்தார்.  இவர் பள்ளி படிப்பில் மிகவும் பின்தங்கி சாதாரண மாணவராக இருந்தார்.  பள்ளியில் பாடம் படிப்பதற்கு பதிலாக படம் வரைதல், பட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஆர்வமாக இருந்தார்.  சில ஆண்டுகளில் தன் படிப்பின்  நிலையை அறிந்து தனது தீவிர முயற்சியால் படிப்பில் முதல் மாணவராகத்  திகழ்ந்தார்.

                இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் தனித் திறமை பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார்.  பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கணித சூத்திரங்களையும், ஈருறுப்பு தொடர் தேற்றங்களையும் கண்டுபிடித்தார்.  இயற்கையை அறிந்து கொள்ள ஆற்றல் வாய்ந்த கணித முறையான வகையீட்டு எண் கணிதம், தொகையீட்டு எண் கணிதம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்.  இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியலில் கணித முறையை பயன்படுத்த உதவியது.

                தனது படிப்பின்போதே ஒளியின் இயல்பு பற்றி ஆய்வு செய்தார்.  வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார்.  வெண்மை நிற சூரிய ஒளிக்கதிரை முப்பட்டக கண்ணாடி வழியாக செலுத்தினார்.  அதில் ஒளிக்கதிர்கள் பல வண்ணங்களாகப் பிரிந்தது.  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் கொண்ட நிறப் பிரிகை உண்டானது.  அதற்கு VIBGYOR என்று பெயரிட்டார்.