-
உலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘மோபி டிக்’ அல்லது திமிங்கிலம் என்ற - ஹெர்மன் மெல்வில் எழுதிய - ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம் தான் ‘திமிங்கில வேட்டை’.
1851-இல் முதன்முதலில் வெளியான இந்த நாவல் இன்றளவும் அமெரிக்காவின் இலக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறியீட்டு வகையிலான இந்தப் பெரும் நாவலின் மையப்புள்ளி தேடல்தான். தத்துவார்த்த தளங்களில்தான் நாவலின் பயணம் செல்கிறது.
பிற நாவல்களில் காணாத அழகியல், பல் வகைப்பட்ட குண இயல்புகளுடன் கூடிய ஆர்வத்தைத் தூண்டும் மனிதர்கள், கவிதை நடையாவும் இணைந்து நம்மை இந்த நாவலுக்குள் அழைத்துச் செல்கின்றன.
முக்கியமான இரு நிகழ்வுகளால் ஏற்பட்ட தாக்கத்தில்தான் - இந்தக் கதையின் கருவாக அமைய - ‘மோபி டிக்’ நாவலை ஹெர்மன் மெல்வில் எழுதியதாகக் கருதப்படுகிறது.
ஒன்று: 1820-இல் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையிலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் கடலில் திமிங்கிலம் மோதியதால் - நான்டுகெட் துறைமுகத்தைச் சேர்ந்த - எஸ்ஸெக்ஸ் என்ற திமிங்கில வேட்டைக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம். இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிப் பிழைத்த எட்டு பேரில் ஒருவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மற்றொன்று: 1830-களின் பிற்பகுதியில் சிலி நாட்டுத் தீவான மோச்சாவையொட்டிய கடலில் ‘மோச்சா டிக்’ என்ற ஸ்பெர்ம் வகைத் திமிங்கிலம் கொல்லப்பட்ட சம்பவம். திமிங்கில வேட்டைக்காரர்களால் குத்தப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட எறியீட்டிகளை முதுகில் தாங்கியபடி கடலில் ‘மோச்சா டிக்’ அலைந்துகொண்டிருந்ததாகவும் கப்பல்களை மிக மூர்க்கமாக இந்தத் திமிங்கிலம் தாக்கிவந்ததாகவும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
1810 முதல் 1830கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கில வேட்டைச் சம்பவங்களில் வேட்டைக்காரர்களைத் தோல்வியுறச் செய்து தப்பியிருக்கிறது மோச்சா டிக். கடலோடிகளின் மத்தியில் மோச்சா டிக் பற்றிய கதைகள் ஒரு நாவலுக்குரியனவாகவே உலவி வந்தன.
கடலில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் மேற்கொண்டு கடற்பயண அனுபவங்களை நாவலாக்கிய ஹெர்மன் மெல்வில், இவ்விரு நிகழ்வுகளால் ஏற்பட்ட தாக்கங்களை ‘மோபி டிக்’ நாவலில் கொண்டு வந்திருக்கிறார்.
-
இந்த நூல் திமிங்கில வேட்டை, மோகன ரூபன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திமிங்கில வேட்டை, மோகன ரூபன், , Novel, நாவல் , Novel,மோகன ரூபன் நாவல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.
|