book

பாலினக் கல்வி

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சி. சேதுராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :249
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423838
Out of Stock
Add to Alert List

பள்ளிகளில் பாலின சமத்துவக் கல்விக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான சட்டங்களை மக்கள் மத்தியில் பிரசார இயக்கமாக அரசும், தமிழகத்தில் உள்ள  அரசியல் கட்சிகளும் எடுத்துச்செல்ல வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற கொடுமைகள் தொடர்வது தடுக்கப்படும்'' என்று நம்மிடம் தெரிவித்தார், சமம் குடிமக்கள் இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சி.சே இராசன்.

குழந்தைகள் மீதான

சென்னை அயனாவரத்தில், 11 வயது  கேட்டல் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தால் தமிழகமே அதிர்ந்துபோயுள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய சமம் குடிமக்கள் இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சி.சே இராசன், ''ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளிகள் உட்பட 17 பேர், 7 மாத காலம் பாலியல் வன்கொடுமைசெய்த கொடூரம் மக்களிடையே கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட 17 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல, சமீபத்தில் திருவண்ணாமலை கோயிலை சுற்றிப்பார்க்க வந்த ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சூழலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி, இந்தச் சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என மனவேதனையுடன் கூறியுள்ளார். தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பெண் குழந்தைகள் மீதான வன்முறை நெருக்கமானவர்களால், தெரிந்தவர்களால்தான் அதிகமாக நிகழ்கின்றன. குழந்தைகள் மிரட்டப்பட்டும், அவர்களோடு விளையாடுவதுபோல வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்துவது தொடர்கிறது. அதனால், பெற்றோர்கள் விழிப்போடு இருக்க வேண்டியதும், குழந்தைகளோடு உட்கார்ந்து பேசுவதும், பிறப்புறுப்புகளின் பெயர் மற்றும் அவற்றின் பயன்பாட்டையும், எது சரியான தொடுதல் எது தவறான தொடுதல் என்பதுகுறித்து எடுத்துச்சொல்வதும், குழந்தைகளின் அனுபவங்களைக் கேட்பதும், தைரியத்தோடு குழந்தைகளை வளர்ப்பதும் அவசியமாகிறது. பள்ளிகளில் பாலின சமத்துவக் கல்விக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கான பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தொடர் பிரசாரங்களை மேற்கொள்ளும்போதுதான் பாலின சமத்துவ எண்ணங்கள் மக்கள் மத்தியில் உருவாகும். அதற்கு அரசு துணை செய்ய வேண்டும் '' என்றார்.