book

ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும்

Jeevan Pirindhapodhum Silaiyaai Ezhundhapodhum

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. ஜீவபாரதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :165
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422046
Add to Cart

ஜீவா எனும் மனிதர் இரத்தமும் சதையுமாய் நடமாடிய இடம் தமிழகம் என்றால், அவர்க்கான கலை, இலக்கிய, அரசியல் களமாகவும், விருப்பிற்குரிய தலைமைக்கேந்திரமாகவும் திகழ்ந்தது காரைக்குடி. பிறந்தது நாஞ்சில் நாட்டில் என்றாலும் சிறந்தது செட்டிநாட்டில் எனும்படிக்குப் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதும் அரிய பணிகள் பல ஆற்றியதும் இந்த சிவகங்கைச் சீமையில் தான்.

நாஞ்சில் நாட்டுப் பூதப்பாண்டியில் தொடங்கி, சென்னை மாநகரத்து அரசுப் பொதுமருத்துவமனையில் முடிவுற்றது ஜீவாவின் வாழ்க்கைப் பயணம். இடைப்பட்ட காலத்தில் அவர் பெரும்பகுதி தங்கியிருந்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியது சிவகங்கைச்சீமை.

அதிலும் செட்டிநாட்டின் முக்கிய நகரமான காரைக்குடியிலும் காரைக்குடி சார்ந்த ஊர்களிலும் அவர் செய்த தொண்டுகள், பேசிய பேச்சுகள், மக்களோடு கலந்து பழகிய நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புடையவை