செய்திகள்

நூல்களை வாங்குவதன் வாயிலாக எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும்: எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சு

 நூல்களை வாங்குவதன் வாயிலாக இன்றைய சமூகம் எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார் எழுத்தாளர் பிரபஞ்சன். இனிய நந்தவனம் பதிப்பகத்தின் வெளியீடான எஸ்.செல்வசுந்தரி எழுதிய “கை நழுவும் சொர்க்கம்” என்ற சிறுகதை, “உன்னை விட்டு விலகுவதில்லை” என்ற நாவல் ஆகியவற்றின் வெளியீட்டு விழா திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சிறுகதை யையும், எழுத்தாளர் பிரபஞ்சன் நாவலையும் வெளியிட்டனர்.

மேலும் படிக்க...


புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன ராஜா-மந்திரி கதை

சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி, ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்த ராஜா, மந்திரி கதை ஒன்றைக் கூறினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற 'பரமஹம்ச யோகானந்தரின் தெய்வீக காதல்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.

மேலும் படிக்க...


சென்னை புத்தக கண்காட்சியில் அதிக விற்பனை ஆன புத்தக பட்டியலில் இடம்பெற்ற கருப்புக் குதிரை புத்தகம்

நவி பதிப்பகத்தின் வெளியீட்டில் நரேன் அவர்களின் எழுத்துக்களில் வெளிவந்து சென்னை புத்தக கண்காட்சியில் அதிக விற்பனை ஆன புத்தக பட்டியலில் இடம்பெற்ற கருப்புக் குதிரை புத்தகம் தற்போது உங்கள் நூல்உலகம் தளத்தில் விற்பனைக்கு... ஆன்லைனில் பெற; http://www.noolulagam.com/product/?pid=33460 கறுப்புப் பணம் என்பது பதுக்கி வைக்கப்பட்ட கரன்சி தாள்கள் மட்டுமே இல்லை. அப்படியென்றால், எது கறுப்புப் பணம்?

மேலும் படிக்க...


சென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகம்

நடந்து முடிந்த சென்னை புத்தகக்காட்சியில் ஒரு பெரிய புத்தகம் அதிகம் விற்று சாதனை செய்துள்ளது. அப்படி அதிகம் விற்ற புத்தகம் எது தெரியுமா ? நடந்து முடிந்த சென்னை புத்தகக்காட்சியில் ஒரு பெரிய புத்தகம் அதிகம் விற்று சாதனை செய்துள்ளது. அப்படி அதிகம் விற்ற புத்தகம் எது தெரியுமா ? அதிகம் மட்டுமில்லை ஒரே புத்தகக்காட்சியில் இரண்டு பதிப்புகளும் விற்று சாதனை படைத்துள்ளது பெரியார்தான். ஆம் நண்பர்களே, விடியல் பதிப்பகத்திடம் இருந்து 'பெரியார் இன்றும் என்றும்' என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகம் அளவில் மிகப்பெரியது. 957 பக்கங்கள் கொண்ட இந்த பெரும் புத்தகத்தில் விலை 300 ரூபாய்தான். சமுதாயம், மதம், கலைகள், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் வகை பிரிக்கப்பட்டுள்ளது. வலுவான கெட்டி அட்டையுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தில் இருந்து சில குறிப்பிடத்தகுந்த வரிகள்....

மேலும் படிக்க...


ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு எழுதிய புதிய புத்தகம்.. சென்னையில் ஜன.29ல் வெளியீடு

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு எழுதிய புதிய புத்தகம் வரும் 29ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து எமரால்ட் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு எழுதியுள்ள 'feather in a C.A.P' என்ற புத்தகம் ஜனவரி 29ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த புத்தகம், மேலாண்மை தொடர்பானது.

மேலும் படிக்க...


சென்னை புத்தக கண்காட்சியில் இன்று…
பாரதி புத்தகாலயம்-"நம் காலத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ'-நூல் வெளியீட்டு விழா: ஆயிஷா இரா.நடராசன், உ.வாசுகி, நடிகர் நாசர், பாரதி கிருஷ்ணகுமார், அ.பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்பு; புத்தகக் காட்சி வளாகம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, பிற்பகல் 3. சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி: அரு. நாகப்பன், சரசுவதி நாகப்பன் குழுவினர்; டபிள்யு ஜே. சுரேஷ், சசிரேகா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்பு; புத்தகக் காட்சி வளாகம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 6.

புத்தக காட்சியில் இன்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் – நூல் வெளியீட்டு விழா
ஜி.விஸ்வநாதன், அ.மு.சுவாமிநாதன், ஆர்.மகாலிங்கம், காந்தி கண்ணதாசன், கே.கே.பி.பன்னீர்செல்வம், இ.சுந்தரமூர்த்தி, தி.சத்தியமூர்த்தி, கோ.உத்திராடம் உள்ளிட்டோர் பங்கேற்பு; சென்னை புத்தகக் கண்காட்சி, செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 5.30. குழந்தை உரிமைகளுக்கான சட்டவள மையம்-மாசற்ற மனித நேயம் நூல் வெளியீட்டு விழா: க.சண்முகவேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்பு;சென்னை புத்தகக் கண்காட்சி, செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 5.30. சொற்பொழிவு: "அற்புத மகானும் அர்த்தமுள்ள ஆயிரமும்' தலைப்பில் ஊடகவியலாளர் மை.பா. நாராயணன்; "வெற்றி நமக்கே' தலைப்பில் ரித்திகா அழகம்மை.பபாசி துணை இணைச் செயலாளர் பி. குருதேவா (பெல் கோ), பபாசி செயற்குழு உறுப்பினர் கு. பூபதி (தோழமை வெளியீடு) உள்ளிட்டோர் பங்கேற்பு; சென்னை புத்தகக் கண்காட்சி, செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 6.

ரத்தமே உயிரின் ஆதாரம் – புத்தக வெளியீட்டு விழா

சென்னை: புத்தக கண்காட்சியில், டாக்டர் ராகவ பாரத்வாஜ் எழுதிய, 'ரத்தமே உயிரின் ஆதாரம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில், திரைப்பட நடிகர் ராஜேஷ் பேசியதாவது:நம் நாட்டில், 4,000 நோய்கள் மனிதர்களுக்கும், 400 நோய்கள் விலங்குகளுக்கும், 40 நோய்கள் பறவைகளுக்கும், 8 நோய்கள் ஊர்வனத்திற்கும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. நம் நாட்டு பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால், நோய்களே வராது.

அமெரிக்காவில் உள்ள, 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், 'கெமிக்கல் இம்பேலன்சால்' பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. நம் நாட்டினர், பாரம்பரிய உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, 'ஜங்க் புட்' சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் இங்குள்ளவர்களுக்கும், 'கெமிக்கல் இம்பெலன்ஸ்' பாதிக்க வாய்ப்புள்ளது. பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு  செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இயக்குநர் கே.பாக்யராஜ் பிறந்தநாளோடு கூடிய கவிஞர் அருண்பாரதியின் புத்தக வெளியீட்டு விழா

இயக்குநர்.கே.பாக்யராஜ் அவர்கள் மூலம் தமிழ்சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட, கவிஞர்.அருண்பாரதியின் “புதிய பானையில் பழைய சோறு” என்னும் கவிதைப் புத்தக வெளியீட்டு விழா 7/01/2017 அன்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. கவிக்கோ.அப்துல்ரகுமான் அவர்கள் இந் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்க, இயக்குநர்.கே.பாக்யராஜ் அவர்கள் புத்தகத்தை வெளியிட, இயக்குநர். என்.லிங்குசாமி அவர்கள் திரை மற்றும் தமிழ் ஆளுமைகள் சூழ பெற்றுக் கொண்டார்.

இயக்குநர்.கே.பாக்யராஜ் பேசும் பொழுது, புத்திசாலித்தனம்… அதி புத்திசாலித்தனம்னு ரெண்டு இருக்கு. என் புள்ள.. மாணவன்னு எப்படி வேணும்னா சொல்லலாம், அருண்பாரதி அதிபுத்திசாலி என்று பாராட்டினார்.

மேலும் படிக்க...


பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் நிகழ்த்திய உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி வரை "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகளை உத்தரப் பிரதேச மாநிலம், ஃபைசாபாத் நகரைச் சேர்ந்த ஆய்வு மாணவரான ராஜீவ் குப்தா (29) புத்தகமாகத் தொகுத்துள்ளார்.

மேலும் படிக்க...Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91