செய்திகள்

நெய்வேலியில் புத்தக கண்காட்சி நிறைவு விழா

நெய்வேலி : நெய்வேலியில் என்.எல்.சி., இந்திய நிறுவனம் சார்பில் நடந்த புத்தகக் கண்காட்சி நிறைவு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, என்.எல்.சி., மின்துறை இயக்குனர் தங்க பாண்டியன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் விக்ரமன், ராகேஷ்குமார், செல்வகுமார் மற்றும் முதன்மை பொது மேலாளர் மோகன் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி., மக்கள் தொடர்பு துறை துணை பொது மேலாளர் சீனிவாசன் வரவேற்றார்.முதன்மை விருந்தினர் கலெக்டர் ராஜேஷ் பேசுகையில், 'நல்ல புத்தகங்கள் படிப்பதன் மூலம், நமது எண்ணங்களும் செயல்களும் துாய்மைபடுத்தப்படுவதால் நமது வாழ்நாள் அதிகரிக்கும்' என்றார். என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் விக்ரமன் பேசுகையில், 'மக்களிடையே குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை, திரும்பக் கொண்டு வருவதற்காக, இக்கண்காட்சிகள் நடத்தப்படுகிறது என்றாலும், பதிப்பகத்துறைக்கும், எழுத்தாளர்களுக்கும், புத்துணர்வு அளிக்கக் கூடிய வகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் செயல்களை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது' என்றார்.


ஓசூரில் 6 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி: 60-க்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஒசூர் அனைத்து குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் 6ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியை பேராசிரியை பர்வீன் சுல்தானா துவக்கி வைத்தார்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 60 க்கும் மேற்பட்ட அரங்குகளுடன், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...


நெய்வேலியில் நடைபெற்று வந்த என்எல்சி புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது

நெய்வேலியில் நடைபெற்று வந்த என்எல்சி புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 20}ஆவது புத்தகக் கண்காட்சி லிக்னைட் அரங்கில் கடந்த ஜூன் 30}ஆம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்சக்தி துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன் தலைமை வகித்தார். மனிதவளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் முன்னிலை வகித்தார்.

மேலும் படிக்க...


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் புத்தகக் கண்காட்சி

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகாதெமி புத்தகக் கண்காட்சி புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. பல்வேறு தலைப்புகளில் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது என கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியீடு!

கன்னடத்தில் 'அம்மா ஆதா அம்மு : ஜெயலலிதா', அதாவது 'அம்மு என்கிற அம்மா: ஜெயலலிதா' என்ற பெயரில் இந்த நூல் வெளிவந்துள்ளது. 262 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில், ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் முதல் அவர் மறைந்தது வரை பல செய்திகள் சுவாரஸ்யமாக இடம்பெற்றுள்ளன.

மேலும், ஜெயலலிதாவின் குடும்பம் மற்றும் பெற்றோர் பற்றி வெளிவராத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நேற்று விற்பனைக்கு வந்த இந்தப் புத்தகம், வந்த சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன. இதனால், இந்தப் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, புத்தக ஆசிரியர் என்.கே.மோகன்ராம் முடிவுசெய்துள்ளார். கூடிய விரைவில் 'அம்மு என்கிற அம்மா : ஜெயலலிதா' புத்தகத்தை தமிழில் படிக்கலாம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் மறைந்த தெலுங்கு இயக்குநர் தாசரி நராயண ராவ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Buy Tamil Books, Novels online – Tamil books online shopping
Dear friends, Thanks for making us No 1 Tamil book seller online. We have reached 33500+ books in our catalog , more than 30,000 Tamil books itself, and you can buy any of these tamil books from your home, most of the time these books gets delivered in a day or two, otherwise in a week time. we use professional courier to ship our orders within Tamilnadu/Kerala/Pondy/Karnataka(only at Bangalore and Mysore)regions and it will get delivered in a day or two. For other places we use Trackon Courier and India post. Your tamil books will get delivered in a day or two. we have more than 25,000 customers and many of them buy books from us regularly. So we welcome and try Online Tamil books buying experience. We also sell tamil books through Amazon and Flipkart. Please call us on 7667-172-172 for any of your customer care support. It will be a missed call and you will be called back to provide a support. thanks, Sugan Noolulagam.com Keywords: tamil books online shopping tamil books buy tamil books online tamil books buy online online tamil books shopping tamil books online

நீட் தேர்விலிருந்து விலக்கு: தமிழக சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று தர வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். பேராசிரியர் நா. மணி தொகுத்து, பாரதிபுத்தகாலயம் பதிப்பித்துள்ள “நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?” என்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (மார்ச் 17) சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நூலை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “நீட் தேர்வுகளால் வரும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இதற்கெதிரான போராட்டத்தையும் நடத்தி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபடும்” என்றார். மாநில பாடதிட்டம் தரம் குறைந்ததல்ல நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு பேசிய கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், “நீதிபதி ஒருவர் நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகியும் அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்காததற்காகத்தானே ஆட்சியாளர்கள் வெட்கப் பட வேண்டும்? தனியார் கல்வி நிறுவனங்களை தொடங்கி கொள்ளையடிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய 11 நீதிபதிகள் கொண்ட குழுதான் வெட்கப்பட வேண்டும். டிஎம்ஏ பாய் என்ற வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை மாற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்” என்றார். “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரத்தை விட மாநில அரசின் பாடத்திட்டம் சிலவற்றில் தரம் அதிகமாக உள்ளது. மாநில பாடத்திட்டத்தை சரியாக ஆராய்ந்து பார்க்காமல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உயர்வானது என்று தவறான தகவலை பரப்புகின்றனர்” என்று கூறிய ராஜகோபாலன், “சிபிஎஸ்சி திட்டத்தில் படித்த மாணவர்களில் 95 விழுக்காடு பேர் தனியார் மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதுகின்றனர். இதனால் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் அதிகளவு வெற்றி பெறுகின்றனர். ஏழைகளால் தனியார் மையத்தில் பயிற்சி பெற முடியுமா? இதனை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும்” என்றார். மாணவர்களின் திறனை மேம்படுத்த… “நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால்தான் நீட் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கும். நீட் தேர்வை எதிர்க்கும் அதேநேரத்தில் மாணவர்களின் திறனையும் மேம்படுத்த வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள்களை போன்று, தற்போது உயர்கல்வி தேர்வுக்கான வினாத்தாள்களை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற சில மாற்றங்கள் கொண்டு வந்தால் நமது மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். ஆனால், மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேர்வுகளை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மத்திய அரசு அல்ல.” என்றும் ராஜகோபாலன் கூறினார். மாதம் முழுவதும் போராட்டம் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, “நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் மார்ச் மாதம் முழுவதும் புத்தக விற்பனை இயக்கம் நடைபெறும். ஏப்.1 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்

இந்தப் புத்தகம் சென்னை பற்றிய பல புத்தகங்ளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னணி இதில் உள்ளது. பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது. மக்களுக்கான போக்குவரத்து, நீர்நிலைகள், தொழில், சேவைகள், கலை, பன்முக கலாச்சாரம் வளர்ந்த கதையும் இது. வெள்ளைக்கார ஆட்சியிலும் சுதந்திரப் போராட்ட இயக்கம் தோன்றி வளர்ந்ததிலும் அதில் வாழ்ந்த, வந்து சென்ற மனிதர்களின் எதிரும் புதிருமான கதை. தொழிலாளர் இயக்கங்கள் உருவான கதை. இடங்கை, வலங்கை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உருவான கதை. சுதந்திரத்தை கொண்டாடியதும் எதிர்த்ததுமான கதை. மக்கள் ஒற்றுமையை பிரித்ததும் வளர்த்ததுமான கதை. சென்னையை உருவாக்கிய மக்கள் சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் கதை. பல்வேறு கருத்தோட்டங்களையும் போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கதை. மண்ணும் மக்களுமான சென்னையின் கதை.


உலக புத்தக தினத்தையொட்டி நூலகங்களில் புத்தக கண்காட்சி: மாவட்ட நூலகர்களுக்கு இயக்குநர் உத்தரவு

உலக புத்தக தினத்தையொட்டி நூலகங்களில் புத்தக கண்காட்சி நடத்துமாறு மாவட்ட நூலகர் களுக்கு பொதுநூலக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக பொது நூலக இயக்குநரும், (கூடுதல் பொறுப்பு), பள்ளிக்கல்வி இயக்கு நருமான எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களுக்கும், மாவட்ட மைய நூலகர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:

மேலும் படிக்க...


50 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்களுடன் நாமக்கல் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

சென்னை மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், நாமக்கல்லில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும்.

 நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக சென்னையைச் சேர்ந்த மக்கள் வாசிப்பு இயக்கத்தினர் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்க உள்ளது.

மேலும் படிக்க...



Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91