செய்திகள்

புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா: தேசிய சுகாதாரக் குழும இயக்குநர் வலியுறுத்தல்

சென்னை புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. விழாவில், சுகாதாரக் குழும இயக்குநர் தரேஷ் அகமது, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், அசோகன் செருவில், சிறந்த நாவலுக்கான விருது பெற்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன், புத்தகத் திருவிழா அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம், எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மேலும் படிக்க...


“செட்டியார் பாரம்பரியம்” புத்தக வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செட்டியார் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் "செட்டியார் பாரம்பரியம் " என்கிற நூல் வெளியிட்டு விழா க.ராம தெரு, மெ.செ இல்லமான, பழமையான பங்களா வீட்டில் நடைபெற்றது.கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் எஸ்.எஸ். மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதல் பிரதியை நூறு வயதான பழனியப்ப செட்டியார் ,சம்பந்தம் செட்டியார் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் படிக்க...


சென்னை ராயப்பேட்டை புத்தக திருவிழா
சென்னை ராயப்பேட்டை புத்தக திருவிழா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.வெங்கடேஷ் எழுதிய பரிபூரண அருளாளன் எனும் புத்தகத்தை எழுத்தாளர் பாலகுமாரன் வெளியிட திருவெற்றியூர் கணேசன் பெற்றுக்கொண்டார்.

கோவை புத்தக திருவிழா துவக்கம்:எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விருது

கோவை:கோவை கொடிசியா, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 'கோயம்புத்துார் புத்தக திருவிழா', கொடிசியா தொழிற்காட்சி வளாத்தில், நேற்று துவங்கியது. ஜூலை 31 வரை நடக்கும் கண்காட்சியில், ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு நடக்கிறது. கலாசார நிகழ்ச்சி களும் நடக்கிறது. அகில இந்திய புத்தக பதிப்பாளர் சங்க தலைவர் பல்தேவ்பாய் சர்மா, சிறப்பு விருந்தினராக பேசுகையில், ''புத்தகங்களை மதித்து போற்றிய யாரும், தோல்வியுற்றதாக இல்லை. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய, இதுபோன்ற கண்காட்சிகள், பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார்.

கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, தொழில்கள் நிலைக்க முடியும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அடிப்படையாக கொண்டு தான், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது,'' என்றார்.தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் பேசுகையில்,''புத்தகங்கள் பற்றி மக்கள் அறிந்தால் மட்டுமே வாங்கி பயன் பெறுவர். ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தக கண்காட்சியை பார்த்தால், அவர்களுக்கு வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். புத்தகங்களை ஒரு முறை பார்த்தால், எப்போதாவது வாங்குவர் என்ற நம்பிக்கை, வெளியீட்டாளர்களுக்கும் ஏற்படும்,'' என்றார்.

கோவை புத்தக கண்காட்சி சார்பில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, விருது வழங்கப்பட்டது.கொடிசியா துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.


பேராவூரணியில் புத்தகக் கண்காட்சி

பேராவூரணியில் தஞ்சை வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம் சார்பில் 2 நாள் புத்தக கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. விழாவிற்கு பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் வை. சிதம்பரம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகை முத்துராமலிங்கம் கண்காட்சியை திறந்து வைத்தார்.

முன்னாள் பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். கவிஞர் நந்தலாலாவின் காலத்தை வென்ற காவியத் தலைவர் காமராஜர் குறுந்தகடை வெங்கடேஸ்வரா கலை கல்லூரி முன்னாள் செயலாளர்                க. அன்பழகன் வெளியிட்டார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. வேலு, அரு. நல்லதம்பி, எச். சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக திருவிழா தொடக்கம்: ஜூலை 31வரை நடக்கிறது

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக திருவிழா தொடக்கம் ஜூலை 31 வரை நடக்கிறது சென்னை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி ஜூலை 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு புத்தகக் காட் சியை தொடங்கிவைத்தனர். விழாவில் அமைச்சர் ஜெயக் குமார் பேசும்போது, ‘‘சிறு வயது முதலே குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பத்திரிகைகள் படிக்கும் பழக் கத்தை குழந்தைகளிடம் உரு வாக்க வேண்டும். இதனால், தமிழை தங்கு தடையின்றி வாசிக்க இயலும். அவர்களது அறிவு மேம்படும். சமுதாயத்தைப் பற்றிய விழிப் புணர்வு அவர்களிடம் அதிகரிக்கும்’’ என்றார். புத்தகத் திருவிழா குறித்து தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘சென்னை புத்தகத் திருவிழா - ஜூலை 2017’ வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 250-க்கும் மேற்பட்ட அரங்கு கள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக் கணக்கான புத்தகங்களைப் பார்வைக்கு வைத்துள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம்.

கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காத நிலையில், தமிழ் பதிப்புலகம் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி தற்போது வாசகர்களை மட்டுமே நம்பியுள்ளது. எனவே, இத்துறையை மேம்படுத்தவும், தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர் கள், வாசகர்கள் இடையே நெருக்க மான தொடர்பை ஏற்படுத்தவும் சென்னை புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.

தினமும் பரிசுகள்

புத்தகத் திருவிழாவில் தினமும் இலக்கிய நிகழ்வுகளாக கவிதை வாசித்தல், ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம், சினிமா 100-ஐ சிறப்பிக்கும் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு, மார்க்ஸ் 200-ஐ சிறப்பிக்கும் கருத்தரங்கம் ஆகியவை நடக்க உள்ளன. குலுக்கல் முறையில் தினமும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசு களாக வழங்கப்பட உள்ளன. சென்னை குறித்த பிரத்யேக புகைப் படக் கண்காட்சியும் நடக்க உள்ளது. வாசகர்கள் வாங்கும் புத்தகங் களுக்கு 10 சதவீத கழிவு அளிக்கப் படும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.


ஒரே இடத்தில் அமர்ந்து நூல்களை வாசித்த 1500 மாணவர்கள்: சென்னை புத்தக திருவிழாவையொட்டி நடந்த நிகழ்ச்சி
பள்ளி மாணவ-மாணவியர் மத்தி யில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் புத்தகத் திருவிழா வரும் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதா னத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலை யில், பள்ளி மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக் கும் வகையில் ஒய்எம்சிஏ மைதா னத்தில் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நேற்று நடத்தப் பட்டது. இதில் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த சுமார் 1500 மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நூல்களை வாசித்தனர்.

மேலும் படிக்க...


புத்தக திருவிழா சென்னையில் ஜூலை 21 தொடங்குகிறது

புத்தக பிரியர்களுக்கான செய்தி சென்னை இராயபேட்டையில் புத்தக திருவிழா ஜூலை21 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழநூல் விற்பனை மேம்பாட்டு கழகத்தின் அறங்காவலர் சண்முகம் அவர்கள் கூரியதாவது வரும் ஜீலை 21 முதல் ஜூலை 30 வரை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தக திருவிழாவில் 250க்கு மேல் அரங்குகள் 200 பதிப்பாகத்தாரின் புத்தகங்கள் கண்காட்சி நடைபெறவிருக்கிறது . இவ்விழாவில் நலிந்து கிடக்கும் புத்தக விற்பனையை மேம்படுத்த வாசகர்களை நம்பியிருப்ப்பாதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க...


புத்தக கண்காட்சி நடத்த அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

திருப்பூர் : புத்தக வாசிப்பு திறனை வளர்க்கும் வகையில், கிராமப்புற அரசு பள்ளிகளில், தலா ஒருநாள் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வராக இருந்த ஜெ., நடமாடும் நூலக திட்டத்தை அறிவித்தார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்துக்கு, சரக்கு வேனில், நடமாடும் நூலகம் வடிவமைத்து வழங்கப்பட்டது.

மேலும் படிக்க...


திருப்பூரில் நடமாடும் நூலக வாகன சேவை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொது நூலகத்துறையின் சார்பில் இயங்கி வரும் நடமாடும் நூலக வாகனத்தின் சேவையினை, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக, கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க...Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91