புத்தக கண்காட்சி

சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்

இந்தப் புத்தகம் சென்னை பற்றிய பல புத்தகங்ளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னணி இதில் உள்ளது. பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது. மக்களுக்கான போக்குவரத்து, நீர்நிலைகள், தொழில், சேவைகள், கலை, பன்முக கலாச்சாரம் வளர்ந்த கதையும் இது. வெள்ளைக்கார ஆட்சியிலும் சுதந்திரப் போராட்ட இயக்கம் தோன்றி வளர்ந்ததிலும் அதில் வாழ்ந்த, வந்து சென்ற மனிதர்களின் எதிரும் புதிருமான கதை. தொழிலாளர் இயக்கங்கள் உருவான கதை. இடங்கை, வலங்கை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உருவான கதை. சுதந்திரத்தை கொண்டாடியதும் எதிர்த்ததுமான கதை. மக்கள் ஒற்றுமையை பிரித்ததும் வளர்த்ததுமான கதை. சென்னையை உருவாக்கிய மக்கள் சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் கதை. பல்வேறு கருத்தோட்டங்களையும் போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கதை. மண்ணும் மக்களுமான சென்னையின் கதை.


50 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்களுடன் நாமக்கல் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

சென்னை மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், நாமக்கல்லில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும்.

 நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக சென்னையைச் சேர்ந்த மக்கள் வாசிப்பு இயக்கத்தினர் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்க உள்ளது.

மேலும் படிக்க...


சென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகம்

நடந்து முடிந்த சென்னை புத்தகக்காட்சியில் ஒரு பெரிய புத்தகம் அதிகம் விற்று சாதனை செய்துள்ளது. அப்படி அதிகம் விற்ற புத்தகம் எது தெரியுமா ? நடந்து முடிந்த சென்னை புத்தகக்காட்சியில் ஒரு பெரிய புத்தகம் அதிகம் விற்று சாதனை செய்துள்ளது. அப்படி அதிகம் விற்ற புத்தகம் எது தெரியுமா ? அதிகம் மட்டுமில்லை ஒரே புத்தகக்காட்சியில் இரண்டு பதிப்புகளும் விற்று சாதனை படைத்துள்ளது பெரியார்தான். ஆம் நண்பர்களே, விடியல் பதிப்பகத்திடம் இருந்து 'பெரியார் இன்றும் என்றும்' என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகம் அளவில் மிகப்பெரியது. 957 பக்கங்கள் கொண்ட இந்த பெரும் புத்தகத்தில் விலை 300 ரூபாய்தான். சமுதாயம், மதம், கலைகள், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் வகை பிரிக்கப்பட்டுள்ளது. வலுவான கெட்டி அட்டையுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தில் இருந்து சில குறிப்பிடத்தகுந்த வரிகள்....

மேலும் படிக்க...


சென்னை புத்தக கண்காட்சியில் இன்று…
பாரதி புத்தகாலயம்-"நம் காலத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ'-நூல் வெளியீட்டு விழா: ஆயிஷா இரா.நடராசன், உ.வாசுகி, நடிகர் நாசர், பாரதி கிருஷ்ணகுமார், அ.பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்பு; புத்தகக் காட்சி வளாகம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, பிற்பகல் 3. சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி: அரு. நாகப்பன், சரசுவதி நாகப்பன் குழுவினர்; டபிள்யு ஜே. சுரேஷ், சசிரேகா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்பு; புத்தகக் காட்சி வளாகம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 6.

தலைகுனிந்து புத்தகம் வாசிப்போம்… வாழ்வில் தலைநிமிர்ந்து நிற்போம்!

ஈரோட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 10-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக 10,000 பேர் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எல்லோரும் தொடர்ந்து கடைப்பிடிக்கவும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், 'மக்கள் சிந்தனைப் பேரவையின்’ சார்பில் இந்தப் புத்தகம் வாசிக்கும் விழா நடைபெற்றது. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகம், காவல் துறை கண்காணிப்பாளர் சிபிச்சக்ரவர்த்தி ஆகியோரும், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும், புத்தகப் பிரியர்களும், பல்வேறு பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும், முதல்வர்களும் என 5,000 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகம் படித்தனர்.

மேலும் படிக்க...


மதுரையில் புத்தக வெளியீடு
மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 30 சனிக்கிழமை அன்று மாலை மதுரையில் நடைபெற உள்ளது இடம் : நார்த்கேட் ஹோட்டல், மதுரை. (தமுக்கம் மைதானம் எதிரில்) நேரம் : மாலை ஆறுமணி நாள்  : 30.08.2014 1.  நீரிலும் நடக்கலாம் எனது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு, பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கியது 2.  காஃப்கா எழுதாத கடிதம் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ். போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு

ஈரோட்டில் தொடங்கியுள்ள புத்தகக் கண்காட்சி – வரலாறு, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட புத்தகங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
                ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, வாழ்க்கைத் தரம், அறிவியல், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான சி.டி.க்களும் இடம்பெற்றுள்ளன. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நாமக்கல்லில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

தேசிய புத்தகத் திருவிழா நாமக்கல்லில் திங்கள்கிழமை (ஆக.4) தொடங்குகிறது. இதில் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சத சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படும்.

மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து 29-ஆவது ஆண்டாக இந்தப் புத்தகத் திருவிழாவை நாமக்கல் குளக்கரை திடலில் நடத்துகின்றன.

அக்டோபர் 14-ஆம் தேதி வரை தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி தொடர்ந்து நடத்தப்படும் இந்தப் புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்க உள்ளார்.

முதல் விற்பனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் தொடங்கி வைக்கிறார்.


இதயம் என்னும் கோவிலைச் சுத்தம் செய்ய புத்தகங்கள் உதவுகின்றன! – இசைஞானி இளையராஜா
ஈரோடு: இதயம் என்னும் கோவிலைச் சுத்தம் செய்ய புத்தகங்கள் உதவுகின்றன என இசை அமைப்பாளர் இளையராஜா கூறினார். ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து இளையராஜா பேசியதாவது: கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டு வரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று இருக்கும் ஈரோடு நகரை அப்போது நான் கனவில் கூட சிந்தித்து பார்த்தது இல்லை. எனது சகோதர்களுடன் ஈரோடு நகரம் முழுவதும் பாடல் பாடி வந்திருக்கிறேன்.

மேலும் படிக்க...


10வது – ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 12 வரை
2014 ஆகஸ்ட் 1 முதல் 12 வரை நடைபெற உள்ள ஈரோடு புத்தகத் திருவிழா 2014ன் போது "எதிர் வெளியீடு" வெளியிட உள்ள புத்தக வெளியீடுகளின் பட்டியலை  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport