புத்தகங்கள்

நூல்களை வாங்குவதன் வாயிலாக எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும்: எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சு

 நூல்களை வாங்குவதன் வாயிலாக இன்றைய சமூகம் எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார் எழுத்தாளர் பிரபஞ்சன். இனிய நந்தவனம் பதிப்பகத்தின் வெளியீடான எஸ்.செல்வசுந்தரி எழுதிய “கை நழுவும் சொர்க்கம்” என்ற சிறுகதை, “உன்னை விட்டு விலகுவதில்லை” என்ற நாவல் ஆகியவற்றின் வெளியீட்டு விழா திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சிறுகதை யையும், எழுத்தாளர் பிரபஞ்சன் நாவலையும் வெளியிட்டனர்.

மேலும் படிக்க...


வற்றாநதி நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம் விழா

மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பான புத்தகங்கள் பார்க்க மட்டுமல்ல… வாசிக்கவும், நேசிக்கவும் தான்!
சென்னை : சென்னையில் 38வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை வந்து சென்று கொண்டிருக்கின்றனர். செல்போன், இணையம் என இடையில் பாதை மாறிப்போன பலர் மீண்டும் புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. இந்நேரத்தில் புத்தக வாசிப்பு பிரபல தலைவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என பார்ப்போமா...

மேலும் படிக்க...


அக்காவின் தோழிகள் கவிதை தொகுப்பு
நீரை. மகேந்திரன் எழுதிய அக்காவின் தோழிகள் கவிதை தொகுப்பு இன்று சென்னை புத்தக கண்காட்சி அகநாழிகை அரங்கு எண் 304 ல் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் வெளியிட எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றுக் கொண்டார்.

Kizhakku Pathippagam Chennai Book Fair – Top Ten list
சென்னை புத்தகக் கண்காட்சி - 2015 முதல் நாள் - 9.1.15 அன்று டாப் 10 விற்பனை: கிமு கிபி கிருஷ்ணதேவ ராயர் உலகை மாற்றிய புரட்சியாளர்கள் அள்ள அள்ள பணம் - டிரேடிங் அர்த்த சாஸ்திரம் சே குவேரா - வேண்டும் விடுதலை ஹிட்லர் நவீன இந்தியாவின் சிற்பிகள் சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ கருப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங்

”பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை!”
வட இந்திய பத்திரிகையாளர் Faraz Ahmed எழுதிய 'Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB?' புத்தகத்தில் இருந்து…, ''பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை!'' ''1989-ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கிடம் தோல்வியுற்ற ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலையில் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர்தான் அனுதாப அலை ஏற்பட்டது. அப்படியும் காங்கிரஸால் 240 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவரால் ஆட்சிக்கு நிச்சயமாக வந்திருக்க முடியாது. இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ கொலைக்கான காரணமாக வைத்தது, 'ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனக்கும் தன்னுடைய எல்.டி.டி.இ இயக்கத்தையும் அழித்துவிடுவார் என்று பிரபாகரன் பயந்தார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்’ என்பதுதான்.

மேலும் படிக்க...


தூத்துக்குடியில் ஒரு புத்தக வங்கி – ஏழைகளுக்கு இங்கே புத்தகங்கள் இலவசம்
ஒரு நாள் “புத்தகம் கேட்டு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. ஆனால், அத்தனை பேருக்கும் எங்களால் உதவ முடியவில்லை. முக்கியப் பிரமுகர்கள் இந்த நல்ல முயற்சிக்கு நிதி கொடுத்து உதவுவார்களேயானால் அதுவே எங்களது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்”. தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் சென்று கொண் டிருந்தபோது, அந்த பழமையான கட்டிடத்திலிருந்து மாணவிகள் புத்தகமும் கையுமாய் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். புத்தகக் கடை ஏதும் இருக்குமோ என்று எட்டிப் பார்த்தால், அங்கே 17 ஆண்டுகளாக புத்தக வங்கி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருப்பதைச் சொன்னார்கள். புத்தக வங்கியைத் தொடங்கிய பொன்னுசாமிக்கு இப்போது வயது 84. தூத்துக்குடி பகுதியில், புத்தகம் வாங்கிப் படிக்க வசதியில்லாத கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் புத்தக வங்கியில் இலவசமாக புத்தகங்களை வழங்குகிறார்கள். படிப்பு முடிந்ததும் அந்தப் புத்தகங்களை திரும்பப் பெற்று அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

மேலும் படிக்க...


பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு
சென்னை: சென்னையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்கள், விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது. சில்லரை கடைகளில், ஜூன், 2வது வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்கும், தற்பாது பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்களும், பெற்றோரும், ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்தனர். போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களும், பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், அல்லல்பட்டு வந்தனர். இந்நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து, பாடநூல் கழக அலுவலகத்தில், புத்தகங்கள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒன்று முதல், பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும், புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெற்றோர், நீண்ட வரிசையில் நின்று, புத்தகங்களை, வாங்கிச் செல்கின்றனர். எனினும், கடைகளில், இன்னும் புத்தகங்கள், விற்பனைக்கு வரவில்லை.

மேலும் படிக்க...


பாவேந்தம்
பாரதிக்கு சீனி.விசுவநாதனைப் போல், பாரதிதாசனுக்கு கோ.இளவழகன். தான் எழுதிய மொத்தக் கவிதைகளையும் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே அழகிய புத்தகமாக பார்க்க ஆசைப்பட்டனர் பாரதியும் பாரதிதாசனும். பாரதியின் கனவைச் சில ஆண்டுகளுக்கு முன், சீனி.விசுவநாதன் நிறைவேற்றினார். பாரதிதாசனின் விருப்பம் இப்போதுதான் நிறைவேறி​யுள்ளது. 'தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும்’-

மேலும் படிக்க...


வாசகன் பதிப்பக புதிய வெளியீடு – அன்பென்ற மழையிலே
                                            வாசகன் பதிப்பக புதிய வெளியீடு  அன்பென்ற மழையிலே… கவிஞர் நா. முனியசாமி  விலை ரூ. 35 -   “நா. முனியசாமியின் கவிதைகளில் இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லது சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் நம் தொகுப்பு நன்மை பயக்க வேண்டும் என்ற படபடப்பும் பட்டாம்பூச்சியாய் படபடக்கின்றன.  கவிதை வரிகளுக்கு பொருத்தமான புகைப்படங்கள் நூலை வாசிக்கத் தூண்டுகின்றன. மொத்த கவிதைகளும் உலகத்தை உயிரினத்தை நேசிக்கிறது. கவிஞரும் அந்த நேசிப்புக்கு தவிக்கிறார் என்பதும் ஊடாகத் தெரிகிறது.”  -    கவிஞர் ஆங்கரை பைரவி, வாசகன் பதிப்பகம் 11/96 சங்கிலி ஆசாரி நகர் சன்னியாசிகுண்டு சேலம் 636015


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91