செய்திகள்

தில்லி புத்தகக் கண்காட்சி ஆக.26 இல் தொடக்கம்

இந்திய வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனமும் (ஐடிபிஓ),  இந்திய பதிப்பக சம்மேளனமும் இணைந்து  நடத்தும் 23-ஆவது தில்லி புத்தகக் கண்காட்சி, பிரகதி மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐடிபிஓ உயரதிகாரி கூறியதாவது:  எழுத்து, புத்தகங்களின் வலிமையைப் பறைசாற்றும் பணியில் தில்லி புத்தகக் கண்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.  இந்தப் புத்தகக் கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிவுலக மேதைகள், நூலகர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.

குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன்,  பல்வேறு துறைகள் தொடர்புடைய இந்திய புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

"இந்தியா வாசிக்கிறது; இந்தியா வளர்கிறது' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதில், புத்தக விற்பனையாளர்-வாங்குவோர் சந்திப்பு,  புத்தக வெளியீடு,  புத்தக விவாதம்,  குழந்தைகளுக்கான இலக்கியச் செயல்பாடுகள்,  நூலாசிரியர்களுடனான சந்திப்பு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்றார் அவர்.


வாசிப்பதற்கு நவீன வசதிகள் வந்தாலும் புத்தகங்கள் தனித்துவமானவை: சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார் பேச்சு

வாசிப்பதற்கு எத்தனை நவீன வசதிகள் வந்தாலும் அச்சிட்ட தாளினாலான புத்தகங்கள் தனித்துவமானவை என்று திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார் பேசினார்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் மற்றும் பின்னல் புத்தக அறக்கட்டளை சார்பில் புத்தகங்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் புத்தகக் கண்காட்சி, திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க...


மலையாளம் கற்க புத்தகம் வெளியீடு

திருவனந்தபுரம்:கேரளாவில் வசிக்கும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மலையாளம் கற்கும் வகையில், 'ஹமாரி மலையாளம்' என்ற புத்தகத்தை, மாநில அரசு தயாரித்துள்ளது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், தமிழகம், மேற்கு வங்கம், பீஹார், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உட்பட, வெளிமாநிலங்களைச் சேர்ந்த, 25 லட்சம் பேர், தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், மலையாள மொழியை எளிதில் கற்கும் வகையில், 'ஹமாரி மலையாளம்' என்ற புத்தகத்தை மாநில அரசு தயாரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில், விரைவில் நடக்கவுள்ள விழாவில், இந்த புத்தகத்தை, மாநில கல்வித் துறை அமைச்சர், ரவீந்திரநாத் வெளியிட உள்ளார். இது குறித்து, எழுத்தறிவு இயக்க இயக்குனர், ஸ்ரீகலா நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''உள்ளூர் மக்களுடன், வெளிமாநில மக்கள், எளிதில் பேசி பழகும் வகையில், இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


பொன்மனச் செம்மலின் எம்.ஜி.ஆரின் பொன்விழா …..2017 புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு பொன்மனச் செம்மலின் எம்.ஜி.ஆரின் பொன்விழா 2017 எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ K.R. சோமா அரங்கில் நடைபெற இருக்கிறது*. மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மக்கள் திலகத்தை நினைவுகூறும் வகையில் இந்த கலை இரவை *எம்.ஜி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சேர்ந்த எம்.ஜி.ஆர் கலைமகள் திருமதி பூங்கொடி* *எம்.கே.யு. மலேசிய கலை உலகம்* குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த கலை நிகழ்ச்சியில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. எம்.ஜி.ஆர். சிறந்து விளங்கிய சிலம்பாட்டமும் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இவற்றுடன் சேர்ந்து ஒரு புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது. *எம்.ஜி.ஆர். தங்கராஜு, எம்.ஜி.ஆர் மதி ஆகியோரின் அபிநயம் நடைபெறுகிறது*. *ஏரா நடனக்குழுவினர் தங்கள் நடனத்தால் நம்மை மகிழ்விக்க இருக்கின்றனர்*. *பார்வையிழந்த பாடகர்களான திரு. நாகா, குமாரி காயத்ரி ஆகியோருடன் பாடகர்கள் TMS சிவகுரு, சென்னை TMS ராஜா, N.பாலா, ரமேஷ், ஷர்மிளா சிவகுரு, நளினா* ஆகியோரும் இணைந்து நம்மை இசை வெள்ளத்தில் ஆழ்த்த போகிறார்கள். நமது பாரம்பரிய கலையான சிலம்ப சாகச நிகழ்ச்சியை *மகாகுரு ஆறுமுகம் அவர்களின் புதல்வர் மகாகுரு அ.சிவகுமார்* அவர்களின் மாணவர்கள் மேடையில் நிகழ்த்த இருக்கின்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழகத்தை சார்ந்த பேராசிரியர் மற்றும் சினிமா வரலாற்று ஆராய்ச்சியாளர் உயர்திரு *வா. பாலகிருஷ்ணன்* அவர்கள் எழுதியிருக்கும் ”எம் ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்” என்ற புத்தக வெளியீடு நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து *திரு. வெங்கட் ராவ்* மற்றும் அவரது துணைவியார், பேராசிரியர் உயர்திரு . *வா. பாலகிருஷ்ணன்* அவர்கள் , பல நாடுகளில் பெரும்புகழ் பெற்ற *சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்* மற்றும் சென்னை லயன்ஸ் கிளப் *கவர்னர் டாக்டர். மணிலால்* ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் பிரதான அறிவிப்பாளர் *திரு. தமிழ் செல்வன்* கடந்த ஆண்டு MGR THE LEGEND 3, என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் கலைமகள் என்ற சிறப்புக்குரிய பட்டத்தினை *திருமதி பூங்கொடி* அவர்களுக்கு மதிப்புக்குரிய சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்வில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் சில கலைஞர்களுக்கு விருது வழங்க இருக்கிறார் இந்த நிகழ்ச்சியில் MALAYSIAN ASSOCIATION FOR THE BLIND சங்கத்திற்கு *நன்கொடையாக Rm 3,000* பார்வையற்றோர் முன்னேற்றத்திற்கு அந்த நிறுவனத்தின் உறுப்பினரிடம் மேடையினில் காசோலையாக வழங்கப்படும். பிரமாண்டமான அரங்க அமைப்பு ஒளி ஒலி ஏற்பாடு கண்கவர் கலை நிகழ்ச்சி என  எம் ஜி.ஆரின் 100 ம் ஆண்டு பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 , சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டாளர் பொன்கொடி தெரிவித்தார். திருமதி பூங்கொடியின் இரண்டாவது நிகழ்ச்சியான பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்ச்சி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாக அமையும்.

சிதம்பரத்தில் புத்தக கண்காட்சி

கிள்ளை : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையில் ஏராளமானோர் ஆர்வத்துடன் புத்தகங்களை தேர்வு செய்தனர்.சிதம்பரத்தில் ஆண்டுதோறும் அபிநயா புக்ஸ் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் 18ம் தேதி கீழவீதி கோதண்டரான் திருமண மண்டபத்தில் துவங்கியது.கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் வெளியிட்ட 5000 தலைப்புகளிலான சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதை, கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, தத்துவம், உளவியல், இலக்கணம், இலக்கியம், அறிவியியல், இயற்கை மருத்துவம், யோகா, சமையல் கலை, குழந்தைகளுக்கான கதைகள், ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களுடன், கல்வி தொடர்பான 'சிடி'க்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவை இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை தேர்வு செய்தனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 23ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.


ஈரோடு புத்தக திருவிழாவை முன்னிட்டு 60 புத்தகங்கள் வெளியீடு

ஈரோடு: புத்தக திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில், 60 வகையான பல்சுவை புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஈரோட்டில் புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி நூல்கள் வெளியிடும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது.அழிவின் விளிம்பில் அந்தமான், பனை விடிலி, சிறகின் நிழல், விடுதலை வேள்வியில் மதுரை, அறிவியல் விருந்து, நண்டு சொன்ன நகைச்சுவை கதைகள், ஒளியாய் இருக்க வருவாயாக, பளிச்சினு பற்களுக்கு ஒரு மாற்றம், கடல் அடி, பசுமை அரசியல், சுற்றுச்சூழல் பயில்வுகள், வாடகைத் தொட்டில், மறைத்துப் பேச என்ன இருக்கு, யாதும் ஊரே யாவரும் கேளீர், என்பன உள்ளிட்ட, 60 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு வெளியிட்டார். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் பெற்றுக் கொண்டார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி : மாணவ-மாணவிகள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்
ஈரோடில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட திரளான மாணவ-மாணவிகள், புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஈரோடு வ.உ.சி. மைதானத்தில், 13-வது புத்தக கண்காட்சி, கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 230 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...


காரைக்காலில் காரைத் தமிழ்ப் பேரவை சார்பில் புத்தக வெளியீடு

காரைக்காலில் காரைத் தமிழ்ப் பேரவை சார்பில் புத்தக வெளியீடு மற்றும் இலக்கியப் பேருரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் காரைத் தமிழ்ப் பேரவையின் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. பேரவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமை வகித்தார். புலவர் திருமேனி நாகராசன் தொடக்கவுரையாற்றினார். வாணியம்பாடி பேராசிரியர் தி.மு. அப்துல்காதர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, "விழித்தால் விடியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் படிக்க...


ஈரோடு வ.உ.சி மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தொடங்கிய புத்தக கண்காட்சி திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை

ஈரோடு வ.உ.சி மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தொடங்கிய புத்தக கண்காட்சி திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...


புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா: தேசிய சுகாதாரக் குழும இயக்குநர் வலியுறுத்தல்

சென்னை புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. விழாவில், சுகாதாரக் குழும இயக்குநர் தரேஷ் அகமது, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், அசோகன் செருவில், சிறந்த நாவலுக்கான விருது பெற்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன், புத்தகத் திருவிழா அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம், எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மேலும் படிக்க...Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport