தீக்கதிர்

மதுரையின் வரலாறு – மதுரை அரசியல்

மதுரையின் மூத்த பத்திரிகையாளர்களில் முதன்மையானவர் இந்நூலாசிரியர் ப.திருமலை. மார்க்சிய சிந்தனை சான்றிதழ் படிப்பு முடித்தவர். வழக்கறிஞர். பல்வேறு நாளிதழ், வார இதழ்களில் பணியாற்றியவர். தற்பொழுதும் தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதி வருபவர். அந்திமழை என்ற மாதம் இருமுறைவரும் இதழில் மதுரையைப் பற்றிய வரலாறுகளை தொடராக எழுதிய கட்டுரைகளை தற்பொழுது சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க...


ஏவுகணை மனிதன்

“இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது” என்று தாம் கூறிய வார்த்தைகளால் வாழ்ந்து காட்டியவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.இவரின் வாழ்க்கை வரலாற்றையும், கவிதைகளையும் எளிய நடையில் சுருக்கமாக “ ஏவுகணை மனிதன்” எனும் தலைப்பில் நூலாக தொகுத்து வழங்கியுள்ளார் ஞா. சந்திரன்.

மேலும் படிக்க...


ஒடுக்கப்பட்டோர் வரலாறும் எழும் கேள்விகளும்

பறையர் சமூகத்தின் நூறாண்டு போராட்ட வரலாறு இந்நூலில் அலசப்படுகிறது ; அந்த நிகழ்வுப் போக்கினூடே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பல முகங்களும் பல தளைகளும் தடைகளும் நமக்கு இனம் காட்டப்படுகிறது.அதே நேரம் மேலும் பல கேள்விகள் வெடித்துக் கிளம்புகிறது .

இந்நூல் அடிப்படையில் ஒரு ஆய்வு நூல். 2004ல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் ராஜ் சேகர் பாசு சமர்ப்பித்த “ இரண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூக கலாச்சார மாற்றம் : தென் இந்தியாவின் பறையர் புலையர் வரலாறு 1850 -1956” என்ற ஆய்வின் திருத்தப்பட்ட வடிவமே இந்நூல். ஆய்வுப் புலம் சார்ந்த இறுக்கமான மொழி நடையிலான ஆய்வினை நுட்பமாய் அலுப்பு தட்டாத ஆற்றொழுக்கு நடையில் மொழியாக்கிய அ.குமரேசனுக்குப் பாராட்டுகள்.

மேலும் படிக்க...


பெண்களுக்கான சுயமரியாதையை துலக்கப்படுத்தும் கதைகள்

நூற்றி எழுபத்தெட்டுப் பக்கம் , பதினெட்டுக் கதைகள் இந்தப் புழுதிச்சூடு சிறுகதைத் தொகுப்பில் இருக்கின்றன. தேனி மாவட்டம் சார்ந்த பல கதைகள் வாசித்த எனக்கு, இந்த தொகுப்பின் மொழி மிகவும் இயல்பாக அசலான மொழியை வாசித்த பரவசம் தந்தது. கதைகள் ஒவ்வொன்றும் தேனி மாவட்ட அனுபவங்களின் பல்வேறு அடுக்குகளிலிருந்து சொல்லப்பட்டதாக உணர முடிகின்றது. காடு கழனிகளை ஆண்டு அனுபவித்த சிறீகாமூலம்மாளின் மரணசம்பவம் கதை, இதுவரை சொல்லப்பட்ட சொல்முறையிலிருந்து நம்மை ,வேறொரு நவீன வாசிப்புத்தளத்திற்கு கொண்டு சென்று , அந்த ஊர்மக்கள் போலவே புலம்பச் செய்கிறது. பெரியம்மா வீட்டிற்கு வந்த சிறுமி சாந்தி , அடிக்கொருதரம் தண்ணீர் குடிப்பதைப் பார்த்துவிட்ட பெரியம்மா, சாந்தி சொன்ன பதிலில் அதிர்ந்து போவதை நமக்கு கடத்துகிறது விருந்தாடி கதைஇன்னொரு சாந்தி நிரூபணம் கதையில் வருகிறாள். ஓட்டல் தொழில் செய்யும் பெரியகுளம் செல்லப்பா அந்தக் கட்சி என்று பளிச்சென்று கதை சொல்லி விடுகிறது.

மேலும் படிக்க...


அன்பால் வென்றவர் – நினைவில் நின்றவை
அரசுப் பணியில் சேர்ந்தால் உழைக்காமல் மாதாமாதம் சம்பளம். தினமும் கை நிறைய கிம்பளம். மாட மாளிகைகள், சொகுசுகார்கள், தங்கம், வெள்ளி நகை இவைகள் கிலோ கணக்கில் சேர்க்கலாம். அசையா சொத்துக்களை குவிக்கலாம் என்பவர்களுக்கு மத்தியில், இப்படியும் ஒருவர்!…. “தண்ணீர் தண்ணீர்” திரைப்படத்தில் வருவதைப்போன்ற கரிசல் கிராமம் ஒன்றில் பிறந்து 36 ஆண்டு கால அரசுப் பணியில் 16 வருடம் பதவி உயர்வே இல்லாமல் உழைத்து பணி ஓய்வு பெற்றும் தனது அறிவுப் பசிக்கும், சமூகப் பணிக்கும் ஓய்வு கொடுக்காமல் ஊடகம், வானொலி என தனது பங்கைச் செலுத்தி வருபவர் சிவகாமிநாதன்.

மேலும் படிக்க...


தலித் அமுதம் – ஆசிரியர் மாணவர் கையேடு
தலித் அமுதம் - ஆசிரியர் மாணவர் கையேடு - தொகுப்பாசிரியர் பணி ஜான்சுரேஷ் வெளியீடு ஆதி, மனித மேம்பாட் டிற்கான கல்வி அறக்கட்டளை, ஓம் சக்திநகர், சரவம்பாக்கம், சித்தாமூர் 603313, காஞ்சிமாவட்டம், பக். 98, விலை ரூ.80/- தலித் அறிமுகம், தலித் வரலாறு, தலித் பண்பாடு, தலித் சமயங்கள், தலித் தலைவர்கள், அம்பேத்கார் வரலாறு, பழங்குடியினர் அறிமுகம், அரவாணிகள் அறிமுகம், தலித் கிறிஸ் தவர்கள் என 9 கட் டுரைகளின் தொகுப்பு ``தலித் நன்னெறிக் கல்விக்கான கையேடு’’ என்ற அடை மொழியுடன் வெளிவந்துள்ளது. தமிழக அரசால் 2007 ஆம் ஆண்டு சிறந்த தலித் படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்நூல் தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் கலை இலக்கிய பணிக்கான அமைப்பின் நிதி உதவிபெற்று வெளியிடப் பெற்றுள்ளது.

உலகைக் குலுக்கிய இரு நண்பர்கள்
உலகைக் குலுக்கிய இரு நண்பர்கள், ஆசிரியர் அறந்தை நாராயணன், நியூ செஞ் சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென் னை 600 098, பக். 96, விலை ரூ.25/- காரல்மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் நட்பு காவிய நட்பு, அறிவியல் நட்பு, தத்துவ நட்பு, அந்த நட்பால் உலகம் அடைந்த பயன் அளவிற்கடங்கா. இருவரின் வாழ்க்கையில் சில தெறிப்புகள், சிந்தனைகள், கம்யூனிஸ்ட் அறிக்கை இதைப் பற்றியெல்லாம் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அறந்தை நாராயணன் ஜனசக்தியில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு, அவருக்கே உரிய எரிமலை நடையும், உள்ளடக்கத்தின் கனமும் இன்றைக்கும் இளைஞர்களை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் நாடா? `டமில் நடு’ வா?
தமிழ் நாடா? `டமில் நடு’ வா?, ஆசிரியர் அருணகிரி, மங்கையர்கரசி பதிப்பகம், 20, வடகாசி அம்மன் கோவில் தெரு, சங்கரன் கோவில் 627 756, திருநெல்வேலி மாவட்டம், பக்.100, விலை ரூ.20/- தமிழை நேராக அச்சிடுங்கள், ஆங்கிலத்தில் `தமிழ்நாடு’ என்பதை சரியாக எழுதுவது எப்படி? இரண்டு விரல்களால் எழுதுவதை நிறுத்துங்கள் பத்து விரல்களால் எழுதுங்கள், தமிழை முழுமையாக எழுதுங்கள் எளிய நடையில் எழுதுங்கள், மொழியைச் சிதைக்காதீர், பெயர்களை மொழி பெயர்க்காதீர்கள்... மேலும் தமிழ் வளர... தமிழர் உயர்நிலை பெற.. என்ன செய்ய வேண்டும் என்ற ஆசிரியரின் சிந்தனைத் தொகுப்பே இந்நூல். படிக்க பரிசீலிக்க பல கருத்துகள் இதில் உண்டு.

லெனினுடன் சில நாட்கள்
``லெனினுடன் சில நாட்கள்’’ - மாக்ஸிம் கார்க்கி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. பக்கங்கள் 100 விலை ரூ.50.00 லெனின், மாக்ஸிம் கார்க்கி இந்த இரு பெயர்களையும் உச்சரிக்காமல் ரஷ்யப் புரட்சி இல்லை. ஒருவர் வழிகாட்டிய தலைவர். இன்னொருவர் இலக்கியத்தை புரட்சிக்கான ஆயுத மாக்கியவர். இருவரும் புரட்சியின் பிள்ளைகள். இருவரும் படைத்தது ரஷ்யப் புரட்சி. இதில் மாக்ஸிம் கார்க்கி தன் சொந்த அனுபவ நினைவறைகளில் இருந்து லெனின் குறித்து வரைந்து காட்டும் சித்திரம் மற்றெதையும் விட லெனினை நம்மருகே கொண்டு வந்து நிறுத்துகிறது. கட்டுக் குட்டையான வைரம் பாய்ந்த சரீரத்துடன் வழுக்கைத் தலை மனிதர் லெனின் ராகங்களை தொண்டைக் குழியில் உருட்டிப் பேசி தம் பிரகாசமான விழிகளால் நம்மையே பார்ப்பது போன்ற யதார்த்தமான சித்தரிப்பு இந்நூல்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்
``சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்’’ சு.பொ. அகத்தியலிங்கம்,  பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. பக் கங்கள் 36 விலை ரூ. 10/- தீக்கதிரில் தொடராக வந்தது. சில திருத்தங்களுடன் நூல் வடிவம் பெற்றுள்ளது. சிங்கார வேலர் விதைத்த சிந்தனைகளை பயிலவும், முன்னெடுத்துச் செல்லவும் புதிய தலைமுறையை தூண்டிவிட செய்யப்பட்ட எளிய முயற்சி இது. மார்க்சியத்தை ஒரு உயிர் துடிப்புள்ள சமூக அறிவியலாகப் பார்த்தவர். மார்க்சியம் வெறும் பொருளாதாரப் போராட்டத்தின் சித்தாந்தம் எனும் சிந்தனையிலிருந்து விடுபட்டு விஞ்ஞானம் கற்றறிந்த வாழ்க்கைப் போராட்டமாக ஏற்றம் பெற; இம்மண்ணுக்கு ஏற்ப மார்க்சியத்தை பிசைந்து தர சிங்கார வேலர் சிந்தனை எப்படி உதவியாக, ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதை சுருக்கமாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்நூல்.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91