புத்தக விமர்சனம்

சாய்வு நாற்காலி
தமிழில் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தோப்பில் முஹம்மது மீரானின் இந்த நாவல், 1997ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது.

வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக்கட்டுரைகளின் சிறப்பு.

பறவையின் வாசனை
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றிய போது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மிகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்தில் கவனத்தைப் பெற்றது. பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும் பலவித முகங்கள் அவரது கதைகளில் துளித்துளியாக நிறைந்துள்ளன. அதிலொன்று பணிவு. அடுத்தது கருணை. வேறொன்று துயரம். மற்றது விலைமகளுக்கானது. இசை, காதல், அன்பு ஆகியவற்றை ஸ்பரிசிக்கப்படாத அனுபவமாக வழங்கும் இக்கதைகள் வாசக மனதை களங்கமின்மையால் நிர்வாணப்படுத்துகின்றன. நவீன காலகட்டத்தின் ஆண்-பெண் உறவில் கலந்த முரண்களின் விவரிப்புகளே இவரின் கதைகள்.

சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்பூசியசின் சீன தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூல். மனித உறவுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூஷியஸ்.கணவன் -மனைவி,அண்ணன் –தம்பி,தந்தை –மகன், அரசன் –குடிமக்கள், நண்பர்கள்,என்ற ஐந்து உறவுகளின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் அளித்த விளக்கத்தால்தான் கூட்டுக்குடும்ப முறையானது இன்று வரையிலும் சீனாவில் சிதறமால் இருக்கிறது.கன்பூசியசின் அரிய சிந்தனைகளைப் பற்றி எளிமையாக புரிந்துகொள்ளவதற்கு வசதியாக இந்தப் புத்தகத்தை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.நீங்கள் அதைப் படியுங்கள்... பயனடையுங்கள்..

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு. தான் இருக்கும் சூழலையே ஒட்டுமொத்தமாக நகைச்சுவை வெள்ளத்தில் தோய்த்தெடுக்கிற குணாதிசயம் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றவர் மதன். ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணையாசிரியராக அவர் பொறுப்பு??வகித்தபோது,??அவரிடமிருந்து??வெளிப்பட்ட பன்முகத் திறமைகள் என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வியப்புக்குள்ளாக்கும். அப்படித்தான் வந்தார்கள்... வென்றார்கள் மூலம் தேர்ந்த சரித்திர ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி என் வியப்பைக் கூட்டினார் மதன். ஜூ.வி|யில் எழுதிய அந்தத் தொடரின் மூலம், கடந்த காலத்தின் பரிமாணத்தை சுவைபட படம் பிடித்துக் காட்டும் தேர்ந்த எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர், மனிதனின் மூளைக்குள் மனவியல் ரீதியாக புகுந்து பார்த்து எழுதிய இன்னொரு தொடர்தான் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!

உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்
எதுவெல்லாம் இனப்படுகொலை ? ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது. குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாக விடாமல் தடுப்பது ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவதுகுறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை குறைத்து, வாழும் இடத்தை விட்டு அகற்றுவது ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த சுவடே தெரியாமல் அழிப்பது போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி, போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது. - பதைபதைக்க செய்யும் ஒரு வரலாற்றை, அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல்

இந்திய உளவுத்துறை RAW
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing) ரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டனி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா. ரா அமைப்பின் வெற்றி - தோல்வி மற்றும் சறுக்கல்களுக்கான பதறவைக்கும் உண்மைகளை உளவுப் பின்னனியில் விளக்குவதுடன், ரா அமைப்பின் முழு வீச்சையும் எளிமையான மொழியில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் குகன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. தேவரைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. தேவர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் இருப்பதில்லை. எப்பாடுபட்டாவது தேவர் குருபூஜையில் கலந்து கொண்டுவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் ? ** அரசியலுக்கு அடியெடுத்து வைத்த நாள் தொடங்கி காங்கிரஸ் கட்சியை நேசித்து, சுவாசித்து  வளர்ந்த தேவர், அந்தக் கட்சிக்கே சிம்ம சொப்பனமாக மாறியது தமிழக அரசியல் வரலாற்றுத் திருப்புமுனைகளுள் முக்கியமானது. இது எப்படி நடந்தது ? ** காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள், நேதாஜியுடனான நட்பு, ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து, நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.

கலைஞரின் நினைவலைகள் 100
கலைஞர் அவர்கள் மேடை பேச்சு, பத்திரிகைக்கு பேட்டி , அவரது திரைப்பட குறிப்புகள், அவரது நகைச்சுவை நயம் என்று 100 தகவல்களை தொகுத்து நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரஹாரம் குஜராத்தி மொழிக்கு சிறப்பு சேர்த்த பக்திக் காவியம்
சந்திரஹாரம் குஜராத்தி மொழிக்கு சிறப்பு சேர்த்த பக்திக் காவியம் ஸ்ரீ மத் பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீ வேதவியாஸர், அஷ்டாவாக்கிரர், யாக்ஞவல்கியர் போன்ற மகா ரிஷிகளின் உபதேச மஞ்சரியை விரித்துக்கூறும் ஞானக் களஞ்சியம்!


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport