புத்தக விமர்சனம்

இடதுகால் நுழைவு

விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள்பற்றிய மௌனம், மறதிபற்றிய தொடர்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அமைப்பின் அடிப்படைச்சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன தலித்பெண்ணியத்தை விளக்கும் இக்கட்டுரைகள். அதன் அடுத்தகட்டமாக மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விரிவான புள்ளிவிவரங்களுடன் முன்வைக்கின்றன. உலகஅளவிலான பெண்ணிய உரையாடல்களையும், விவாதங்களையும் கணக்கில்கொண்டாலும் இந்தியப் பெண்உடல்- பெண்மனம் என்பதில் மையம் கொண்டு தன்கருத்தாக்க முறையை அமைத்துக்கொள்வதால் இக்கட்டுரைகள் ஒரேசமயத்தில் அரசியல் சொல்லாடலாகவும் அரசியல் செயல்பாடாகவும் வடிவம் பெற்றுவிடுகின்றன.


குலாப்

 பதினைந்து ஆண்டுகளுக்குமுன் கல்லூரி மலரில் ஸ்மிருதி ஒருகதை எழுதினாள். இறந்துபோன பெண்ணைக் காதலிக்கும் சில ஆண்கள் முதல்முறையாக நேருக்குநேர் சந்தித்துக்கொள்வது பற்றியது அந்தக்கதை. கதையின் தலைப்பு ஸ்மிருதிக்குக் கூட மறந்துவிட்டது, ஆனால் அந்தக்கதையின் மையப்புள்ளி மட்டும் என்நினைவில் பதிந்துவிட்டது. ஒரு பெண்ணுக்குப் பல காதலர்கள் என்ற அந்தக்கதை பற்றி நான் யோசித்துப் பார்ப்பதுண்டு, குலாப் எழுத அதுதான் என்னைத் தூண்டியது.


ஊதாநிறச் செம்பருத்தி

சிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், மரபுகள், தொன்மங்கள், மொழிகள் என அனைத்திற்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தைச் சொல்லிச் செல்கிறது. இடம் மறுக்கப்பட்ட இடத்தில் தனக்கான இடத்தை உருவாக்கும் செயல்பாடுதான் பெண்ணியச்செயல்பாடு எனில் அது எதிர்காலம் பற்றியதாக மட்டுமின்றி, இதுவரையான காலங்களையும் தன்வயப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. வரலாற்றுக் கதையாடல்களைப் பெண்மொழியில் மறுஆக்கம் செய்வதிலிருந்து எதிர்க்கதையாடல்களைப் பெண்ணெழுத்தில் பெருக்குவதுவரை அனைத்தையும் பெண்ணிலையாக்கம் செய்வது பற்றிய ஒரு திட்டத்தை சிமாமந்தா தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

பின்காலனிய கதையாடலைப் பெண்ணிய இயங்கியலுடன் இணைப்பதன் வழியாக வெள்ளைமைய உலகையும் ஆண்மைய உலகையும் ஒருசேர சிதைவாக்கம் செய்யும் ஆற்றலைப் பெருகின்றது சிமாமந்தாவின் கதைமொழி.

சிமாமந்தா பெண்ணியத்தின் ஒரு முக்கியபகுதியான கருப்பினப் பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பவர். அதனால் இந்திய-தமிழ்பெண்ணியத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பொருந்தக்கூடிய கதைமொழியைக் கொண்டவர்.

விலை:  250


நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்கவேண்டும்

சிமாமந்தா எங்கோசி அடிச்சி

தமிழில் : பிரேம்

பெண்ணியம் என்பது மனிதஉரிமையின் ஒருபகுதி என்பது உண்மைதான்.ஆனால்  ‘மனிதஉரிமைகள்’ என்ற பொது அடையாளத்தைப் பயன்படுத்தும்போது பாலரசியின் மிகக்குறிப்பான, தனித்த சிக்கல்களை அது இல்லாமாலாக்கிவிடுகிறது. பெண்கள் என்ற உண்மையை மறந்துவிட்டுச் செல்வதற்கான ஒரு பாசாங்கான தந்திரமாகத்தான் அது இருக்கும்.


சோளகர் தொட்டி

ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி,யூ,சி,எல். அமைப்பில் செயல்படுபவர், வழக்குரைஞர். கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர்.  ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பிணைப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.


இது மோடியின் காலம்

இந்தியாவின் வரலாறும் ஜனநாயகமும் தலைகீழாகக் கவிழ்க்கப்படும் காலகட்டம் இது. மோடி பதவியேற்ற பிறகு இந்தியாவில் சர்ச்சைகள் வெடிக்காத நாளே இல்லை.சமஸ்கிருதமயமாதல், கீதை தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை, நேருவின் இடத்தை அழித்து அங்கே படேலின் பிம்பத்தை நிறுவுவது, வேதகாலக் கற்பனைகளை அறிவியல் உண்மைகளாகப் பேசுவது, மதமாற்றம் என வரலாற்று, பண்பாட்டுத் தளங்களில் நடக்கும் தாக்குதல்கள் ஒரு புறம், இன்னொருபுறம் இன்று அதிகாரத்திலிருக்கும் சக்திகள் தங்களது கடந்தகாலக் குற்ற நிழல்களை அந்த அதிகாரத்திதைப் பயன்படுத்தி மறைக்க எடுக்கும் முயற்சிகள். அ.மார்க்ஸின் இந்த நூல் இப்பிரச்சினைகளை மிகநுட்பமாக ஆராய்கிறது. இன்று கட்டமைக்கப்படும் இந்துத்வா பெரும்பான்மைவாத அரசியலின் செயல்பாடுகளையும் நோக்கங்களையும் அம்பலப்படுத்துகிறது. அந்த வகையில் இது மிகவும் சமகாலத் தன்மை வாய்ந்தது.


ஆயுத வியாபாரத்தின் அரசியல்

“நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா? ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில் மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்ட மிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில் நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்றவை இவ்வாயுதங்கள். இதுவெல்லாம் யாருக்கு? ‘எதிர்கால ஆயுதங்கள்’ எதிரிகளின் கற்பனைக்கப்பாற்பட்ட மறைவிடத்தையும், இலக்கையும் கனகச்சிதமாக அடித்துத் தூள் தூளாக்கும் திறன் கொண்டவை. போரில் எவராலும் வெல்லமுடியாதவை... என்ற அருமை பெருமைகள் வழிந்தோடிக் கொண்டிருந்தன. அப்படியானால் இவர்கள் சொல்லும் ‘எதிரி’ என்பவர் யார்? இந்த அருமை பெருமை கொண்ட ஆயுதத்தை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்னும்போது இவர்கள்சொல்லும் எதிரிகள் என்கிற படிமம், இந்த ஆயுதம் இல்லாதவன்தான் என்றாகிறது.


அற்ற குளத்து அற்புத மீன்கள்

அரசியல், விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீமானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழமையானதோ அந்த அளவுக்கு உண்மையானது. இந்த எளிய உண்மையின் மீது கொண்ட கரிசனங்களே இக்கட்டுரைகள்.


அர்த்தசாஸ்திரம்
தாமஸ் ஆர். டிரவுட்மன் எழுதிய "Arthashastra: The Science of Wealth" நூலின் தகிழாக்கம். தமிழில்: எஸ். கிருஷ்ணன் அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் அரசியல், பொருளாதாரக் கையேடு. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விரிவாக விவாதிக்கும் இந்தப் பண்டைய ஆவணத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளைப் பிரித் தெடுத்து அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இன்றைய வர்த்தக உலகம் தெரிந்துகொள்ளவேண்டிய ஆச்சரிய மூட்டும் உண்மைகள் பல இதில் உள்ளன. உதாரணத்துக்கு: * சந்தையை எப்படி நிர்வகிக்கவேண்டும்? வர்த்தகம் எப்படி நடத்தப்படவேண்டும்? * வியாபாரிகளுக்கு இடையில் தோன்றும் போட்டிகளை எப்படிச் சமாளிக்கவேண்டும்? * விலையேற்றத்தைச் சமாளிப்பது எப்படி? இழப்புகளைத் தவிர்ப்பது எப்படி? * அரசுக்கும் தனியார்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது? * ஓர் ஆட்சியாளரின் கடமைகள் என்னென்ன? எது நல்ல ஆட்சி? இப்படி அர்த்தசாஸ்திரம் விவாதிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல், ஆட்சி நிர்வாக அம்சமும் இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு ஒரு நாட்டையும் அதன் முதுகெலும்பாகத் திகழும் வர்த்தகத்தையும் எப்படி நிர்வகிக்கவேண்டும் என்பதை விரிவாகவும் நுணுக்கமாகவும் அலசி ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரம் ஏன் இன்றும் நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பதற்கான காரணம் இதுதான். செல்வத்தின் அறிவியல் என்று புகழப்படும் அர்த்தசாஸ்திரம் குறித்த மிக எளிமையான அற்புதமான அறிமுகத்தை இந்நூலில் வழங்கியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன். இந்திய வர்த்தக வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஓர் அத்தியாவசியத் தொடக்க நூல்.

அதிகாரத்தின் வாசனை

கண்ணன் பத்திகளாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதியவைடே இந்நூலின் உள்ளடக்கம். 2005 முதல் 2011 வரையான காலப் பகுதியில் உலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளின் ஆதாரமான பண்புகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல். ஆராசா வேட்டையாடப்படுவது அவர் தலித் என்பதனால் என்பது ஒரு தற்காப்புவாதம். ராசாவை ஊழலுக்குத் தூண்டி விட்டு அவரது சாதி அடையாளத்தைச் சுரண்டி ஆதாயங்கள் கொய்யப்படுகின்றன என்பது இந்நூலிலுள்ள புலனாய்வுக் குறிப்பு.Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport