புத்தக விமர்சனம்

ஒரு அமர கதை
எம்.குமார் தமிழில்: குளச்சல் மு.யூசுப் வெளியீடு: தென்திசை பதிப்பகம், 52. தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை-17. பக்கம்: 256 விலை ரூ.140 மலையாளத்தின் மிகவும் புகழ்பெற்ற எம்.குமாரின் 'ஒரு அமர கதை' தமிழில் வெளிவந்திருக்கிறது. நுட்பமான அழகு உணர்வுகளைத் தூண்டச் செய்து, இதுவரை நாம் அவ்வளவாகப் பயணித்தறியாத எல்லைக்கு இழுத்துச் செல்கிறது. ஆன்மிக மரபில் கதை நகர்ந்து, வேறு தளத்துக்கு இட்டுச் செல்வதால், இந்த மொழிபெயர்ப்பு மிகவும் அவ சியமாகிறது. தத்துவ மரபுகளில் ஈடுபாடுகொண்ட எம்.குமாரின் பார்வைகள் மறுவாசிப்பைத் தூண்டுகின்றன. நிதானமாக உள் வாங்கிகொண்டு, மொழிபெயர்ப்பை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார் குளச்சல் மு.யூசுப். தேர்ந்த வாசகர் களுக்கான புத்தகம்!

நன்றி : ஆனந்த விகடன்


ஒரு சாமான்ய மணியனின் கதை
'ஜெமினி கேன்டீன்' ஏ.என்.எஸ்.மணியன் வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. பக்கம்: 216 விலை ரூ.70 சாமான்ய மணியனின் கதை, ஒரு சாமான்ய மனிதனின் கதை. 'ஜெமினி கேன்டீன்' என்ற ஒரே புத்தகத்தில், சினிமா சரித்திரத்தைச் சொல்ல முடிந்த மணியனால், தன் வாழ்க் கையைத் திருப்பங்களின் விளைவோடு சொல்ல முடிவதில் வியப்பில்லை. 'எல்லோரிடமும் ஒரு கதையாவது இருக்கிறது' என்பார் சுஜாதா. ஆனால், இந்த நூலில் ஒரு பெரிய வாழ்க்கையின் வெளிப்பாடே இருக்கிறது என்பது புரிபடுகிறது. சரளமான நடையில் ஜொலிக்கிறார் மணியன். ஆசையுடன் படிக்கலாம்! நன்றி : ஆனந்த விகடன்

ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
தொகுப்பு: இரா.பாவேந்தன் வெளியீடு: சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57, 53-வது தெரு, அசோக் நகர், சென்னை-83. பக்கம்: 304 விலை ரூ.150 தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களால் வெளியிடப்பட்ட மாத இதழான ஆதி திராவிடனின் தொகுப்பு இந்நூல். மிகவும் பேசப்பட்ட இதழான ஆதி திராவிடன் ஏற்படுத்திய பரபரப்பை இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவைக்க வேண்டிய பொறுப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் விடுதலை, சாதி மறுப்பு என கருத்தாக்கம் நிறைந்த கட்டுரைகள். பெண்கள் முன்னேற்றம் குறித்த பாவனை இல்லாத வீரியமான கருத்துக்கள் நிறைந்த கட்டுரை இவ்விதழ்களின் சிறப்பாக அமைந்திருக்கிறது. இதழ்களின் முக்கியப் பங்காக சமயம் குறித்த கட்டுரைகள் இருக்கின்றன. மிகவும் தேவையான தருணத்தில் வெளிவந்திருப்பதால், ஆவணமாகவும். நன்றி : ஆனந்த விகடன்

மாய விளக்கு
இங்மர் பெர்க்மன்- தமிழில்: உமர் வெளியீடு: நிழல், 31/48, ராணி அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. பக்கம்: 232, விலை: ரூ.150 ஐரோப்பிய சினிமாவின் செழுமைக்கு இங்மர் பெர்க்மனின் பங்கு கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பிட்ட காலகட்டத்தில் திரைப்படப் பிரியர்கள் அனைவரையும் தன் படங்களால் வசீகரித்துக்கொண்டே இருந்தார். அவரின் புகழ்பெற்ற சுய சரிதைதான் தமிழில் மாய விளக்காகி இருக்கிறது. ஆகச்சிறந்த கலைஞனின் வாழ்க்கையை அவரது வார்த்தைகளிலேயே கேட்பது நல்ல அனுபவம். சினிமா ஆர்வலர்கள் மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஆழம் தெரியப் புறப்படும் அனைவருக்குமான புத்தகம்! நன்றி : ஆனந்த விகடன்

அரைக் கம்பத்தில் தொப்புள் கொடிஅரைக் கம்பத்தில் தொப்புள் கொடி
தொகுப்பு: அறிவுமதி வெளியீடு: சாரல், 189, அபிபுல்லா சாலை, தி.நகர், சென்னை - 17. பக்கம்: 240 விலை ரூ.160 ஈழத்தில் அழித்தொழிக்கப்படும் நம் தமிழ் இனத்தின் இழப்பைத் தாங்க முடியாமல் குமுறும் இதயங்களின் துடி துடிப்பு இந்தக் கவி தைகள். மனசைப் பிசைந்து, இதயத்தின் ஆழம் வரை வேரோடி, உயிர் உருவும் கவி தைகள். மனதை ஆற்றுப்படுத்த முடி யாமல் படிக்கும்போது தவிக்கப்போவது நிச்சயம். பரிவும், கோபமும், ஆற்றாமையும் கொண்டு கவிஞர்கள் கண்ணீர்க் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத புத்தகம். படிக்க நேர்ந்தால், தமிழ் இன உணர்வை ஆறுதலோடு பகிர்ந்துகொள்ளலாம்! நன்றி : ஆனந்த விகடன்

உலகின் அழகிய முதல் பெண்
- லீனா மணிமேகலை வெளியீடு: கனவுப் பட்டறை, 3, பிரகதாம்பாள் தெரு, சென்னை-34. பக்கம்: 88 விலை ரூ. 70 பெண்களின் உடல்மொழி அபூர்வமாக வெளிவந்திருக்கிற கவிதைகள். பெண்கள், தங்கள் கவிதைகளின் பாடுபொருளில் இன்னும் இன்னும் திசைகள் திறக்கிறார்கள். நிச்சயம் அதிர்ச்சி மதிப்பைத் தர வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்டவை அல்ல என்பது லீனாவின் தீவிரமான கவிதை மொழியில் தெரிய வருகிறது. மிகுந்த கவனத்துடனும், பக்குவத்துடனும் எழுதப்பட்ட கவிதைகள். எல்லா வகையிலும் பெண்களின் சிந்தனைகள் ஆவேசத்துடன் முன்னெடுத்துச் சொல்லப்படுகிற போக்கை இந்தக் கவிதைகளில் காண முடிகிறது. பெண்ணின் கவிதை மொழியில், சிந்தனையில் புது ரத்தம் பாய்ச்சும் தன்மையை மெச்சலாம்! நன்றி : ஆனந்த விகடன்

ஒளவைத் தமிழ் காத்த நால்வர்
வேம்பத்தூர் கிருஷ்ணன் வெளியீடு: சுடர்மணிபதிப்பகம், 19,பஜனை கோயில் தெரு, சென்னை94. பக்கம்: 160 விலை ரூ.60 முக்கியமான வரலாறுகளைப் படிக்க மறந்தவர் களுக்கும் அல்லது புதுப்பிக் கத் தவறியவர்களுக்கும்வேம் பத்தூர் கிருஷ்ணன் எழுதிய இந்தப் படைப்பு, அபூர்வ தொகுப்பு. ஒளவையின்புகழுக் குத் துணை நின்ற அண்ணா, ம.பொ.சி, டி.கே.சண்முகம், எஸ்.எஸ்.வாசன் இவர்களைப் பற்றிய தெளிந்த பதிவு. அண்ணாவைப் பற்றிய இதுவரை கேள்விப்படாத தகவல்கள் நிறைந்திருக்கின்றன. ஒளவையார் என்ற சினிமா எடுத்ததன் மூலம், எஸ்.எஸ்.வாசன் செய்த தமிழ்த்தொண்டு இங்கே ஆராதிக்கப்படுகிறது. நம் முன்னோர்களைப் பற்றிய பார்வை இல்லையென்றால், நமக்கு வேறு இடமில்லை. தெளிந்த ஆவணம். தவிர்க்க முடியாத புத்தகம்! நன்றி : ஆனந்த விகடன்

ஞானக்கூத்தன் கவிதைகள்
- ஞானக்கூத்தன் ஆழி பப்ளிஷர்ஸ், 12-முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-24. பக்கம்: 440, விலை ரூ.280 பிரபஞ்சத்தை அளாவிச் செல்கிற பேராறு, கவிதை. அவை காட்டுப் பூக்களைப் போல தாமாகவே முகிழ்கின்றன. தமிழ்க் கவிதையின் நெடிய வரலாற்றில் ஞானக்கூத்தனின் கவிதைகளுக்கு மரியாதைக்குரிய இடம் உண்டு. வாசகன் அறியாமல் அவனுள் இருக்கும் சாத்தியக்கூறுகளை இந்தக் கவிதைகள் தொட்டுத் தாவுகின்றன. எளிமையும், கனமும், பேரமைதியும், உள்ளார்ந்த கோபமும்கொண்டவை ஞானக்கூத்தனின் கவிதைகள். நல்ல கவிதைகளைக் கண்டுபிடிப்பதே ஒரு கலை. அப்படியான கலையம்சம் நிறைந்த வாழ்வியல் அனுபவத்தைத் தரும் அருமையான பதிப்பு! நன்றி : ஆனந்த விகடன்

வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்
பா.திருச்செந்தாழை வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669. கே.பி.சாலை, நாகர்கோவில்-1. பக்கம்: 102 விலை: ரூ.75 திருச்செந்தாழை, சிறுகதையின் வழக்கமான நடைமுறை அமைப்பைத் துறந்துவிட்டு, வாழ்க்கையின் அனைத்துப் பரப்பையும் கேள்விக்குறிகளாக்கி நம்முன் வைக்கிறார். மனிதர்களின் அவநம்பிக்கைகள், தடுமாற்றங்கள், பிறழ்வுகள், ஒழுக்க மீறல்கள் அனைத்தும் எழுத்தாளரின் நேரடிக் குறுக்கீடு இல்லாமல் கதைகளாகியிருக்கின்றன. தொகுதி முழுக்க வியாபித்திருக்கும் நடையமைப்பு, மிகவும் நம்பிக்கைக்குரிய படைப்பு என்கிறது! நன்றி : ஆனந்த விகடன்

கருங்குயில் குன்றத்துக் கொலை – டி.எஸ்.துரைசாமி
வெளியீடு: தோழமை, 5டி, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78. பக்கம்: 456 விலை ரூ.275 தமிழர்கள் தங்களின் பொற்காலத்தை மறுபடியும் மீள்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நாவல் கலையின் ஆரம்ப அடையாளங்களையும் போக்கையும் எளிதில் இந்த சந்ததி கண்டுகொள்ள, இவை போன்ற படைப்புகள் அவசியமாகின்றன. டி.எஸ்.துரைசாமி எழுதிய 'கருங்குயில் குன்றத்துக் கொலை' பத்திரிகையில் தொடராக வெளிவந்த சமயம் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்ச நஞ்சமானதல்ல. இந்நாவலின் பிரதான அம்சம், சடுதியில் வேகமாக உருண்டோடும் நடை. பழைமையைப் பின்தொடர்வதுதான் எல்லாவற்றிலும் பிரச்னை என்பார்கள். ஆனால், இலக்கியத்தின் எல்லா அடிப்படையும் பின்தொடர வேண்டிய அம்சம் கொண்டதுதான்! நன்றி : ஆனந்த விகடன்


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport