புத்தக விமர்சனம்

வழக்கு எண் :18/9 – நூல் விமர்சனம்
வழக்கு எண் :18/9 திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி எழுத்து இயக்கம் பாலாஜி சக்திவேல் தயாரிப்பு UTV & N.லிங்குசாமி செய்தி தாளில் படித்த நிகழ்வுகளை தொகுத்துத் திரைக்கதையாக்கி இயக்கி உள்ளார் பாலாஜி சக்திவேல்.பாராட்டுக்கள் மிக எதார்த்தமாகப் படமாக்கி உள்ளார் .ஒரே படத்தில் பல தகவல்களைத் தந்துள்ளார் .தயாரிப்பாளர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் .சமரசம் இன்றி குத்துப் பாடல் இன்றி மசாலா இன்றி படமாக்கி உள்ளனர் .படத்தில் ஸ்ரீ ,முரளி ,மிதுன் ,ஊர்மிளா ,மனீஷா அனைவருமே மிகச் சிறப்பாக நடித்து உள்ளனர் .அல்ல பாத்திரமாகவே மாறி உள்ளனர் .அறிமுகம் என்பதே தெரியாத அளவிற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களாக நடித்து உள்ளனர் .நம்ப முடியாத நான்கு சண்டை ,நான்கு காதல் பாட்டு ,வெட்டு குத்து என்று திட்டமிட்டு மசாலாப் படம் எடுக்கும் சராசரி இயக்குனர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை திரையிட்டுக் காட்டிப் புத்தி புகட்ட வேண்டும் . சிறுவர்களை, வட மாநிலத்தில் ,முறுக்கு நிறுவனத்தில் கொத்தடிமைகளாக நடத்திய செய்தி செய்தித் தாளில் படித்த நினைவு உள்ளது .அந்த நிகழ்வை படத்தில் வைத்துள்ளார் .கொத்தடிமையாக வட மாநிலத்திற்கு சென்ற சிறுவனிடம் அப்பா அம்மா இறந்த செய்தியைக் கூட மறைக்கும் மனிதாபிமானம் அற்ற செயல் கண்டு, கண்ணில் கண்ணீர் வருகின்றது .விவசாய நிலங்களை வீட்டடி மனைகளுக்கும் அவலம் ,குழந்தைத் தொழிலாளர் முறையில் உள்ள கொடுமை, ஏழ்மையின் இயலாமை ,கந்து வட்டிக் கொடுமை ,பணக்காரகளின் சதி ,அலைபேசியால் சீரழியும் மாணவ சமுதாயம் ,காவல் துறையின் அவலம், அமைச்சரின் பித்தலாட்டம் ,மெல்லிய காதல் இப்படி பல தகவல்களை ஒரே படத்தில் தந்து வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இரண்டு வருடமாக அசைப் போட்டு இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளார் .படத்தில் வரும் நிகழ்வுகள் யாவும் செய்தித் தாளில் படித்த செய்திகளே ,காட்சிகளாக வருவதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து படத்தோடு ஒன்றி விடுகின்றோம் . படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தின் பாதிப்பு நினைவிற்கு வருகின்றது .இதுதான் இயக்குனரின் வெற்றி .இயக்குனருக்குக் கைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் வருகின்றது . தேசியவிருது வழங்குவதில் நேர்மை இருக்குமென்றால், இந்தப் படத்திற்கு தேசிய விருது உறுதி என்று ,அறுதி இட்டுச் சொல்லலாம் . பாடல் ஆசிரியர் நா .முத்துக்குமாரின் பாடல் வரிகள் நன்று .கிராமத்து வாழ்க்கையையும் ,நகரத்து சாலையோர வியாபர வாழ்க்கை ,நகரத்து பணக்கார மாணவனின் வாழ்க்கை அனைத்தையும் மிக இயல்பாக படமாக்கி உள்ளார் . பணத்திற்கு ஆசைப்பட்டு காவல் ஆய்வாளர் குமாரவேல் அப்பாவி ஏழையை, குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பும் கொடுமைக் கண்டு படம் பார்க்கும் நமக்கும் ஆயவாளர் மீது கோபம் வருகின்றது .படத்தின் கதையை எழுதினால் படம் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் குறையும் என்பதால் கதையை எழுத வில்லை . இந்தப் படத்தின் மூலம் பல்வேறு தகவல்களைத் தந்து சமுதாயம் சீர் பட உதவி உள்ளார் .இந்தப் படம் வெற்றிப் பெறுவது உறுதி .இந்த வெற்றியின் காரணமாக மசாலா இயக்குனர்கள் நல் வழிக்கு வர வாய்ப்பு உள்ளது . தயாரிப்பாளர்களும் இனி இதுப் போன்ற படம் எடுங்கள் என்று சொல்லும் நிலை வரும் .இந்தப் படத்தில் மிகப் பெரிய கதா நாயகன் இல்லை ,மிகப் பெரிய கதாநாயகி இல்லை ,பிரபல சிரிப்பு நடிகர் இல்லை ,கொடூர வில்லன் இல்லை,கவர்ச்சி நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை . ஆனாலும் படம் வெற்றிப் பெற்றுள்ளது .சராசரி படம் எடுக்கும் எல்லோரையும் சிந்திக்க வைத்த மிகச் சிறந்தப் படம் .பாராட்டுக்கள்

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் தமிழில்: உஷாதரன் வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு,பொள்ளாச்சி-2. பக்கங்கள்: 328விலை: 250 ஜெர்மனி, ஹிட்லரின் நாஜி இனவெறி ஆட்சியின் கீழ் இருந்தபோது, 14 வயதான ஆனி ஃபிராங்க் எழுதிய டைரிக் குறிப்புகளின் தொகுப்பு இது. நாஜிக்களின் பார்வையில் இருந்து மறைந்து வாழ்ந்தபடி எழுதிய ஆனி, பின்னாட்களில் நாஜிப் படையினரிடம் பிடிபட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி, 'டைபஸ்’ தொற்றுநோய்க்குப் பலியானார். ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பின், ஆனியின் தந்தை வீட்டுக்கு வந்தபோது அவளது குறிப்புகளைக் கண்டார். தலைமறைவு வாழ்க்கையின் சகிக்க முடியாத அவலம், நாஜிக்களின் அக்கிரம அட்டூழியங்கள், அத்தகைய சூழலிலும் முளைத்த காதல் என அவர் வெளிக்கொண்டுவந்த ஆனியின் எழுத்து உலக வாசகர்களைக் கண்ணீரில் மிதக்கவைத்த பதிவு இப்போது தமிழில்!

தோட்டத்து மேசையில் பறவைகள் இன்றைய ஐரோப்பிய புது எழுத்து
தோட்டத்து மேசையில் பறவைகள் இன்றைய ஐரோப்பிய புது எழுத்து இந்திரன் வெளியீடு: சந்தியா பதிப்பகம், 77, 53-வது தெரு,  9-வது அவென்யூ, சென்னை-600083. பக்கங்கள்:160  விலை: 120 2011-ம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வென்ற கலை இலக்கிய விமர்சகர் இந்திரனின் புத்தகம். அவர்  சந்தித்த 10 ஐரோப்பிய எழுத்தாளர்கள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது.  நேர்காணல்களுடன், அவர்களுடைய படைப்புகளின் சில கீற்றுகளை மொழிபெயர்த்து இணைத்துள்ளது பாராட்டத்தக்கது. புக்கர் பரிசு பெற்றஎழுத்தாளர் 'கடல்’ நாவலாசிரியர் ஜான் பான்வில், பெஞ்சமின் பிளேக் என்ற பெயரில் துப்பறியும் நாவல்கள் எழுதுவதைக் குறிப்பிடும் இந்திரன், 'தமிழ்நாட்டில் ஒருவர் ஒரே நேரத்தில் சுந்தர ராமசாமியாகவும் ராஜேஷ்குமாராகவும் இருக்க அனுமதிப்பார்களா என்ன?’ என்று அதிசயிக்கிறார். 'கடல்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியைச் சந்திக்க மறுத்ததற்கு ஜான் பான்வில் சொல்லும் காரணம் ரொம்பவே சுவாரஸ்யமானது.

திரைச் சுவைகள் மேஜர்தாசன்
திரைச் சுவைகள் மேஜர்தாசன் வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை-600 108. பக்கம்:336  விலை 390 சினிமா நிருபர் மேஜர்தாசனுடைய அனுபவங்களின் தொகுப்பு. சொன்ன நேரத்துக்கு வராத நடிகர்களை 'சாபம்’ மூலம் கிளியாக மாற்றிவிடுகிற விட்டலாச்சாரியாரின் 'திறமை’, 'கல்தூண்’ நாடகம் முழுவதையும் தரையில் அமர்ந்து ரசித்த எம்.ஜி.ஆரின் புகைப்படம், மிகப் பெரிய மீசை வைத்திருக்கும் பி.பி.ஸ்ரீநிவாஸ், மாடி வீட்டு ஏழை சந்திரபாபு எனப் பிரபலங்களைப் பற்றிய ஒவ்வொரு தகவலும் புகைப்படமும் அரிய களஞ்சியம். எந்த அரசு விருதும் கௌரவிக்காத மாபெரும் கலைஞன் நாகேஷ் தனக்கு வழங்கப்பட்ட ஷீல்டுகளைத் தீயில் போட்டு எரித்த பின்னணி, தேவாலயத்தின் கதவுகளைச் சாத்திக்கொண்டு எம்.ஜிஆர்., ஏவி.எம். சரவணன் முன்னிலையில் நடிகர் அசோகன் செய்துகொண்ட காதல் கல்யாணம் என அடுக்கப்பட்டு இருக்கும் செய்திகளின் தொகுப்பு, இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது!

வெள்ளை மொழி – அரவாணியின் தன் வரலாறு ரேவதி
வெள்ளை மொழி அரவாணியின் தன் வரலாறு  ரேவதி வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம்-621310. பக்கங்கள்: 272 விலை: 200 ரவாணிகள் என்றும் திருநங்கை கள் என்றும் அழைக்கப்படுபவர் களின் உடல் மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் வாழ்வியல் பிரச்னை களையும் வரிவரியாக, வலியுடன் விவரிக்கும் புத்தகம். ''உங்க வீட்ல இப்படி ஒருத்தர் பிறந்தா என்ன பண்ணுவீங்க?'' என்று இந்தப் புத்தகம் ஆங்காங்கே எழுப்பும் கேள்வி நம்மைப் பரிசோதித்துக்கொள்வதற்கானது. நாமக்கல்லில் பிறந்த துரைசாமி, தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து ரேவதி என்று மாற்றிக்கொள்ளும் தருணத்தில் இருந்து தொடங்கும் அவமானத்தின் கசப்பு இந்தப் புத்த கத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் ஆங்காங்கே படிந்துகிடக்கிறது. நாமக்கல், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ வேண்டிய நிர்பந்தம் கொண்ட ரேவதி, எல்லா இடங்களி லும் மீண்டும் மீண்டும் சந்திப்பது அவமானம், வன்முறை, ஏமாற்றம். இதனூடாகச் சில காதல்களும் அன்பு ததும்பும் மிகச் சொற்ப மனிதர்களும். இஜரா (திருநங்கை), குரு, சேலா (சீடர்), பாவ்படுத்தி (குருவுக்குச் செய்யும் மரியாதை), தந்தா (பாலியல் தொழில்), அமாம் (திருநங்கைகள் நடத்தும் குளியலறை) எனத் திருநங்கைகளின் சமூகக் கட்டமைப்பு மற்றும் சம்பிரதாயங்களினூடாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் நமக்குப் புதியவை!

விழியீர்ப்பு விசை – நூல் விமர்சனம்
விழியீர்ப்பு விசை நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 35 கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர் காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் .காதலர்களுக்குப் பிடித்த கவிஞர் தபூ சங்கர். இவரது நூலைத்தான் காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் .அதனால்தான் பல பதிப்புகளில் நூல் வந்துக் கொண்டே இருக்கின்றது. கவிஞர்கள் அறிவுமதி ,பழனி பாரதி இருவரின் அணிந்துரையும் நூலிற்கு உரம் சேர்க்கும் விதமாக உள்ளது . புவி யீர்ப்பு விசை கண்டுபிடிக்கும் காலத்திற்கு முன்பே ,ஆதாம் ஏவாள் காலத்திலேயே உருவானது விழியீர்ப்பு விசை.கவிதைக்குப் பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை இந்நூலின் பின் அட்டையில் உள்ளது . உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காய வைத்திருக்கிறாயே ! இரண்டும் காய்வதை விட்டு விட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார் ! காற்றில் ஆடைகள் ஆடுவதை கவிஞர் விளையாடுவதாகக் கற்பனை செய்து கவிதை எழுதி உள்ளார் .நூலின் அட்டைப் படத்தில் உள்ள அழகி அழகா ? மயில் இறகு அழகா ? பட்டிமன்றமே நடத்தலாம் . மொழிப்போர் தியாகி கேள்விப்பட்டு இருக்கிறோம் .விழிப்போர் தியாகிகளுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார் .வித்தியாசமாக சிந்தித்து கவிதை எழுதுவதால் வெற்றிப் பெறுகின்றார் . சற்றுமுன் நீ நடந்து போன தடயம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கின்றது வீதி ,எனினும் கடந்து போன தண்டவாளம் போல இன்னும் அதிர்கிறது என் இதயம் . இதயத்தின் அதிர்வலைகளை கவிதையில் நன்குப் பதிவு செய்துள்ளார் . சூரியன் வந்த பிறகுதான் நீ வருகிறாய் என்றாலும் நீ வரும் போதுதான் விழிக்கிறது இந்த வீதி ! கவிஞர் தபூ சங்கரின் கவிதைகளுக்கு விளக்கவுரையோ, தெளிவுரையோ தேவை இல்லை .எளிமை இனிமை புதுமை கலந்த கலவை .படிக்கும் வாசகர் அனைவருக்கும் மிக எளிதாக விளங்கும் .சில கவிஞர்கள் இருக்கிறார்கள் எழுதிய என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது என்ற ரகத்தில் எழுதி வருகின்றனர் .அவர்கள் திருந்த வேண்டும் . அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மையெனில் உனக்குத் தெரிகிறதா என் முகத்தில் உன் அழகு ? கவிஞர் தபூ சங்கர் கவிதை உண்மைதான் .பல இளைஞர்கள் காதல் வயப்படதும் அழகாகி விடுகின்றனர் .காதலனை அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு .தாடி வளர்த்து ,தற்கொலை வரை அழைத்துச் செல்லும் எதிர்மறை வினை காதலுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் . கண்களைக் கட்டிக் கொண்டுதானே கண்ணா மூச்சி ஆட்டம் ஆட வேண்டும் ... நீ கண்களாலேயே ஆடுகிறாயே ! காதல் வயப்படுவதில் முதல் இடம் கண்களுக்குத்தான் என காதலித்த காதலர்களுக்கு நன்கு விளங்கும் .இந்த நூலில் உள்ள கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலை உறுதியாக நினைவூட்டும் என்று அறுதியிட்டு கூறலாம். நினைவூட்டத் தவறினால் நூலின் விலை திருப்பித் தரப்படும் என்று கூட விளம்பரம் செய்யலாம் . இந்தக் கவிதையை காதல் வயப்படும் ஒவ்வொரு இளைஞர்களும் கவனத்தில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் .இனி ஒரு விதி செய்வோம். காதல் தற்கொலைகள் இனி இல்லை என்று ஆக்குவோம் .அல்ல அல்ல இனி தற்கொலைகளே இல்லை என்று ஆக்குவோம். விலைமதிப்பற்ற மனித உயிரை மாய்க்கும் மடமையை ஒழிப்போம் . உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன் என் உயிரைத் தவிர அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன் . தொலைபேசியில் முத்தம் தா ! என்றுதான் காதலன் கேட்பான் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் வித்தியாசமாக தொலைபேசியில் முத்தம் தராதே ! என்கிறார் . தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு மதம் தராதே அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது . காதலியின் அழகை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .பாருங்கள் .எள்ளல் சுவையுடன் . எல்லோரும் கோயில் சிற்பங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள் சிற்பங்களெல்லாம் உன்னை ரசித்துக் கொண்டிருந்தன . மகிழ்ச்சியான கவிதைகள் மட்டுமல்ல மிகவும் நெகிழ்ச்சியான கவிதையும் உள்ளது . நீ அன்பின் மிகுதியால் எனக்களித்த முத்தங்களை விட ஒரு முறை அழுத போது என் மீது விழுந்து விட்ட உன் கண்ணீர் துளிதான் நான் சாகும் வரை சுமந்திருப்பேன் ! விழியீர்ப்பு விசை காதர்களை ஈர்க்கும் விசை .பாராட்டுக்கள் .காதல் கவிதைகளாக எழுதிக் குவிக்கும் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடமிருந்து சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் . நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் செய்வோம் !!!!!

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
தமிழில்: உஷாதரன் வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு,பொள்ளாச்சி-2. பக்கங்கள்: 328விலை: 250

மேலும் படிக்க...


ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி – நூல் விமர்சனம்
ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி இயக்கம் . ராஜேஷ் .M நடிப்பு ,தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் படுத்தியப் பாடு தாங்க முடியாமல், நாமே நடித்தால் என்ன ? என்று முடிவு எடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் .நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .நகைச்சுவை கதை என்பதால் தப்பித்து விட்டார் .படம் தொடங்கியது முதல் முடியும் வரை குறுந்தாடியுடனே வருகிறார் ,காதலிக்கும் பெண் , தினம் முகச் சவரம் செய்பவர்தான் எனக்குப் பிடிக்கும் என்று நிபந்தனை போட்டும் தாடியுடனே வருகிறார்.தொடந்து நடிப்பதாக முடிவு எடுத்தால் ,நடிப்பில் பயிற்சி பெறுவது நல்லது . நகைச்சுவை கலந்த காதல் கதை .நடிகர் சந்தானம் படத்திற்கு பக்க பலமாக உள்ளார் .சந்தானம் இல்லை என்றால் படம் இல்லை. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார் .முகத்தை எப்பொதும் ஒரே மாதிரியாகவே வைத்துள்ளார் . நடிகை ஹன்சிகா மோட்வாணி அழகுப் பதுமையாக வந்து போகிறார் .படத்தின் திரைக்கதை, வசனத்தில் நல்ல நகைச்சுவை இருப்பதால் .படம் போரடிக்காமல் செல்கின்றது .இசை ஹாரிஸ் ஜெயராஜ் நன்றாக உள்ளது .பாடல் நா .முத்துக்குமார் திட்டமிட்டு பாடல்களில் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் . தமிழ்த் திரைப் படத்தில் வரும் தமிழ்ப்பாடலில் ஆங்கிலச் சொல் எதற்காக ? பாடல் ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும் .நீங்கள் ஆங்கிலம் கலந்து எழுதும் பாடலைத்தான் இளைய சமுதாயம் பாடி வருகின்றது .ஆங்கிலம் கலந்து எழுதுங்கள் என்று உங்களிடம் யார் கேட்டது .ஆங்கிலப் படங்களில் பாடலே கிடையாது .ஒரு வேளை பாடல் வைத்தால் அவர்கள் ஆங்கிலப் பாடலில் தமிழ் கலந்து எழுதுவார்களா ? சிந்தித்துப் பாருங்கள் . உதயநிதி ஸ்டாலின் அம்மாவாக தேசிய விருதுப் பெற்ற நடிகை சரண்யா மிக நன்றாக நடித்து உள்ளார் .திருமணத்தின் போது கணவரிடம் பட்டப் படிப்பு முடித்து விட்டதாகப் பொய் சொன்னதன் காரணமாக ,கணவர் இருபது ஆண்டுகளாக பேசாமல் கோபத்துடன் இருக்கிறார் .பட்டப் படிப்பை முடிக்க தொடர்ந்து சரண்யா தேர்வு எழுதுகிறார் .தோல்வியே அடைகிறார் .மனைவி காணவில்லை என்றதும் கணவன் துடித்துத் தேடும் காட்சி நெகிழ்ச்சி .மகனின் காதலுக்கு உதவும் வித்தியாசமான அம்மாவாக வருகிறார் சரண்யா . ஒளிப்பதிவு மிக நன்று .பல்வேறு நாடுகளுக்கும் சென்று இயற்கைக் காட்சிகளை நன்கு படப்பிடிப்பு செய்துள்ளனர் .இளைஞர்கள் காதலிக்கும் காலத்தில் காதலியா ? நண்பனா ? என்ற கேள்வி வரும்போது ,பெரும்பாலானவர்கள் காதலியை தேர்ந்தெடுப்பார்கள் . உதயநிதி ஸ்டாலினும் காதலியை தேர்ந்தெடுத்து விட்டு நண்பனான சந்தானத்தை அடிக்கடி கழட்டி விடுவதும் .சந்தானம் கோபப் படுவதும் அம்மா சரண்யா சமாதானம் செய்து சேர்த்து வைப்பதும் ,நல்ல நகைச் சுவை . படத்தின் இறுதிக் காட்சியில் ஆர்யா வருகிறார் .அவர் வரும் காட்சியும் நல்ல நகைச் சுவை . சினேகா சில காட்சிகளில் வருகிறார் .விமான நிலையத்தில் பணிப் பெண்ணாக வருகிறார் .ஹன்சிகா மோட்வாணி பணிப்பெண் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும்போது விரட்டி விரட்டி காதலிக்கிறார் உதயநிதி ஸ்டாலின் .காதலை ஏற்க மறுக்கிறார் .விமானத்தில் பணிப்பெண்ணாக பயணிக்கும்போது , உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் விமானத்தில் பயணியாகப் பயணித்து ஹன்சிகா மோட்வாணியிடம் கலாட்டா செய்கின்றனர் . ஹன்சிகா மோட்வாணியிடம், விமானத்தில் சன்னல் ஓர இருக்கை வேண்டும் என்று சண்டைப்போட ,படி ஓரம் இருக்கை கொடுங்கள். இல்லாவிட்டால் விமானி அருகில் உட்கார விடுங்கள் .குடிப்பதற்கு மது கொடுங்கள் என்பது ,வெளிநாட்டுப் பயணத்தின் போதுதான் மது தருவோம் .என்பதும் ,ஏமாற்றுகின்றனர் என்று கலாட்ட செய்வதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவை . இயக்குனர் M. ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .திரைக்கதையைத் தொய்வின்றி நகைச்சுவையாகவே நகர்த்திச் சென்று வெற்றிப் பெற்றுள்ளார் . சமீபத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் புகைப்பிடிப்பது ,மது அருந்துவது போன்றக் காட்சிகள் அடிக்கடி வருகின்றது .இயக்குனர்கள் சமூகப் பொறுப்பு உணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .நம்நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக் கடை என்று பெருகி விட்டது .இந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக நேரிடும் .குடி குடியைக் கெடுக்கும் என்று எழுத்துப் போடுவதால் எந்த பயனும் இல்லை .மது பாட்டிலில் எழுதி இருப்பதை படித்து விட்டுதானே குடி மகன்கள் குடித்துக் கெடுகிறார்கள் குடிக்கும் காட்சிகளையே இனி தயவு செய்து காட்டாதீர்கள் .

நித்திரைப் பயணங்கள் ! – நூல் விமர்சனம்
நித்திரைப் பயணங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி. தகிதா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 50. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நூலின் தலைப்பே நமை சிந்திக்க வைக்கின்றது .கனவு என்பதை நித்திரைப் பயணங்கள் இப்படி கவித்துவமாகவும் சொல்ல லாம் என்பதை உணர்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.அட்டைப் பட வடிவமைப்பு அருமை. ஆங்கில இலக்கியம் ,சட்டம் படித்துவிட்டு கவிதை எழுதுவதற்கு முதலில் பாராட்டுக்கள் .கலை மாமணி,பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் கை எழுத்திலேயே வந்து இருக்கும் இரண்டாவது அணிந்துரை இது .மிக நன்று . பேராசிரியர் ,கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களின் அணிந்துரை .இரண்டு இலக்கிய இமயங்களின் அணிந்துரை கவிதை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக மிளிர்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி வித்தியாசமாகச் சிந்திக்கிறார் .நிலவு அழகு என்றுதான் பலரும் பாடி உள்ளனர் .நிலவு பற்றி அவரது வரிகள் . உண்மையைத் தேடி ! வெப்பத்தைக் கக்கிய நிலவு மனது கனத்தது மீண்டும் அந்த பயணம் உண்மையைத் தேடி ! இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அல்லி இதழால் அவளுக்கு இசைந்திடடி .. மலர்த்தோட்டம் மலர்ந்தும் மலராத அரும்புகள் பனித்துளியின் சிலிர்ப்பு புகை கவிரி கொண்டு நினைவுகளை வருடுகிறேன் ! தெற்குத் தொடர் வண்டித் துறையில் வர்த்தக ஆய்வாளராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபடுவது பாராட்டுக்குரியப் பணி . நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி பற்றி தகிதா பதிப்பகம் எழுதியது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்தேன் .அவரை நேரடியாக சந்தித்தப் போது . முழுமையான உண்மை ,களங்கமற்ற அன்பு ,தற்சார்பு இல்லாத நியாயம் ,சமரசம் செய்யாத சத்தியம் ,பாரபட்சமில்லாத பாசம் ,எதிர்பாப்பில்லாத உறவு இவைகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிற அரிய மனிதர்தான் இந்த பீர்ஒலி . காதலைப் பாடாத கவிஞர் இல்லை .காதலைப் பாடதவர் கவிஞரே இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ. பீர்ஒலிஅவர்களும் காதலைப் பாடி உள்ளார். மலரவிடப் போவதில்லை ! என் மனத் தோட்டத்தில் பார்வைகள் விதைத்துச் சென்ற காதல் அரும்புகளை மலரவிடப் போவதில்லை ! எங்கு சென்றிட்டாய் ! உன்னில் என்னையிழந்து என்னில் உன்னைத் தேடி மதுரவாய் மலர்ந்து மகர யாழ் மொழி பேசி காதல் மலர்கள் கனவுக் கோட்டையில் ! உன்னில் என்னையிழந்து ,என்னில் உன்னைத் தேடி கவிதைகளில் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார் . பாராட்டுக்கள் . இயற்கையை உற்று நோக்கி இயற்கையோடு இயற்கையாக இரண்டரக் கலந்து கவிதை வடித்துள்ளார் .இவருக்கு இயற்கை ரசிக்க எப்போது நேரம் கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .உள்ளத்து உணர்வு கவிதை .தான் உணர்ந்தவற்றை கவிதையாக்கி உள்ளார் . ஒரு கவிதை அரங்கேறிக் கொண்டிருக்கிறது ! ஆகாயம் குடை பிடிக்க நட்சத்திரங்கள் கண் சிமிட்டத் துவங்கின .. திரை விலகி புதினமாய் வெட்கி நகைத்தாள் நிலவுப்பெண் ! நீ ....நான்...அந்தநிலவு ... நட்சத்திரங்களை தோற்கடிக்கும் மின்மினி பூச்சிகள் ஆகாங்கே வட்டமிட்டுக் கொண்டிருந்தன பவுர்ணமி இரவு நிலவின் பரிணாமத் தோற்றம் நீ ....நான்...அந்தநிலவு ... கவிதைகளை ரசித்து ,ருசித்து ஈடுபாட்டுடன் எழுதி உள்ளார் . நித்திரைப் பயணங்கள் புறப்பாடு நெஞ்சகத்தில் ஊற்றுவித்த காதல் சுனை நீரில் காலமெல்லாம் மிதந்திடவே கனவிலும் நினைவிலும் கதறி ...அலைகின்றேன் காணலியே ! தத்துவ கவிதைகளும் நூலில் உள்ளது. மனித இனம் ! கருவறை இருட்டு கல்லறை நிசப்தம் பிரகாசித்தவன் இந்த பிரபஞ்ச ஒளியில் இருண்டு கிடந்தான் ! நூலில் உள்ள கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .புரியாத புதிரான இருண்மை கவிதைகள் இதில் இல்லை .அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் .வாழ்த்துக்கள். -- நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் செய்வோம் !!!!!

வெங்காயம் – நூல் விமர்சனம்
வெங்காயம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி இயக்கம் ..சங்ககிரி ராச்குமார் வெளியீடு ..இயக்குனர் சேரன் தந்தை பெரியார் அடிக்கடி பயன் படுத்திய சொல் வெங்காயம் .வெங்காயம் உரிக்க உரிக்க வெறும் தோல்தான் வரும் .கடைசியில் ஒன்றுமே இருக்காது .அதுப்போல சோதிடம் என்பது ஒன்றுமே இல்லை .சுத்தப் பொய் என்பதை நிருபிக்கும் விதமான கதை என்பதால் வெங்காயம் என்று பயர் வைத்தது மிகப் பொருத்தம் . இந்தப்படத்தைப் பாத்து விட்டு இயக்குனர் சேரனிடம் பரிந்துரை செய்த நடிகை ரோஹினிக்குப் பாராட்டு .இந்தப்படத்தை ஒரு தலை ராகம், சித்திரம் பேசுதடி திரை படங்ககளைப் போல, மறு வெளியீடு செய்து மக்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் சேரனுக்குப் பாராட்டு .புதியவர்கள், கிராமத்துக் காரர்கள் என்றுப் பார்க்காமல், படத்தில் நடித்து உதவிய திரு சத்யராஜ் அவர்களுக்குப் பாராட்டு .மிகச் சிறப்பாக படத்தை இயக்கி உள்ள இயக்குனர் சங்ககிரி ராச்குமார் அவர்களுக்குப் பாராட்டு.உடனடியாக மாநில அரசு இந்தப்படத்திற்கு வரி விலக்கு வழங்க வேண்டும். மைய அரசு இந்தப்படத்திற்கு விருது வழங்க வேண்டும் .திராவிடர் கழகம் இயக்குனர் சங்ககிரி ராச்குமார்அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி பொற்கிழி பரிசு வழங்க வேண்டும் . ஒரு நாடக கூத்தாடி. மனைவி இல்லை . மூத்தது மகள் .இளைவன் மகன் . பாசத்தோடு வளர்த்து வருகிறார் .மகனுக்கு மஞ்சள் காமாலை நோய் .பாண்டிச்சேரி என்று ஊசி போட பணம், கடன் கேட்கிறார் .இன்று வெள்ளி கிழமை பணம் தரமாட்டோம் .என் லட்சுமி உன்னிடம் போய் விடும் என்று மறுக்கின்றனர் .சக நாடக்கக் கலைஞர்கள் பணம் தந்து உதவுகின்றனர் .மகனை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி செல்கிறார். மருத்துவமனை இன்று விடுமுறை என்கின்றனர் .அங்கேயே ஒரு ஓரமாக இருக்கிறார் .மகனுக்கு தேநீர் வாங்கி வரச் செல்கிறார் .அதற்குள் ஒருவன் ,சிறுவனிடம் பொம்மைகளைக் காட்டி ஏமாற்றி கடத்திச் சென்று சாமியாரிடம் ஒப்படைகின்றான் .சாமியார் சிறுவன் கழுத்தை நரபலிக்காக அறுத்து விடுகிறான் .மகனைத் தேடி வந்தகூத்தாடியைப் பார்த்ததும் , சிறுவனைப் போட்டு விட்டு ஓடி விடுகின்றனர் .கழுத்து அறுப்பட்ட நிலையில் சிறுவன் வலியில் துடிக்கிறான்.மகனைப் பார்த்து தந்தையும் துடிக்கிறார் .மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார். மருந்து வாங்கி வரச் சொல்கின்றனர் .மருத்துக்கடையில் பணம் இன்றி மருந்துக் கேட்கிறார் .தர மறுக்கின்றனர் .வெளியில் சென்று பிச்சை கேட்கிறார் .கை கால் நன்றாகத்தானே உழைத்துச் சம்பாரி என்கின்றனர் . நான் ஒரு நாடக கூத்தாடி .உழைப்பாளிதான் என்கிறார் .எங்கே கூத்தாடு என்கின்றனர் .ஆடிக் காட்டுகின்றார் .பணம் தருகின்றார் .அதற்குள் உன் மகன் இறந்து விட்டான் என்கின்றனர் .வேகமாக ஓடுகிறார் .கார் மோதி விபத்தில் இறக்கிறார் .அனாதையான பெண் மகள் .அனாதை இல்லத்தில் வந்து சேர்கிறாள் .அந்த இல்லத்தில் இவளைப் போல சோதிடம் மூட நம்பிக்கையால் அனாதையான சிறுவர்களுடன் சேர்ந்து சோதிடர்கள் சாமியார்கள் கடத்துகின்றனர் .சிறிய காதல் கதையும் உள்ளது .பெரியப் போராட்டத்திற்கு பின் காதலனுடன் திருமணம் செய்ய பெற்றோர்கள் சம்மதிக்கின்றனர் .சாமியார் செவ்வாய் தோஷம் உள்ளது . என்று சொல்லி பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி மயக்க மருந்து கலந்து தீர்த்தம் தந்து பலாத்காரம் செய்யும் முயற்சியில் அந்தப் பெண்ணை கொலை செய்து விடுகின்றான் .அந்தப் பெண்ணின் காதலனான காவல் அதிகாரி அந்த சாமியாரையும் கடத்தி வைத்திருக்கும் சோதிடர்களையும் சுட்டு வீழ்த்துகின்றான்.படத்தின் இறுதி காட்சியில் சோதிடத்தால் அனாதையான சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் . அனல் பறக்கும் தீ பொறி வசனங்கள் .படம் பார்க்கும் அனைவரையும் சிந்திக்க வைத்து வெற்றிப் பெற்றுள்ளார் . அம்மா அப்பா இழந்துவிட்ட பேரனை பாட்டி பாசத்தோடு வளர்த்து வருகிறாள் . பேரனுக்கு கத்திப்பட்டு கை விரல் நறுக்கியதும் பாட்டி துடித்துப் போகிறாள் .பாட்டி சுண்டைக்காய் வத்தல் விற்க்கச் சென்றபோது விழுந்து விட்டாள் என்ற செய்திக் கேட்டு ,பேரன் துடித்து விடுகிறான் .பாட்டி பேரன் பாசத்தை மிக நன்குப் பதிவு செய்துள்ளார். படம் பார்க்கும் அனைவருக்கும் அவரவர் பாட்டி நினைவிற்கு வருவது உறுதி .எனக்கு என்னை வளர்த்த பாட்டி மகாலட்சுமி நினைவிற்கு வந்தார்கள் .பேரனும் அவன் நண்பனும் தறி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர்.அங்கு கூலி மோசடி செய்வதால் , இருவரும் இணைந்து சொந்தமாக தறி நெய்திட திட்ட மிடுகின்றனர் .பாட்டி பேரன் எதிர்காலம் குறித்து கவலையோடு இருக்கும்போது ,நண்பன் சொல்கிறான் .அப்பா அம்மா இருந்து வளர்க்கும் குழந்தைகளே கெட்டப் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர் .அப்பா அம்மா இன்றி பாட்டி நீ வளர்த்த உன் பேரன் எந்தக் கெட்டப் பழக்கமும் இன்றி மிக நல்லவனாக உள்ளான் .நன்றாக வருவான் என்று ஆறுதல் சொல்கிறான் .பேரனும் நண்பனும் தொழில் தொடங்க சோதிடனைப் போய் பார்க்கின்றனர் .அவன் வாயிக்கு வந்தப்படி உளறி விடுகிறான் .நண்பனை நீ நன்றாக வருவாய்.பேரனை உனக்கு சனி உள்ளது உன்னுடன் இருப்பவர்கள் செய்துப் போவார்கள் என்று பயமுறுத்தி விடுகிறான் .இதைக் கேட்ட நண்பன் பயத்தில் பிரிந்து விடுகிறான் .பேரன் பாட்டி நம்மால் இறந்து விடுமோ என்ற பயத்தில் ,முதல் முறையாக கள் குடித்து விட்டு தற்கொலை செய்து இறக்கிறான் .பேரனை பிணமாகப் பார்த்த பாட்டி பைய்த்தியமாகிறாள் .பேரன் பாத்திரத்தில் இயக்குனர் சங்ககிரி ராச்குமார் அற்புதமாக நடித்து உள்ளார் . இப்படி சோதிடத்தின் காரணமாக பல குழந்தைகள் அனாதை ஆகின்றன. அனாதை இல்லத்தில் இருக்கும்போது அங்கு வந்த சத்யராஜ் சிறப்பான பாடல் பாடி பகுத்தறிவை விதைக்கிறார் .பெரியாராக நடித்த சத்யராஜ் ஒரு காட்சியில் பெரியாராக வருகிறார் . நடிகர் ,நடிகை கால் சீட்டு க்குக் காத்திருந்து படப்பிடிப்பு நடத்தும் இயக்குனர்கள் உள்ள உலகில் ,கேமிராவிற்காக காத்திருந்து அது கிடைத்தவுடன் தன குடும்பம்,தன ஊர் மக்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வெறிப் பெற்றுள்ள இயக்குனர் சங்ககிரி ராச்குமார் எப்படி? பாராட்டுவது என்றே தெரிய வில்லை .படத்தில் குத்துப்பாட்டு இல்லை ,வெட்டுக் குத்து இல்லை .ஆபாசம் இல்லை ,வக்கிரம் இல்லை, வன்முறை இல்லை .ஆனால் மக்களை பகுத்தறிவு வாழ்க்கைக்கு மாற்றும் விதமாக எடுத்து உள்ளார் .இந்தப் படத்தை சமுதாயத்தைச் சீரழிக்கும் , மசாலாப் படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் அனைவருக்கும் காண்பித்துத் திருத்த வேண்டும் . தொழில் முறை நடிகர்கள் இல்லாததால் ,கிராம மக்களே நடித்து இருப்பதால் ,படம் பார்க்கிறோம் என்பதை மறந்து ஒரு கிராமத்தில் இருப்பதுப் போன்ற உணர்வு வருகின்றது .இயக்குனரின் வெற்றி . சோதிடம் மூட நம்பிக்கை என்றக் கருத்தை ஆணித் தரமாகப் பதிவு செய்துள்ளார் .இந்தப்படம் பார்த்தப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்ன சொற்கள் என் நினைவிற்கு வந்தது . எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் கோடி கோடி மைல்களுக்குப் அப்பால் உள்ள கிரகங்கள் மண்ணில் உள்ள நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதை நம்பவில்லை .சோதிடம் நம்பும் மக்கள் திருந்த வேண்டும் என்பதே படத்தின் நோக்கம் .சாமியார்களின் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டி உள்ளார் .பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் ஓடிப் போன பித்தலாட்ட சாமியார்களை இன்னும் நம்பும் அவலம் நம் நாட்டில் இன்றும் நடக்கின்றது. தொலைக்காட்சியின் செய்தியில், சாமியார்களின் பித்தலாட்டம் காட்டுகின்றனர் .ஆனால் அதே தொலைக்காட்சியில் தொடரில், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சாமியார் சர்வ சக்தி மிக்கவர் என்று காட்டும் முரண்பாடே மக்கள் ஏமாறக் காரணமாகின்றது . பிறந்த நேரம் எது?என்று சொல்வதில் சொதிடர்களுக்குள் உள்ள முரண்பாடு .பிறந்த நேரம் சரி இல்லை அதனால் துன்பம் என்கின்றனர் ,சுனாமியில் இறந்த அனைவரும் ஒரே நேரத்திலா பிறந்தார்கள் .இப்படி அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் . நம் மக்கள் குப்பை படத்தை ஓட வைத்து விடுகின்றனர் .அதன் காரணமாகவே குப்பை இயக்குனர்கள் காட்டில் மழை. மக்கள் இதுப்போன்ற அறிவார்ந்த சிறந்த படத்தை நூறு நாட்கள் ஓட வைக்க வேண்டும் .அனைவரும் அவசியம் திரை அரங்கம் சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்.இந்தப் படம் நூறு நாட்கள் ஓடி முடிந்தப் பின் தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இந்தப்படத்தைப் போட்டுக் காட்டி மாணவர்களுக்கு பகுத்தறிவை விதைக்க வேண்டும் . -- நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் செய்வோம் !!!!!


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91