புத்தக வெளியீடு (Book Release)

‘மருதமுனையில் சுனாமி’ நூல் வெளியீடு!

எஸ்மோ அமைப்பின் தலவைர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்கள் தொகுத்த ‘மருதமுனையில் சுனாமி’ புத்தக வெளியீடு 2005ம் ஆண்டு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் எம்.பி. பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் மயோன் முஸ்தபா எம்.பி, பைஸால் காஸீம் எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எஸ்மோ அமைப்பின் தலவைர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்கள் அதிதிகளுக்கு நூலின் சிறப்பு பிரதிகளை வழங்கினார.; மயோன் முஸ்தபா எம்.பி,; அதிபர் திலகம் ஏ.எச.எம்.மஜீத் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


வேலை பெறத் தயாராகுங்கள் நூல் வெளியீட்டு விழா மே 14-ம் தேதி மாலை
 மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.கருணாகரன் எழுதியுள்ள வேலை பெறத் தயாராகுங்கள் நூல் வெளியீட்டு விழா மே 14-ம் தேதி மாலை 6 மணிக்கு ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்திலுள்ள விஸ்வாஸ் கருத்தரங்க கூடத்தில் நடைபெறவுள்ளது.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.முனீஸ்வர ராஜா நூலை வெளியிட, முதல் பிரதியை மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பொ.ஜெயராமன் பெற்றுக் கொள்கிறார்.

விஷன் 2020 தலைவர் ஆர்.திருச்செந்தூரான், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கர சீத்தாராமன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் செ.மதுக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

முன்னதாக எல்.பிரபாகரன் வரவேற்றுப் பேச, பொள்ளாச்சி அருள்மிகு கரிவரதராஜர் பெருமாள் கோவில் செயல் அலுவலர் ஆ.வெண்மணி நன்றி கூறுகிறார்.


அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் – நூல் வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலை ‘இந்து’ குழுமங்களின் சேர்மன் என்.ராம் வெளியிட பேராசிரியர் பா.கல்யாணி பெற்றுக்கொண்டார். விழாவில் என். ராம் பேசியதாவது:

1968-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வெண்மணி என்ற கிராமத்தில் 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் உயிரோடு கொளுத்தப்பட்ட நிகழ்வு குறித்து அன்றைக்கு இருந்த ஊடகங்கள் உண்மைச் செய்தியை வெளியிடவில்லை என்று நீதிபதி சந்துரு தனது நூலில் கூறியுள்ளார். உண்மைதான். அந்த நிகழ்வை அன்றைய ஊடகங்கள் மறைத்துவிட்டன. பின்னர் அந்தச் செய்திகள் மெல்ல மெல்ல வெளியே வரத் தொடங்கியபின் அந்த மக்களின் நீதிக்கான போராட்டங்களில் பங்கேற்றவர் கே.சந்துரு.

மேலும் படிக்க...


சிங்கப்பூரில் கல்விக் கொள்கையும் நடைமுறையும் நூல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது

தமிழ்மொழி மாத விழாவின் ஒரு அங்கமாக ஏப்ரல் 27ம் தேதி காலை எஸ்.கோபிநாத் எழுதிய "சிங்கப்பூரில் கல்விக் கொள்கையும் நடைமுறையும்" நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழக வளாகப் பன்னோக்குக் கூட அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு சிங்கப்பூர்க் குடியரசின் 6வது அதிபர் எஸ்.ஆர்.நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்தார். இவ்விழாவையொட்டி சிங்கப்பூர்த் தமிழ் கல்வி ஆய்வு குறித்த புத்தக கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க...


காவி பயங்கரவாதி புத்தக வெளியீடு

சென்னை: நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகவன் பகவத் வழிகாட்டல் உள்ளது என்றும் குண்டுவெடிப்புகளை நடத்தி முஸ்லிம்கள்மீது பழிபோட்டது தாங்கள்தான் என்றும் காவி பயங்கரவாதி சுவாமி அசிமானந்தா வழங்கிய வாக்குமூலத்தை கேரவான் இதழ் "The Believer" என்ற பெயரில் வெளியிட்டது.

இதனை எழுத்தாளர் ஞானி, "நரேந்திரமோடி ஆதரவு பெற்ற காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக கொண்டுவந்துள்ளார்.

இப்புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

ஸ்ரீசுந்தரபாண்டிய சாஸ்தா வரலாற்று புத்தகம் வெளியீடு

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் ஸ்ரீசுந்தரபாண்டிய சாஸ்தா வரலாறு புத்தகம் வெளியிட்டு விழா மற்றும் மும்பை அன்னதான அறக்கட்டளை   5 ஆம் ஆண்டு தொடக்க விழா,  நடைபெற்றது.

விழாவுக்கு  அன்னதான கமிட்டித் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர்  ராஜசுந்தர் முன்னிலை வகித்தார்.  பேராசிரியர் தொ.பரமசிவன்  நூலை வெளியிட,  எழுத்தாளர் முல்லைமுருகன் பெற்றுக்கொண்டார்.  கமிட்டிச் செயலர் சுப்பையா வரவேற்றார்.

இதில்   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்பாக்குட்டி, செய்துங்கநல்லூர் கிளைச் செயலர் முருகன்,  உதவி -ஆய்வாளர்  ராதாகிருஷ்ணன்,  அறக்கட்டளை துணைத்தலைவர் சுடலைமுத்து,  இணைச்செயலர் மணி உள்படபலர் கலந்துகொண்டனர்.துணைச் செயலர்  தாஸ் நன்றி கூறினார்.


மார்ச் மாத காலச்சுவடு வெளியீடு
கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை ஆவணப்படுத்தல் என்பதற்கப்பால் பாரம்பரியப் பனுவல் ஒன்றினை எதிர்காலத்திலும் நிலைநிறுத்தும் பணியாக இந்நூல் அமையும். - அனிதா ரத்னம் ............................................... வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக்கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரேயொரு நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு. - சே. இராமானுஜம்

புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில் நல்ல துணை நூல் வெளியீட்டு விழா
புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   அம்பேத்கர் பிறந்த நாள், சித்திரை விழா, எழுத்தாளர் தேவிசங்கரியின் "நல்ல துணை' நூல் வெளியீடு உள்ளிட்டவை நடைபெற்றன. இயக்கச் செயலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இணைச் செயலர்கள் தாமோதரன், ஜமுனா முன்னிலை வகித்தனர்.

மேலும் படிக்க...


அன்னை தெரசா கல்வி நிறுவன சாதனை புத்தகம் வெளியீடு
காரைக்கால் அன்னை தெரஸா சுகாதார கல்வி நிறுவனத்தின் சாதனைப் புத்தகம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுச்சேரி அரசு நிறுவனமான அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவருகிறது. மையத்தின் சார்பில் மகளிர் தின விழாவும், ஆண்டு விழாவும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மையத்தின் முதல்வர் ஆர். முரளி தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி. உதயக்குமார், செவிலியர் கண்காணிப்பாளர் எல். ராஜசுலோட்சனா, காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர், புதுவை அன்னை தெரஸா ஆய்வக தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பி. திருமுருகன், புதுவை அன்னை தெரஸா செவிலியர் பயிற்சிப் பள்ளி தலைமை அதிகாரி இ. பிரமிளா தமிழ்வாணன் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் சிறப்புகள் குறித்தும், கல்லூரி மாணவர்களின் எதிர்கால சுகாதார சேவைகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.  கல்லூரி சாதனைகள் குறித்து விழாவில் புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு சேவையாற்றிவரும் அன்னை தெரஸா செவிலியர் கல்லூரி தலைமை அதிகாரி இ. பிரமிளாவுக்கு, லயன்ஸ் கிளப் உமன் அச்சிவ் எம்பவர்மென்ட் விருதை, லயன்ஸ் கிளப் ஆப் காரைக்கால் கிரீன் சிட்டி தலைவர் வனஜா வெங்கட்ராமன், சார்ட்டர் தலைவர் பௌலின் சோழசிங்கராயர் உள்ளிட்டோர் வழங்கினர்.

குறுந்தொகை – அசாமிய மொழிபெயர்ப்பு வெளியீடு
குவஹாத்தி: சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை முதல்முறையாக அசாமிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பிரபல அஸ்ஸாமிய கவிஞரும், சாகித்ய அகாதெமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றவருமான பிஜோய் பர்மன் குறுந்தொகையை அசாம் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

மேலும் படிக்க...Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport