புத்தக வெளியீடு (Book Release)

பன்னிரு திருமுறை நூல் வெளியீட்டு விழா (July – 6)

தஞ்சாவூர்: தருமபுரம் ஆதீனம் சார்பில், பன்னிரு திருமுறை நூல் வெளியீட்டு விழா, சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் வரும், 6ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிய நடக்கிறது.

இதுகுறித்து தஞ்சையில், திருச்சி, மௌனமடம் குமார சுவாமிகள் கூறியதாவது:

சைவமும், தமிழும் தழைத்தோங்க வேண்டும் என்பதே தருமை ஆதீனத்தின் நோக்கம். இதற்காக திருமுறைகள், சாத்திரங்கள் மற்றும் சமய இலக்கியங்களை தொகுத்து நூல்களாக வெளியிட்டு வருகிறோம். 12 திருமுறைகளை உள்ளடக்கிய, 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புதிய நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...


பேனா முனைப் பிரபஞ்சம் – கவிதை நூல் வெளியீடு
வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு தோழி சத்யபிரியா "பேனா முனைப் பிரபஞ்சம் "... என்ற தனது கவிதை நூல் வெளியிட உள்ளார். தொடர் முயற்சி எடுத்துவரும் பெண் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்த முயற்சி நல்லதொரு வழிகோலும். தமிழ் நண்பர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், கவிதைகளை நேசிப்பவர்களையும் இந்த பதிவின் மூலமாக சிறப்பு அழைப்பு விடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். TIME : EVE 5 CLOCK DATE: JULY 5 PLACE: DISCOVERY PALACE BOOK SHOP, K.K NAGAR, CHENNAI.

கவியரசு கண்ணதாசன் நூல் வெளியீடு
கரூர், : கரூர் திருக்குறள் பேரவை சார்பில் பேரவை அலுவலகத்தில் கவியரசர் கண்ணதாசன் சிறப்பு நூல் வெளியிடப்பட்டது. திருக்குறள் பேரவை செயலாளர் மேலைபழனியப்பன், மலரை வெளியிட்டார். கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர் தினகரன், செயலாளர் ஆறுமுகசாமி, பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர்கள் சூர்யா கதிரவன், அனந்தநாராயணன், கவிஞர் அழகரசன், தமிழிசைசங்கம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர்.

கக்கன் 105வது பிறந்த நாள் விழா நூல் வெளியீடு
சேலம்: சேலம், தேசிய சமூக இலக்கிய பேரவை சார்பில், "மாஜி' அமைச்சரும் தியாகியுமான கக்கனின், 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நூல் வெளியிடப்பட்டது. சேலம் தாரை சிட்ஸ் கூட்ட அரங்கில் நடந்த விழாவுக்கு, தேசிய சமூக இலக்கிய பேரவை தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் தர்மலிங்கம் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். கக்கனின் வரலாற்று நூலை, இலக்கிய பேரவையின் மாநில தலைவரும், செங்குந்தர் சங்கத்தின் தென்னிந்தியப் பொருளாளருமான தாரை குமரவேலு வெளியிட, பேரவையின் மாவட்ட தலைவர் முருகன் பெற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க...


இளவேனில் எழுதிய ‘வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும் – புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ புத்தக வெளியீட்டு விழா

எழுத்தாளர் இளவேனில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும் – புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க...


பிரதமர் மோடி எழுதிய புத்தகம் 12ல் வெளியீடு

கோவை : பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது, கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் விதமாக, குஜராத்தி மொழியில் புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தின் ஆங்கில பதிப்பை சப்னா புக் ஹவுஸ் எனும் நிறுவனம் வெளியிட்டது.

மேலும் படிக்க...


இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகங்கள் வெளியீடு

இசைஞானி இளையராஜா (ஜூன் 2-ம் தேதி) தனது 71-வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார்.

இதுநாள்வரையிலும் தனது பிறந்த நாளை இன்னொரு நாள் என்பதுபோலவே பாவித்து வந்த இளையராஜாவால் இனி வரும் வருடங்களில் அப்படியிருக்க முடியாது என்பதை உதாரணமாக்கியது இன்று பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த பிறந்த நாள் விழாவிற்கு கூடிய கூட்டம்..!

சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற ‘ராஜாவின் சங்கீத திருநாள்’ நிகழ்ச்சியுடன், ‘இளையராஜா ரசிகர் மன்றமும்’ தொடங்கப்பட்டது நினைவிருக்கலாம். துவங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்த ரசிகர் மன்றத்தில் கவிஞர்கள், பாடகர்கள், பாடகியர், இசைக் கலைஞர்கள் என சுமார் ஒரு கோடி பேர் அங்கத்தினராக பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க...


மணிமேகலை பிரசுரத்தின் ‘மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

 மணிமேகலை பிரசுரத்தின் ‘மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஏற்பாட்டில் கொழும்பு-13, ஜிந்துப்பிட்டி விவேகானந்தா சபை மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.

 ஆசிரியர் எஸ். குருபாதம் எழுதிய இந்நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் தொழிலதிபர் தெ. ஈஸ்வரனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

 இந்நிகழ்வில் ஹற்றன் புத்தகசாலை உரிமையாளர் லோகநாதன் கேசவமூர்த்தி உட்பட எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி நூற்றாண்டையொட்டி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது

கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ‘‘கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் திரையிசைப் பாடல்கள்’’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நங்கநல்லூரில் உள்ள வாழ்க வளமுடன் சிற்றரங்கத்தில் நடந்தது. புதுகைத் தென்றல் ஆசிரியர் மு.தருமராசன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். முதல் பிரதியை புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர் முத்துசீனிவாசன் பெற்றுக் கொண்டார். நூல் தொகுப்பாளர் கவிஞர் பொன்.செல்லமுத்து, வாமனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் கு.சா. கிருஷ்ண மூர்த்தியின் திரையிசைப் பாடல்கள் அடங்கிய ஒலி ஒளி காட்சியை தாமோதரக்கண்ணன் வழங்கினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மொழிபெயர்ப்பாளர் ராமசாமி, ஊடகவியலாளர் அறந்தைமணியன் உள்ளிட்ட கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குழந்தை இலக்கியச் செல்வர் பி.வெங்கட்ராமன் வரவேற்றார். எஸ்.பி.பாலு நன்றி  கூறினார்.


அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவரின் நகைச்சுவைப் புத்தகம் வெளியீடு

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென் குறித்த நகைச்சுவைப் புத்தகம் வெளியாகியுள்ளது. பியாண்ட் எட்வர்ட் ஸ்னோடென் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த காமிக் புத்தகத்தில் ஸ்னோடெனின் வாழ்க்கைப் பயணம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென், கடந்த ஆண்டு அந்நாட்டின் உளவுப்பிரிவு தொடர்பான பல்வேறு ரகசியங்களை வெளியிட்டார். பத்திரிகைகள் மூலமாக வெளியான அமெரிக்காவின் உளவுத் தகவல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் விளைவாக அமெரிக்காவுக்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக எட்வர்ட் ஸ்னோடென் மீது அமெரிக்க அரசு வழக்குப் பதிவு செய்தது. ஸ்னொடென் தற்போது ரஷியாவில் தஞ்சமடைந்துள்ளார்.Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport