புத்தக வெளியீடு (Book Release)

கடிகை அருள்ராஜ் எழுதிய ‘கடல்நீர் நடுவே’ என்ற புத்தகத்தை உண்மையிலேயே கடல் நீர் நடுவே வெளியிடப்போகிறார்கள்

புத்தக வெளியீட்டைப் புத்தகக் காட்சியில் பார்த்திருப்பீர்கள், புத்தக நிலையத்தில் பார்த்திருப்பீர்கள், தொலைக்காட்சியில் கூடப் பார்த்திருப்பீர்கள். ஏன், ஓடும் ரயிலில் வெளியிடுவதைக் கூடப் பார்த்திருப்பீர்கள். ஆனால், நடுக்கடலில் வெளியிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? கடிகை அருள்ராஜ் எழுதிய ‘கடல்நீர் நடுவே’என்ற புத்தகத்தை உண்மையிலேயே கடல் நீர் நடுவே வெளியிடப்போகிறார்களாம். வரும் மார்ச் மாதம் 12-ம் தேதி அன்று இந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது. முட்டத்திலிருந்து படகு மூலமாக சுமார் 5 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் சென்று புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்கள். வெளியிட்டதும் கடல்சார்ந்த எழுத்தாளர்களின் அனுபவப் பகிர்தல்கள், கடல் உணவு என்று ஜமாய்க்கவிருக்கிறார்கள்.


ஜீவகரிகாலனின் ‘அது ஒரு கனவு’ என்ற சிறுகதையை மாங்கா காமிக்ஸ் புத்தக வடிவில்

ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் உலகம் என்பது கிட்டத்தட்ட குட்டி ஹாலிவுட் போன்றது. பெரும் பணம் கொழிக்கும் துறை என்பதுடன் மாங்கா காமிக்ஸ் படிப்பதற்கென்று பித்துப் பிடித்து அலையும் பெருங்கூட்டம் ஜப்பானில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் உண்டு. தமிழிலும் மாங்கா காமிக்ஸ் முயற்சிகள் இப்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சென்னைத் தமிழரான கணபதி சுப்ரமணியம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஜீவகரிகாலனின் ‘அது ஒரு கனவு’ என்ற சிறுகதையை மாங்கா காமிக்ஸ் புத்தக வடிவில் கொண்டுவரவிருக்கிறார்.


சங்க காலம் முதல் சமகாலம் வரை நாமக்கல்லில் 10 நூல்கள் வெளியீடு

நாமக்கல்: தமிழ்த்துறை பேராசிரியர் அனுராதா எழுதிய, 'சங்க காலம் முதல் சமகாலம் வரை' என்ற தலைப்பில், பத்து நூல்கள் வெளியீட்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. சினிமா பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா தலைமை வகித்தார். பி.ஜி.பி., கல்வி நிறுவன தாளாளர் கணபதி, பொதிகை, 'டிவி' நிகழ்ச்சி தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர், பத்து நூல்களை வெளியிட்டனர்.

ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில், ''பெண் படைப்பாளிகள் அதிக சாதனைகள் படைக்க வேண்டும். அடுப்படியில் ஒடுங்கிக் கிடக்காமல், படிப்படியாய் வெளிவர வேண்டும். புத்தங்கள் எழுதுவதும், புதுமைகள் செய்வதும் பெண்களின் உரிமை,'' என்றார். நூலாசிரியர் அனுராதா தன் ஏற்புரையில், ''ஒரு பெண் நினைத்தால், எதையும் சாதிக்கலாம். எத்தனை இடர்கள் வந்தாலும், அந்த இடர்களை எல்லாம் களையும் மருந்தாக தனக்கு படைப்பாற்றல் இருந்தது. இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால், நான் என் ஆசிரியர்களுக்கு மாணவியாகவே பிறக்க விருப்புகிறேன்,'' என்றார்.


திருஅரசிலி, நெஞ்சந்தொட்ட நிஜங்கள் நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு மலையாள ரத்னா விருதாளர் சங்கம் சார்பில், நல்லாசிரியர் நடராஜன், ராஜசேகரன் எழுதிய திருஅரசிலி, நெஞ்சந்தொட்ட நிஜங்கள் என்ற நுால்கள் வெளியீட்டு விழா, செகா கலைக்கூடத்தில் நடந்தது. தமிழ்வாணன் வரவேற்றார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நுால்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் ராமச்சந்திரன், சீனுவேணுகோபால், உசேன், வேல்முருகன், இபேர், குலசேகரன் உட்பட பலர் கலந்து கொணடனர். நடராஜன் ஏற்புரையாற்றினார். ராஜசேகரன் நன்றி கூறினார்.


பெருங்காட்டுச் சுனை புத்தகம் வெளியீட்டு விழா

கம்பம்;கூடலுாரை சேர்ந்த கவிஞர் கூடல் தாரிக். இவர் கம்பம் இலாஹி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர். தமிழில் கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இவர் எழுதிய 'பெருங்காட்டுச் சுனை' என்னும் கவிதை நுால் வெளியீட்டு விழா ராமேஸ்வரத்தில் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அண்ணன் முத்துமீராமரைக்காயர் வெளியிட, முதல் பிரதியை சித்தா டாக்டர் சிராசுதீன் பெற்றுக் கொண்டார். நுாலாசிரியர் கூடல் தாரிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்த புத்தகம் வெளியீடு

2000 ஆண்டுகள் பழைமையான திருமலை திருப்பதி கோயில் பற்றிய கடந்த மற்றும் தற்போதைய அத்தியாயங்களை உடைய  புத்தகங்கள் இன்று வெளியிடப்பட உள்ளது. "திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் பொதுப்பணிகள்" என்ற தலைப்பில் வெளியாக உள்ள இந்த  புத்தகத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பிஆர்ஓ தலாரி ரவி எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு   திருமலையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க...


வென் சேன்ஜ் ஹாப்பன்ஸ் – புத்தக வெளியீடு

அடையாறு ஒடிஸ்ஸி புத்தக நிலையத்தில், திரு. லலித் ஜக்தியானி, தொழில்மாற்ற பயிற்சியாளர் (சிங்கப்பூர்) எழுதியுள்ள ‘வென் சேன்ஜ் ஹாப்பன்ஸ்’ – புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், திரு. அருண் சி. பரத், ஐ.ஆர்.எஸ்., வருமான வரி ஆணையர், திரு. எம்.எம். முருகப்பன், முருகப்பா குழுமத்தின் துணை தலைவர், திரு. ஜெ. எஸ். சுந்தர்ராஜன், இயக்குனர் குழு, பே டிஎம் பேமன்ட்ஸ் வங்கி மற்றும் திரு. சந்து நாயர், துணை நிறுவனர், ஸ்கோப் இ-நாலட்ஜ் சென்டர், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க...


புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன ராஜா-மந்திரி கதை

சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி, ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்த ராஜா, மந்திரி கதை ஒன்றைக் கூறினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற 'பரமஹம்ச யோகானந்தரின் தெய்வீக காதல்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.

மேலும் படிக்க...


ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு எழுதிய புதிய புத்தகம்.. சென்னையில் ஜன.29ல் வெளியீடு

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு எழுதிய புதிய புத்தகம் வரும் 29ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து எமரால்ட் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு எழுதியுள்ள 'feather in a C.A.P' என்ற புத்தகம் ஜனவரி 29ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த புத்தகம், மேலாண்மை தொடர்பானது.

மேலும் படிக்க...


புத்தக காட்சியில் இன்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் – நூல் வெளியீட்டு விழா
ஜி.விஸ்வநாதன், அ.மு.சுவாமிநாதன், ஆர்.மகாலிங்கம், காந்தி கண்ணதாசன், கே.கே.பி.பன்னீர்செல்வம், இ.சுந்தரமூர்த்தி, தி.சத்தியமூர்த்தி, கோ.உத்திராடம் உள்ளிட்டோர் பங்கேற்பு; சென்னை புத்தகக் கண்காட்சி, செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 5.30. குழந்தை உரிமைகளுக்கான சட்டவள மையம்-மாசற்ற மனித நேயம் நூல் வெளியீட்டு விழா: க.சண்முகவேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்பு;சென்னை புத்தகக் கண்காட்சி, செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 5.30. சொற்பொழிவு: "அற்புத மகானும் அர்த்தமுள்ள ஆயிரமும்' தலைப்பில் ஊடகவியலாளர் மை.பா. நாராயணன்; "வெற்றி நமக்கே' தலைப்பில் ரித்திகா அழகம்மை.பபாசி துணை இணைச் செயலாளர் பி. குருதேவா (பெல் கோ), பபாசி செயற்குழு உறுப்பினர் கு. பூபதி (தோழமை வெளியீடு) உள்ளிட்டோர் பங்கேற்பு; சென்னை புத்தகக் கண்காட்சி, செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை, மாலை 6.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support