புத்தக வெளியீடு (Book Release)

தேனி மாவட்ட வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா

கம்பத்தில், தேனி மாவட்ட வரலாறு புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய 4 ஆம் ஆண்டு விழாவையொட்டி, தியாகி சோமநாதன் நூற்றாண்டு விழா, கம்பம் பஞ்சுராஜாவின் தேனி மாவட்ட வரலாறு புத்தக வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கு சேலம் சோகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினார். தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் தேனி மாவட்ட வரலாறு புத்தகத்தை வெளியிட, தேனி மாவட்ட எஸ்பி. பாஸ்கரன் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். கம்பம் பஞ்சுராஜா ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தலைமைச் செயலக அரசு துணைச் செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னாள் மருத்துவ இயக்குநர் சையது சுல்தான் இப்ராஹிம், ராயப்பன்பட்டி எஸ்யுஎம் பள்ளித் தாளாளர் பிரபாகர், ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி இணைச் செயலர் ஆர்.வசந்தன், பாரதி இலக்கிய பேரவைத் தலைவர் கவிஞர் பாரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஆர்.பி.வி.எஸ். மணியன் தொகுத்து எழுதிய ஸ்ரீ ராமானுஜர் 1000 புத்தக வெளியீட்டு விழா

ஆர்.பி.வி.எஸ். மணியன் தொகுத்து எழுதிய ஸ்ரீ ராமானுஜர் 1000 புத்தக வெளியீட்டு விழா தி.நகரில் நடந்தது. தமிழக பாரதிய கிஸ்ஸான் மோக் ஷாவின் தலைவர் பொன்விஜயராகவன் வெளியிட சமூக ஆர்வலர் மீனாக்ஷிசுந்தரம் பெற்றுக்கொண்டார். உடன் (இடமிருந்து) விவேக பாரதி அறக்கட்டளையின் தலைவர் சந்திரமவுலி, தொகுப்பு ஆசிரியர் ஆர்.பி.வி.எஸ். மணியன், விவேக பாரதி அறக்கட்டளையின் செயலர் மங்கையர்க்கரசி.


மாநகராட்சியில் பாஜவின் ஊழல்கள் ஏஏபி புத்தகம் வெளியீடு

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் மோசமான நிர்வாகம் நடத்தி வரும் பாஜவின் செயல்பாடுகளை, ‘எம்சிடி - மோஸ்ட் கரப்டட் டிபார்ட்மெண்ட்’, என பெயரிடப்பட்ட கையடக்க புத்தகத்தில் ஆம் ஆத்மி விவரித்து உள்ளது.புத்தகத்தை வெளியிட்டு நிருபர்களிடம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:பொது மக்கள் விருப்பம் கருதி இந்த புத்தகம் வெளியிட்டுள்ளோம். மாநகராட்சிகளில் பாஜவினர் நடத்திய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படையில் புத்தகத்தில் விலாவாரியாக அடுக்கி பட்டியலிட்டு உள்ளோம்.

மேலும் படிக்க...


கீழஈரால் கல்லூரியில் பாரதி குறித்த நூல் வெளியீடு

கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் எழுத்தாளர் இளசை மணியன் எழுதிய "உறவினர் நினைவில் பாரதி' எனும் புத்தகம் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியில் நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டு விழாவுக்கு, கல்லூரிச் செயலர் அமலதாஸ் அடிகளார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அமலஜெயராயன், கல்லூரி கணினி துறைத் தலைவர்  ஜோசப் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி தமிழ்த்துறை துணைத் தலைவர் அசோக்குமார் வரவேற்றார்.

விழாவில் உறவினர் நினைவில் பாரதி எனும் புத்தகத்தை, திருச்சி தொன்போஸ்கோ சலேசிய சபையின் மாநிலத் தலைவர் அந்தோணி ஜோசப் வெளியிட கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரிச் செயலர்  அமலதாஸ் அடிகளார் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பாரதி அன்பர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்திப் பேசினர். பாரதி ஆய்வாளரும், நூல் ஆசிரியருமான இளசை மணியன் ஏற்புரை வழங்கினார்.

விழாவில், திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தஞ்சாவூர் அன்னை வேளாங்கன்னி கல்லூரி முதல்வர் தேவநேசன், வழக்குரைஞர் ச. சொர்ணலதா மற்றும் மாணவர், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.


‘அறிவியலுக்கு அப்பால்’ நூல் வெளியீட்டு விழா

சென்னை, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய ‘அறிவியலுக்கு அப்பால்’ என்ற நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் உள்ள பிரம்ம கான சபா, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நேற்று நடந்தது.

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசும் போது, ‘‘தமிழருக்கும், தமிழுக்கும் அதிகம் தொண்டாற்றியவர்கள் வழக்கறிஞர்கள் தான். ரா.பி.சேதுபிள்ளை மிகப்பெரிய தொண்டாற்றி உள்ளார். நல்ல தமிழ், நல்ல தமிழ் சொற்களை தந்தவர்களும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் தான். நீதித்துறை தந்த நல்ல தமிழ் தான் தற்போது நல்ல தமிழாக நடமாடிக் கொண்டு இருக்கிறது’’ என்றார்.

மேலும் படிக்க...


ராமானுஜர் கோயில் தலவரலாறு புத்தகம்

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் தலவரலாறு புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை வெளியிட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேஷவ பெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவாதிரைக்கு 9 நாள்களுக்கு முன்பு சித்திரைப் பெருவிழா அவதார உற்சவமாக நடைபெற்று வருகிறது.

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி உற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அவ்வபோது மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, தேர் உலா வரும் காந்தி சாலை, திருமங்கை ஆவ்வார் தெரு, திருவள்ளூர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளாச் சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இதையடுத்து ராமானுஜர் கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த அவர், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ராமானுஜர் கோயிலின் தலவரலாறு குறித்து 60 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார். இதை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (திருப்பணி) மா.கவிதா பெற்றுக் கொண்டார்.

இதில், சார் ஆட்சியர் அருண் தம்புராஜ், வேலூர் இணை ஆணையர் அசோக்குமார், காஞ்சிபுரம் உதவி ஆணையர் க.ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அற்ற குளத்து அற்புத மீன்கள்

அரசியல், விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீமானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழமையானதோ அந்த அளவுக்கு உண்மையானது. இந்த எளிய உண்மையின் மீது கொண்ட கரிசனங்களே இக்கட்டுரைகள்.


தமிழில் சிற்ப நூல்கள் மிக சொற்பம்: வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள்

தமிழில் சிற்பங்கள் குறித்த நூல்கள் சொற்ப அளவில்தான் வெளிவந்துள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள். நாகர்கோவிலில் சிற்பவியல் ஆய்வாளர் செந்தீ நடராசனின் "சிற்பம் தொன்மம்' என்னும்  புத்தக வெளியீட்டு விழா திரிவேணி இலக்கியச் சங்கமம் சார்பில் நடைபெற்றது. கவிஞர் கடிகை ஆன்றனி தலைமை வகித்தார். விழாவில் அ.கா.பெருமாள் பங்கேற்று மேலும் பேசியதாவது:

தமிழில் சிற்பங்கள் குறித்த நூற்கள் மிகக் சொற்பம்தான். முன்னோடியான மயிலை சீனி வேங்கடசாமி, சாத்தான்குளம் ராகவன் ஆகியோரின் வழி வந்தவர் செந்தீ நடராசன்.  இவரது சிற்பம் தொன்மம் நூலில் 29 சிற்பங்களை பற்றிய விளக்கங்களும், அவை பற்றிய தொன்மங்களும் உள்ளன. இந்த நூல் பண்பாடு மீட்டுருவாக்கத்திற்கு சிற்பங்களைப் பற்றிய ஆய்வும் உதவும் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறது. சிற்பங்களின் அழகியல் கூறுகளை அடையாளம் காண்பது என்பது தமிழ் காவியங்கள், பழம் இலக்கியங்கள் போன்றவற்றில் அழகியல் கூறுகளைத் தேடும் முயற்சியைப் போன்றதல்ல. இதற்கு சிற்பசாஸ்திரமும், பழம் புராணங்களும், வரலாறும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தகுதி தமிழகத்தில்  செந்தீ நடராசனுக்கு உண்டு. அது போல இளைஞர்களுக்கும் வரவேண்டும் என்றார் அவர்.

எழுத்தாளர் ராம் வரவேற்றார். சமூக ஆர்வலர் ஜான்முறே புத்தகத்தை வெளியிட, தாகூர் பெற்றுக் கொண்டார். பேராசிரியர்கள் நா.ராமச்சந்திரன், வரலாற்று ஆய்வாளர்  அ.கா.பெருமாள் ஆகியோர் நூல் ஆய்வுரை நிகழ்த்தினர். நூலாசிரியர் செந்தீ நடராசன் ஏற்புரையாற்றினார்.

விழாவில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், லால்மோகன், செந்தூரான், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, திருத்தமிழ் தேவனார், கோதை சிவக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வில்லிசை கலைஞர் தங்கமணி நன்றி கூறினார்.


சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு விதிமுறைகள் புத்தகம் வெளியீடு

புதுவை சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு விதிமுறைகள் தொடர்பான புத்தகம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நடைபெற்ற இந்த விழாவுக்கு பொதுக் கணக்கு குழுத் தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இதில் முதல்வர் வி.நாராயணசாமி கலந்து கொண்டு பொது கணக்குக் குழுவுக்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

 அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நராயாணன், அனந்தராமன், ஜெயபால், தீப்பாய்ந்தான், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.


கனடாவில் சிறப்பாக நடந்த “தமிழினப் படுகொலைகள்” புத்தக வெளியீட்டு விழா

கனடாவில் சிறப்பாக நடந்த "தமிழினப் படுகொலைகள்" புத்தக வெளியீட்டு விழா* போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைக்கான நடுவத்தின் (CWVHR)  சார்பாக கனடா நாட்டின் ஒன்ரோறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரின் அய்ந்து  நட்சத்திர ஷெரேட்டன் பார்க்வேயில் 15 ஆம் நாள் காலை மிகப் பெரிய அளவில் மனித  உரிமைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு நுழைவுக்  கட்டணமாய் 30 அமெரிக்க டொலர் அறிவிடப்பட்ட போதும் அரங்கு நிறைந்த ஆர்வலர்கள்  வருகை தந்திருந்தார்கள்.

மேலும் படிக்க...Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91