புத்தக வெளியீடு (Book Release)
டெல்லி: இந்திய மஹாராஜாக்கள் பயன்படுத்திய கார்கள் பற்றி பிரபல ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் கவுதம் சென் எழுதிய 'தி மஹாராஜாஸ் அண்ட் தேயர் மேக்னிபிசியன்ட் கார்ஸ்' என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு டெல்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க...
Wednesday 04 May 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. எழுத்தாளர்கள் திலீப்குமார், பா.அகிலன், சத்தியமூர்த்தி ஆகியோர் இந்நூலைத் தொகுத்திருக்கிறார்கள். பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள். விழா அழைப்பிதழைக் கீழே பார்க்கலாம்.
Sunday 24 Apr 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
நாள்:
3.5.2011 செவ்வாய் கிழமை
நேரம்:
மாலை 6 மணி
இடம்:
தேவநேய பாவாணர் அரங்கம்
மேலும் படிக்க...
Saturday 23 Apr 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது
மேலும் படிக்க...
Tuesday 22 Mar 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது!
மூன்று மணி சுமாருக்கு விழா அரங்கத்தினுள் நுழைந்தபோது இந்த அரங்கம் இந்த விழாவிற்குப் போதுமா, சரியாக இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.. வரப்போகும் முக்கிய விருந்தினர்கள், வருகையாளர்கள் அனைவரையும் கற்பனைக் கண்ணால் ஓட்டிப் பார்த்தபோது ஏனோ திருப்தியில்லை. மண்டபம் சிறிதோ, மேடை சிறிதோ என்று சந்தேகம். நூற்று ஐம்பது பேர் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர்கள் எட்டுபேர் என்பதால் நீளமாக ராம்ப் போல இருந்த மேடையை மாற்றியமைத்து அகலமாக்கினோம். கொஞ்சம் திருப்தியானது.
மேலும் படிக்க...
Monday 21 Mar 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
"வாளோர் ஆடும் அமலை” - தடாகம் வெளியீடு.
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் தமிழ் மன்னர்களின் புறம் குறித்த ஓவிய தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ்..
இடம்: பாவாணர் அரங்கம், தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம், அண்ணா சாலை, சென்னை-2
தேதி: 19/02/2011 சனிக்கிழமை.
நேரம்: மாலை 5:30 மனி
முன்னிலை: எழுத்தாளர். பிரபஞ்சன்.
வெளியிடுபவர்: பேராசிரியர். நாகநாதன், துனை தலைவர் - மாநில திட்டக்குழு.
பெற்றுக்கொள்பவர்கள்:
திருமிகு ஜனநாதன், திரைப்பட இயக்குனர்
திருமிகு மிஷ்கின், திரைப்பட இயக்குனர்
திருமிகு கிள்ளிவளவன்
திருமிகு செளந்தர்
திருமிகு ரமேஷ்
திருமிகு ச. விசயலட்சுமி
மேலும் படிக்க...
Saturday 19 Feb 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
முகப்புத்தக நண்பர்., புதிய “ழ” கவிதை இதழ் நடத்துபவர்., தகிதா புத்தங்கள் பதிப்பாளர்., ( திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.) பேராசிரியர்., மணிவண்ணன் நேற்று டிஸ்கவரி புக் பேலசில் ஒரு இலக்கிய கூட்டத்துக்கு அழைத்திருந்தார்.
எங்கள் முகப் புத்தக நண்பர்கள் ., கயல்., அன்பு., வசு., செல்வா., ஜேபி., பாகி ( கிருஷ்ணன்.. டெக்கான் க்ரானிக்கிள்) ., விஜய் மகேந்திரன்., ஜெயவேல் ., ஈழவாணி ஜெய் தீபன்., பாரதி கிருஷ்ண குமார்., அந்தோணி அர்னால்ட்., மணிவண்ணின் மாணாக்கர்கள் பாபு., குழந்தை வேலப்பன்., வேடியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
மணிவண்ணன் வரவேற்புரை அளிக்க., யுகமாயினி சித்தன் தலைமை தாங்க.,பேராசிரியர் இராம குருநாதன் முன்னிலை வகிக்க., வெளி ரங்கராராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்க ., பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றினார்..
தகிதா பதிப்பகத்தின் இரண்டு புது நூல்கள் வெளியிடப்பட்டன. கங்கை மகனின்,” ஆத்மாலயத்”தை யுகமாயினி சித்தன் வெளியிட வெளி ரங்கராஜன் பெற்றுக் கொண்டார்.. இருவரின் பணியும் போற்றற்குரியது. யுகமாயினி இதழை சித்தன் சிறப்பாக நடத்தி வருகிறார். வெளி ரங்கராஜன் அடுத்து ரோட்காவின் ஸ்பானிஷ் நாவலை (பெண் விடுதலை குறித்தானது.. 1936 இல் வெளிவந்தது ) நாடகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். வரும் ஏப்ரலில் நாடகம் மேடைக்கு வரும் என கூறினார்.
இளைய கவிஞர் வைரசின் ,” நிறைய அமுதம். ஒரு துளி விஷம் “ என்ற புத்தகத்தை சித்தன் வெளியிட இராம குருநாதன் பெற்றுக் கொண்டார். ராமகுருநாதன் சாகித்ய அகாதமி., கன்னிமரா., வாசிப்பாளர்கள் சங்கம்., தமிழ் ஆலோசனைக் குழு போன்றவற்றில் தனது பங்கை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கிறார்.
கவிஞர் ஈழவாணியின் புத்தகம் ., “ தலைப்பு இழந்தவை”யும் ( அவர் முதல் வெளியீட்டில் கலந்து கொள்ள இயலாததால் ) மறுபடியும் சித்தன் அவர்களால் வெளியிடப்பட்டது.. விஜய் பெற்றுக் கொண்டார்.
பாரதி கிருஷ்ண குமார் .,” ராமையாவின் குடிசை “ என்ற ஆவணப் பட இயக்குனர். கும்பகோணம்., வெண்மணி., ஆகியவற்றை ஆவணப் படமாக பதிவு செய்தவர். தற்போது கல்வி குறித்தான ஒரு குறும் படமும் இயக்கி வருவதாக கூறினார்..
அனைவரும் மிகச் சிறப்பாக பேசினார்கள். ஈழவாணி தன் படைப்பு குறித்தும் அது எப்படி செதுக்கி சிறப்பாக வந்தது என்பது பற்றியும் பேசினார். குழந்தை வேலப்பன் ( இவர் மணிவண்ணணின் மாணாக்கர்.. ஆண்மை தவறேல் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.. இது வெளியீட்டுக்காக காத்திருக்கிறது .. இவரும் ) தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..
மிகச் சிறந்த கலந்துரையாடல் போல இருந்தது அது.. கவிதை மற்றும் இலக்கியம் குறித்தும்., தற்காலத்தில் அவற்றின் நிலை குறித்தும் ., தமிழ் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு நன்கு வாழும் எனவும்., ஆக்கபூர்வமான கருத்துக்களும் ., தர்க்கங்களும் எடுத்து வைக்கப் பட்டன.. அதை அனைவரும் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்கள்..
புதிய “ழ” வில் என்னுடைய கவிதைகள் வெளி வந்திருக்கின்றன. நாணற்காடனின் நாவல் குறித்தும் ., தகிதாவின் பணி குறித்தும் நானும் பேச அழைக்கப் பட்டேன்.. என்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன். ஒரு புத்தகம் கூட வெளியிடாமல் தமிழின் மிகப் பெரிய இலக்கியவாதிகளுடன் சரிசமமாக அமர்ந்து தேநீருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தமிழ் தந்த வரம். வலைத்தளமும்., முகப் புத்தகமும் தந்த முகம்.
தகிதாவின் மற்ற நூல்களும் ( மொத்தம் 14 ) மறு அறிமுகம் செய்து வைக்கப் பட்டன.. என் கையில் நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில் வந்தது..!!!
புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்களுக்கு உங்கள் படைப்புக்கள் நிறைய பேரை சென்றடைந்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.. தகிதாவும்., டிஸ்கவரியும் தமிழ் மொழி போல் தழைத்து வளர வாழ்த்துக்கள்..
Thursday 03 Feb 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
எழுத்தாளர் எச். பீர் முகம்மது குறித்து அறிமுகம் தேவையில்லை. மத்திய கிழக்கு சமூக அமைப்பு முறைகளை பெருவாரியான தமிழ் இலக்கிய வாசகர்களிடம் கொண்டு சேர்த்தவர். குறிப்பாக நோம் சாம்ஸ்கியை அவர் கண்ட நேர்காணல் இலக்கிய உலகை பரபரப்பாக்கிய நிகழ்வுகளில் ஒன்று.
மத்திய கிழக்கு சிந்தனையாளர்கள் சிலருடன் அவர் கண்ட நேர்காணல்கள், அவர்களைப்பற்றிய அறிமுகம் மற்றும் அவர்களின் கோட்பாடுகளை உள்ளடக்கி, அடையாளம் பதிப்பகத்தின் சார்பில் 'கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்' என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.
இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 5ம் தேதி சனிக்கிழமை நாகர்கோவிலில் வைத்து நடைபெறுகின்றது. நண்பர்களும், இலக்கிய விமர்சகர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும்
எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" (அடையாளம் பதிப்பகம்)
நூல் வெளியீடு
இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA house)செட்டிக்குளம் ஜங்ஷன் நாகர்கோவில்
நாள்: 05-02-2011 சனிக்கிழமை மாலை 5 மணி
தலைமை: கொடிக்கால் ஷேக் அப்துல்லா
நூல் வெளியீடு: எழுத்தாளர் பொன்னீலன்
முதல்பிரதியை பெற்றுக்கொள்பவர்: கவிஞர் என்.டி. ராஜ்குமார்
கருத்துரையாளர்கள்: பேராசிரியர் முத்துமோகன்
கவிஞர் சுகுமாரன்
ஏற்புரை : எச்.பீர்முஹம்மது
Tuesday 01 Feb 2011 | புத்தக வெளியீடு (Book Release) |
என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் தியாகராஜாக் கல்லூரியில் நேற்றுப் பிற்பகல் 5 மணியளவில் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் படிக்க...
Tuesday 11 Jan 2011 | Announcement, செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
அன்பு நண்பர்களுக்கு,
எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை 6 மணிக்கு, “ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“ என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. அதனோடு சேர்த்து மேலும் 8 புத்தகங்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இடம்- அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கம்.
மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை இணைத்துள்ளேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்
தமிழ்நதி
Wednesday 29 Dec 2010 | புத்தக வெளியீடு (Book Release) |