புத்தக வெளியீடு (Book Release)

வாலி எழுதிய கந்தபுராணம்- வெளியிட்டார் இளையராஜா

கவிஞர் வாலி எழுதிய தமிழ்க் கடவுள் கந்தபுராணம் என்ற புத்தகத்தை இசைஞானி இளையராஜா சனிக்கிழமை வெளியிட்டார்.

ஒரு நூலாசிரியரின் கையெழுத்திலேயே வெளிவரும் முதல் முழு நூல் என்ற சிறப்புடன் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.

மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை இசைஞானி இளையராஜா வெளியிட, முதல் பிரதியை தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் மற்றும் இயக்குநர் கே பாலசந்தர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க...


மயிலாப்பூரில் தொட்டு விடாதீர்கள்… நூல் வெளியீட்டு விழா

சென்னை: மலேசியப் பத்திரிக்கையாளர் திருமதி. ஜெயகோகிலவாணியின் தொட்டு விடாதீர்கள்..! நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 5. 30 மணிக்கு சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் சிற்றரங்கில் நடக்கிறது.

பாரதியார் சங்கத் துணை தலைவர் டி.கே.எஸ். கலைவாணன் தமிழ் வாழ்த்துடன் விழா துவங்குகிறது. சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. மதிவாணன் வரவேற்புரை வழங்குகிறார்.

பாரதியார் சங்கத் தலைவர் இரா. காந்தி தலைமை தாங்குகிறார். இந்த விழாவிற்கு மக்கள் ஓசை நாளிதழின் தலைமையாசிரியர் எம். இராஜன் முன்னிலை வகிக்கிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகின்றார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மருத்துவ மேஜர் டி. இராஜா நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

மேலும் படிக்க...


கண்மதியன் கவிதை நூல் வெளியீட்டு விழா: க. அன்பழகன் வெளியீடு
சென்னை: கவிச்சிங்கம் கண்மதியனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று(9-ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடக்கிறது. இந்த விழாவுக்கு கலைமாமணி மா. செங்குட்டுவன் தலைமை தாங்குகிறார், மேனாள் மாநகரத்தலைவர் சா.கணேசன், முனைவர் புரட்சிதாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வா.மு.சே. திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்ற, நூலை இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். முதல் பதிப்பை மாம்பலம் ஆ. சந்திரசேகர் பெற்றுக் கொள்கிறார்.

மேலும் படிக்க...


சமுதாயமே விழித்தெழு–நூல் வெளியீட்டு விழா
இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எழுதப்பட்ட கட்டுரைகளை ‘ சமுதாயமே விழித்தெழு’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுத்துள்ளார். எ.பி. முகம்மது அலி இந்த நூல் வெளியீட்டு விழா ஜூன் 24ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவனார் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க...


விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள் – புத்தக வெளியீடு (Book Release)
ராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ?

மேலும் படிக்க...


இந்திய மஹாராஜாக்களும், கார்களும்’ புத்தகம் டெல்லியில் வெளியீடு
டெல்லி: இந்திய மஹாராஜாக்கள் பயன்படுத்திய கார்கள் பற்றி பிரபல ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் கவுதம் சென் எழுதிய 'தி மஹாராஜாஸ் அண்ட் தேயர் மேக்னிபிசியன்ட் கார்ஸ்' என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு டெல்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க...


வெங்கட் சாமிநாதன் – புத்தக வெளியீட்டு விழா
தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. எழுத்தாளர்கள் திலீப்குமார், பா.அகிலன், சத்தியமூர்த்தி ஆகியோர் இந்நூலைத் தொகுத்திருக்கிறார்கள். பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள். விழா அழைப்பிதழைக் கீழே பார்க்கலாம்.

சுஜாதா விருதுகள் 2011 பரிசளிப்பு விழா
நாள்: 3.5.2011 செவ்வாய் கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: தேவநேய பாவாணர் அரங்கம்

மேலும் படிக்க...


புத்தக வெளியீடு – “சுகப்பிரசவம்”
அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது

மேலும் படிக்க...


புத்தக வெளியீடு – “கார்பரேட் கனவுகள்”
அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது! மூன்று மணி சுமாருக்கு விழா அரங்கத்தினுள் நுழைந்தபோது இந்த அரங்கம் இந்த விழாவிற்குப் போதுமா, சரியாக இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.. வரப்போகும் முக்கிய விருந்தினர்கள், வருகையாளர்கள் அனைவரையும் கற்பனைக் கண்ணால் ஓட்டிப் பார்த்தபோது ஏனோ திருப்தியில்லை. மண்டபம் சிறிதோ, மேடை சிறிதோ என்று சந்தேகம். நூற்று ஐம்பது பேர் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர்கள் எட்டுபேர் என்பதால் நீளமாக ராம்ப் போல இருந்த மேடையை மாற்றியமைத்து அகலமாக்கினோம். கொஞ்சம் திருப்தியானது.

மேலும் படிக்க...Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport