புத்தக வெளியீடு (Book Release)

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியீடு!

கன்னடத்தில் 'அம்மா ஆதா அம்மு : ஜெயலலிதா', அதாவது 'அம்மு என்கிற அம்மா: ஜெயலலிதா' என்ற பெயரில் இந்த நூல் வெளிவந்துள்ளது. 262 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில், ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் முதல் அவர் மறைந்தது வரை பல செய்திகள் சுவாரஸ்யமாக இடம்பெற்றுள்ளன.

மேலும், ஜெயலலிதாவின் குடும்பம் மற்றும் பெற்றோர் பற்றி வெளிவராத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நேற்று விற்பனைக்கு வந்த இந்தப் புத்தகம், வந்த சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன. இதனால், இந்தப் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, புத்தக ஆசிரியர் என்.கே.மோகன்ராம் முடிவுசெய்துள்ளார். கூடிய விரைவில் 'அம்மு என்கிற அம்மா : ஜெயலலிதா' புத்தகத்தை தமிழில் படிக்கலாம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் மறைந்த தெலுங்கு இயக்குநர் தாசரி நராயண ராவ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பில் தண்டுவட அறுவை சிகிச்சை புத்தகம் வெளியிடு

தண்டுவட அறுவை சிகிச்சை

கோவையில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. துறையில் சிறப்பு ஆலோசகரான பார்த்திபன் தண்டுவடத்தில் டிஸ்க் புரோலாப்ஸ் அறுவை சிகிச்சை செய்வது குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். இது நரம்பு தண்டுவட அறுவை சிகிச்சை நுட்பங்கள் டிஸ்க்கை தண்டுவடத்திற்கு பாததிப்பில்லாமல் அகற்றுவது குறித்த தெளிவான முறைகள் விரிவாக உள்ளது. வளர்ந்து வரும் மருத்துவர்களுக்கு மிகவும் பயனள்ள வகையில் அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்தின் பிரதிகள் கோவை மற்றும் மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மே.எம்.சி.எச் மருத்துவமனைத் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி புத்தகத்தை வெளியிட அதனை டாக்டர் ரமணி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர்கள் அருண் பழனிச்சாமிஇமோகன் சேதுபதி மற்றும் வெங்கட் ரமணாஇநந்தினி முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.


ரவிசுப்பிரமணியனின் புத்தக வெளியீட்டு விழா!

கவிஞர். ரவிசுப்பிரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பான 'விதானத்துச் சித்திரம்' புத்தகத்தின் வெளியிட்டு விழா சனிக்கிழமை (27-5-2017) மாலை 6:00 மணியளவில் சென்னை- கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்படவிருக்கிறது. இது அவருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் இத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். ரவிசுப்பிரமணியன் ஏற்கனவே ஒப்பனை முகங்கள், காத்திருப்பு, காலாதீத இடைவெளியில், சீம்பாலில் அருந்திய நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். மேலும் சிறுகதைகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் எனப் படைப்புகள் தந்து பன்முகப்பட்ட ஆளுமையாய்த் திகழ்கிறார்.

40 நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். மேலும் சாகித்திய அகாடமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும், இயக்குநரும் படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். சிறந்த கவிதை நூலுக்கான விருது, இலக்கிய விருது, ஆவணப்படத்திற்கான விருது ,சிற்பி இலக்கிய விருது, தி.க.சி.இயற்றமிழ் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். வெளியிடப்படும் இப்புத்தகம் குறித்துப் பாரதி புத்திரன், மண்குதிரை, கவிதைக்காரன் இளங்கோ, அனுராதா ஆனந்த், வேல் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.

 

நீட் தேர்விலிருந்து விலக்கு: தமிழக சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று தர வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். பேராசிரியர் நா. மணி தொகுத்து, பாரதிபுத்தகாலயம் பதிப்பித்துள்ள “நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?” என்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (மார்ச் 17) சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நூலை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “நீட் தேர்வுகளால் வரும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இதற்கெதிரான போராட்டத்தையும் நடத்தி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபடும்” என்றார். மாநில பாடதிட்டம் தரம் குறைந்ததல்ல நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு பேசிய கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், “நீதிபதி ஒருவர் நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகியும் அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்காததற்காகத்தானே ஆட்சியாளர்கள் வெட்கப் பட வேண்டும்? தனியார் கல்வி நிறுவனங்களை தொடங்கி கொள்ளையடிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய 11 நீதிபதிகள் கொண்ட குழுதான் வெட்கப்பட வேண்டும். டிஎம்ஏ பாய் என்ற வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை மாற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்” என்றார். “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரத்தை விட மாநில அரசின் பாடத்திட்டம் சிலவற்றில் தரம் அதிகமாக உள்ளது. மாநில பாடத்திட்டத்தை சரியாக ஆராய்ந்து பார்க்காமல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உயர்வானது என்று தவறான தகவலை பரப்புகின்றனர்” என்று கூறிய ராஜகோபாலன், “சிபிஎஸ்சி திட்டத்தில் படித்த மாணவர்களில் 95 விழுக்காடு பேர் தனியார் மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதுகின்றனர். இதனால் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் அதிகளவு வெற்றி பெறுகின்றனர். ஏழைகளால் தனியார் மையத்தில் பயிற்சி பெற முடியுமா? இதனை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும்” என்றார். மாணவர்களின் திறனை மேம்படுத்த… “நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால்தான் நீட் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கும். நீட் தேர்வை எதிர்க்கும் அதேநேரத்தில் மாணவர்களின் திறனையும் மேம்படுத்த வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள்களை போன்று, தற்போது உயர்கல்வி தேர்வுக்கான வினாத்தாள்களை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற சில மாற்றங்கள் கொண்டு வந்தால் நமது மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். ஆனால், மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேர்வுகளை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மத்திய அரசு அல்ல.” என்றும் ராஜகோபாலன் கூறினார். மாதம் முழுவதும் போராட்டம் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, “நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் மார்ச் மாதம் முழுவதும் புத்தக விற்பனை இயக்கம் நடைபெறும். ஏப்.1 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

தேனி மாவட்ட வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா

கம்பத்தில், தேனி மாவட்ட வரலாறு புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய 4 ஆம் ஆண்டு விழாவையொட்டி, தியாகி சோமநாதன் நூற்றாண்டு விழா, கம்பம் பஞ்சுராஜாவின் தேனி மாவட்ட வரலாறு புத்தக வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கு சேலம் சோகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினார். தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் தேனி மாவட்ட வரலாறு புத்தகத்தை வெளியிட, தேனி மாவட்ட எஸ்பி. பாஸ்கரன் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். கம்பம் பஞ்சுராஜா ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தலைமைச் செயலக அரசு துணைச் செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னாள் மருத்துவ இயக்குநர் சையது சுல்தான் இப்ராஹிம், ராயப்பன்பட்டி எஸ்யுஎம் பள்ளித் தாளாளர் பிரபாகர், ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி இணைச் செயலர் ஆர்.வசந்தன், பாரதி இலக்கிய பேரவைத் தலைவர் கவிஞர் பாரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஆர்.பி.வி.எஸ். மணியன் தொகுத்து எழுதிய ஸ்ரீ ராமானுஜர் 1000 புத்தக வெளியீட்டு விழா

ஆர்.பி.வி.எஸ். மணியன் தொகுத்து எழுதிய ஸ்ரீ ராமானுஜர் 1000 புத்தக வெளியீட்டு விழா தி.நகரில் நடந்தது. தமிழக பாரதிய கிஸ்ஸான் மோக் ஷாவின் தலைவர் பொன்விஜயராகவன் வெளியிட சமூக ஆர்வலர் மீனாக்ஷிசுந்தரம் பெற்றுக்கொண்டார். உடன் (இடமிருந்து) விவேக பாரதி அறக்கட்டளையின் தலைவர் சந்திரமவுலி, தொகுப்பு ஆசிரியர் ஆர்.பி.வி.எஸ். மணியன், விவேக பாரதி அறக்கட்டளையின் செயலர் மங்கையர்க்கரசி.


மாநகராட்சியில் பாஜவின் ஊழல்கள் ஏஏபி புத்தகம் வெளியீடு

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் மோசமான நிர்வாகம் நடத்தி வரும் பாஜவின் செயல்பாடுகளை, ‘எம்சிடி - மோஸ்ட் கரப்டட் டிபார்ட்மெண்ட்’, என பெயரிடப்பட்ட கையடக்க புத்தகத்தில் ஆம் ஆத்மி விவரித்து உள்ளது.புத்தகத்தை வெளியிட்டு நிருபர்களிடம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:பொது மக்கள் விருப்பம் கருதி இந்த புத்தகம் வெளியிட்டுள்ளோம். மாநகராட்சிகளில் பாஜவினர் நடத்திய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படையில் புத்தகத்தில் விலாவாரியாக அடுக்கி பட்டியலிட்டு உள்ளோம்.

மேலும் படிக்க...


கீழஈரால் கல்லூரியில் பாரதி குறித்த நூல் வெளியீடு

கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் எழுத்தாளர் இளசை மணியன் எழுதிய "உறவினர் நினைவில் பாரதி' எனும் புத்தகம் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியில் நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டு விழாவுக்கு, கல்லூரிச் செயலர் அமலதாஸ் அடிகளார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அமலஜெயராயன், கல்லூரி கணினி துறைத் தலைவர்  ஜோசப் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி தமிழ்த்துறை துணைத் தலைவர் அசோக்குமார் வரவேற்றார்.

விழாவில் உறவினர் நினைவில் பாரதி எனும் புத்தகத்தை, திருச்சி தொன்போஸ்கோ சலேசிய சபையின் மாநிலத் தலைவர் அந்தோணி ஜோசப் வெளியிட கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரிச் செயலர்  அமலதாஸ் அடிகளார் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பாரதி அன்பர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்திப் பேசினர். பாரதி ஆய்வாளரும், நூல் ஆசிரியருமான இளசை மணியன் ஏற்புரை வழங்கினார்.

விழாவில், திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தஞ்சாவூர் அன்னை வேளாங்கன்னி கல்லூரி முதல்வர் தேவநேசன், வழக்குரைஞர் ச. சொர்ணலதா மற்றும் மாணவர், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.


‘அறிவியலுக்கு அப்பால்’ நூல் வெளியீட்டு விழா

சென்னை, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய ‘அறிவியலுக்கு அப்பால்’ என்ற நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் உள்ள பிரம்ம கான சபா, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நேற்று நடந்தது.

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசும் போது, ‘‘தமிழருக்கும், தமிழுக்கும் அதிகம் தொண்டாற்றியவர்கள் வழக்கறிஞர்கள் தான். ரா.பி.சேதுபிள்ளை மிகப்பெரிய தொண்டாற்றி உள்ளார். நல்ல தமிழ், நல்ல தமிழ் சொற்களை தந்தவர்களும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் தான். நீதித்துறை தந்த நல்ல தமிழ் தான் தற்போது நல்ல தமிழாக நடமாடிக் கொண்டு இருக்கிறது’’ என்றார்.

மேலும் படிக்க...


ராமானுஜர் கோயில் தலவரலாறு புத்தகம்

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் தலவரலாறு புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை வெளியிட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேஷவ பெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவாதிரைக்கு 9 நாள்களுக்கு முன்பு சித்திரைப் பெருவிழா அவதார உற்சவமாக நடைபெற்று வருகிறது.

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி உற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அவ்வபோது மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, தேர் உலா வரும் காந்தி சாலை, திருமங்கை ஆவ்வார் தெரு, திருவள்ளூர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளாச் சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இதையடுத்து ராமானுஜர் கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த அவர், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ராமானுஜர் கோயிலின் தலவரலாறு குறித்து 60 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார். இதை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (திருப்பணி) மா.கவிதா பெற்றுக் கொண்டார்.

இதில், சார் ஆட்சியர் அருண் தம்புராஜ், வேலூர் இணை ஆணையர் அசோக்குமார், காஞ்சிபுரம் உதவி ஆணையர் க.ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport