எழுத்தாளர் (Author) - என். சொக்கன்(N.Chokkan) » பக்கம் - 1
என். சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17, 1977) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில, ஹிந்தி, மலையாள, குஜராத்தி மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன.சேலம் ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் என். சொக்கன் ஒரு மென்பொருள் நிபுணர் ஆவார். இணையத்தில் இவர் தொடங்கி, நடத்திவந்த 'தினம் ஒரு கவிதை' என்னும் மடலாடற்குழு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவாகும்.



Updating ..



