நூல் உலகம் “Gadget” பெறுவது எப்படி?

1. முதலில் உங்களுக்கு என்று நூல் உலகம் இணையத்தில் ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும்.
பயனர் கணக்கு (Account) தொடங்க இங்கே செல்லவும்.

2. “Add to Mylibrary” என்கின்ற இணைப்பை (லிங்க்) பயன்படுத்தி நீங்கள் விரும்பிய புத்தகங்களை உங்களது நூலகத்தில் சேர்த்துக் கொள்ளமுடியும்.

3. உங்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை உங்கள் வலைபூ அல்லது இணையத்தில் பகிர்ந்து கொள்ள இங்கே செல்லவும்.

இந்த சேவை பற்றிய தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நூல் உலகம் வழங்கும் “Gadget” to showcase books

நண்பர்களே,

நூல்கள் நமது நண்பர்கள். நல்ல நூல்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது என்பது, ஒரு நல்ல நண்பரை நீங்கள் அவருக்கு தருகிறீர்கள் என்று பொருள்.

நூல் உலகத்தில் தங்களுக்கு பிடித்த நூல்களை உங்கள் வலைபூவிலோ அல்லது இணையத்திலோ இணைத்துக்கொள்ள முடியும். மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் வாசகர்களுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த நூல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த “Gadget” பற்றிய தங்களின் மேலான கருத்துகள் வரவேற்க படுகின்றன.

அன்புடன்,
நூல் உலகம் குழு.

திருவாசகம் – இனிய இசைவடிவில்

திருவாசகம் அறிமுகம்(Thiruvaasagam arimugam) – Thanks : சிவபுரம் -சென்னை

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Read on »

திருவுந்தியார் (இசை வடிவில்)

திருவாசகத்தின் பதினான்காவது பதிகமாகிய திருவுந்தியார் இங்கு
இசை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

தமிழிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.

ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.

நாஞ்சில் நாடன் இணையத் தளம்

நன்றி : சுரேஷ் கண்ணன்

தமிழ்மணம் விருதுகள் 2010 – ”நூல் உலகம்” வழங்கும் புத்தகங்கள்

தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டின் விளம்பரதாரராக அமெரிக்காவைச் சேர்ந்த அலோகா நிறுவனத்துடன் மற்றொரு விளம்பரதாரராக நூல் உலகம் இணையத்தளமும் பங்கு பெறுகிறது.

கீழ்கண்ட பரிசுகளை நூல் உலகம் இணையத்தளம் வழங்குகிறது.

  • முதல் பரிசு ரூ500.00 மதிப்புள்ள புத்தகங்கள்
  • இரண்டாம் பரிசு ரூ250.00 மதிப்புள்ள புத்தகங்கள்

நூல் உலகம் வழங்கும் பரிசுக் கூப்பனைக் கொண்டு நீங்கள் விரும்பும் புத்தகங்களை நூல் உலகம் இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு தமிழ்மணம் வலைப்பூவை பார்கவும்.

ஜீவா புத்தகாலயம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

வணக்கம் நண்பர்களே!,

     ஜீவா புத்தகாலயம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. நூல் உலகம் இணையதளம் சம்பந்தமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த வலைப்பூவை ஆரம்பித்து உள்ளோம்.

இப்படிக்கு,
நூல் உலகம் குழு.