மையலை அதிகரிக்கும் இந்திய சமையல்!

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலுணர்வு திறனும் சிதைந்து விடும். அதனால்தான் நம் முன்னோர்கள் உணர்வுகளை தூண்டும் உணவுகளை சமைத்து உட்கொண்டுள்ளனர். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து தம்பதியர் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கினர். இந்திய சமையலில் இடம்பெறும் மையலை அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களை தெரிந்து கொள்வோம்.
Read on »

ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்

இந்திய சமையலில் தனியா எனப்படும் கொத்தமல்லிக்கு சிறப்பு மிக்க இடமுண்டு. சமையலில் மசாலா பொருளாக வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் இருந்து வளரும் சிறுதாவரமான கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இந்த சிறிய வகை தாவரத்தில் உள்ளது என்றால் மிகையில்லை. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உரைவதை தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.

Read on »

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தாள் விழா

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள் விழா, படத்திறப்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள இலப்போர்த்து வீதியில் அமைந்துள்ள இரெவே சொசியால் அரங்கில் 05.09.2011 மாலை 6.30 மணியிலிருந்து எட்டு மணி வரை நடைபெற்றது.

பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தலைமை தாங்கினார். பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் ழான் லூய்க் செவ்வியார் அவர்கள் பெருமழைப்புலவரின் படத்தைத் திறந்துவைத்தார்.
Read on »

அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன?

அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன?

கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். ‘திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?’ என்பதுதான் அது.

Read on »

காங்கிரஸ் தமிழகத்திற்குத் தேவை இல்லை – தமிழருவி மணியன் அனல்அருவி மணியனாகிறார்.

அகிம்சை பாதையில் செல்லும் அன்னா ஹசாரேவின் அறப் போராட்ட எழுச்சி முதல்…தமிழர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை வரை, பேசத் தொடங்கினால் தமிழருவி மணியன் அனல்அருவி மணியனாகிறார்.

Read on »

தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தடை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மூவரது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி அவர்களைத் தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டிருந்தது.
Read on »

ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்பினால் அதைச் செய்யட்டும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சிலர் கோரி வருகின்ற நிலையில், அரசும் நீதிமன்றமும் அப்படி கருதினால் அதைச் செய்யட்டும் என்று டி. ஆர். கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக விசாரணையை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டி. ஆர். கார்த்திகேயன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளதாவது:

Read on »

ராஜீவ் கொலை வழக்கு மர்மம்….யார் உண்மையான குற்றவாளிகள் ???

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய விசாரணை சரியான போக்கில் விசாரிக்கப் படவில்லை …………..

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ.இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய திரு.மோகன்ராஜ் அவர்கள் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் தான் விசாரணையில் ஈடுபட்டிருந்த பொது நேர்மையான விசாரணையில் குறுக்கிட்டவர்களையும், விசாரணையில் தப்பிய குற்றவாளிகளையும் , ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களையும் உண்மையான கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்பது பற்றியும் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் விரிவாக கூறியிருந்தார் . அவரின் உள்ளக்குமுறல் களையும் , ராஜீவ் கொலையின் சில நெருடல் களையும் கீழே உள்ள வீடியோ வில் காணுங்கள் ……….

நம்பகமான லோக்பால் மசோதாவுக்கு என்ன தேவை?-ராஜீவ் சந்திரசேகர்

நம்பகமான லோக்பாலுக்கு 7 விஷயங்கள் தேவை என்று எம்பி ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இந்தியாவில் பெருகி வரும் ஊழல் குறித்த விவாதம் கடந்த 25ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது எம்பி ராஜீவ் சந்திரசேகர் ஆற்றிய உரையின் விவரம்:

ஆட்சித் திறன், ஊழல் ஒழிப்பு விவகாரங்களில் இந்திய மக்கள் சமீப காலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதீத ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக லோக்பால் இயக்கத்தில் பேரார்வம் கொண்டுள்ளனர்.
Read on »

யாருக்குப் பெருநாள்?

– பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை,
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை,
காலையில் எழுந்து டீ / காபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை,
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை,
இவருக்குத்தான் இனிய பெருநாள்…!

Read on »