சமச்சீர் தடை… சாதி உணர்வு காரணமா?

சமச்சீர் தடை… சாதி உணர்வு காரணமா?

தமிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது. ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரம்… இதில் விதிவிலக்கு. சமச்சீர்க் கல்வி குறித்த விவாதங்களும் விவகாரங்களும் தொடர்கின்றன.

சமச்சீர்க் கல்விப் பாட நூல்களில் ஆட்சேபகரமானவை என்று கூறி, சில பகுதிகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வருகிறது தமிழக அரசு. தமிழ்ப் பாட நூலில் இலக்கியம் இருட்டடிப்பு செய்யப்படுவதாக, இலக்கியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அறிவொளி இயக்கம் மூலம் கிராமங்கள்தோறும் மக்களுக்குக் கல்வி கற்றுத் தந்தவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனிடம் உரையாடியதில் இருந்து…

Continue Reading »


சமச்சீர் கல்வி:வகுப்புகளை புறக்கணிக்க திமுக அழைப்பு

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி வரும் வரும் 29-ம் தேதி பள்ளி வகுப்புகளைப் புறக்கணிக்க திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வரும் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பள்ளிகள் – கல்லூரிகள் அனைத்தையும் மாணவர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்கள் வேலைக்குச் செல்லாமல் புறக்கணிக்க வேண்டுமென்று திமுக மாணவரணி-இளைஞரணி மற்றும் பல்வேறு அணிகளின் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading »


சமச்சீர் கல்வி 2012-ல் தான் சாத்தியம்: அரசு வாதம்

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், அடுத்த ஆண்டுக்குள் குறைகளைச் சரிசெய்து, வரும் 2012 கல்வியாண்டில் திருத்தப்பட்ட சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரும் தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடந்தது.

Continue Reading »


சமச்சீர் கல்விக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், ஆகஸ்ட் 2-க்குள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு அளித்திட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Continue Reading »