தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் கட்டப்பட்ட சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் நாளை திறக்கப்படுகிறது. சென்னையில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதன் பிறகு பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்க கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக 40 லட்சம் ஒதுக்கீடு செய் தது. அழகிய வடிவமைப்புடன் கட்டுமான பணிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று தற்பொழுது முழுவடிவம் பெற்றுள்ளது மணிமண்டபம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திறப்பு விழாவிற்காக பல்வேறு புதிய கட்டிடங்கள் காத்திருந்தன.

இந்நிலையில், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தை நாளை 18ம் தேதி சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயல லிதா திறந்து வைக்கிறார்.