0245பொருள் இருந்தால்தான் இந்த உலகில் வாழ முடியும். வசதியாக இருந்தால்தான் நமது எண்ணங்களை அருளுக்கு வேண்டிய தியானம் யோகப் பயிற்சி செய்ய முடியும். கஷ்டத்திலும் சிரமத்திலும் இருப்பவனைப் போய் நீ தியானம் செய் என்றால் அவனுக்கு மனம் எப்படி தியானத்தில் செல்லும்? ஆகவே முதலில் வாழ்க்கையில் வேண்டிய வசதிகளை எல்லா மனிதர்களும் அடைந்து சுகபோக வாழ்வு வாழ்வதற்காகத்தான் நமக்கு நம்மிடமே அற்புதமான மனோசக்திகளை இறைவன் கொடுத்துள்ளான். ஆகவே நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்தையும் பெற்று வாழ உங்கள் மனோ சக்திகளைப் பயன்படுத்தி வெற்றி அடையலாம்.