1001மன அழுத்தத்திலிருந்தும், அதனால் நம் உடலில் ஏற்படும் நோய்கள், அதன் விளைவுகள் ஆகியவற்றிலிருந்தும் விடுபட்டு, நலவாழ்வு வாழ, இந்தப் புத்தகம் உதவி செய்யும். நமக்கு மனதின் தன்மையைச் சொல்லி, அமைதி பெற வழிகாட்டிய பதஞ்சலி முனிவருக்கும், புத்தபிரானுக்கும் வணக்கம் சொல்லி, மனதின் சோர்வை நீக்கி ஒளி விளக்காய் திகழும், ஸ்ரீ அன்னையை நமஸ்கரித்து, என்றும் வழிகாட்டியாக விளங்கும் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பாதங்களில் காணிக்கையாய் இந்நூல் சமர்ப்பிக்கப்படுகிறது.