1076மனதில் இருப்பதெல்லாம் வார்த்தையில் வந்துவிடுகிறதா? அடுத்தவர் உங்களிடம் பேசுகிறபோது எதை வெளிப்படுத்த விரும்புகிறார், எதை மறைக்க முயல்கிறார் என்பதை எப்படிக் கண்டறிவீர்கள்? அவருடைய பேச்சில் எந்த அளவு உண்மை இருக்கும், எந்த அளவு பொய் இருக்கும் என்பதை எப்படிக் கண்டு கொள்வீர்கள்? அதற்கு, கொஞ்சம் உடல் மொழி தெரிந்திருக்க வேண்டும். ‘உடல்மொழி’ என்பது என்ன? அங்க அசைவுகள் வெளிப்படுத்தும் செய்தியைப் புரிந்து கொள்வதுதான் அது. அடுத்தவர்பேசும் வார்த்தைகளுடன் அவரது உணர்ச்சி வெளிப்பாடுகளையும் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டும்.