திருவனந்தபுரம்:கேரளாவில் வசிக்கும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மலையாளம் கற்கும் வகையில், ‘ஹமாரி மலையாளம்’ என்ற புத்தகத்தை, மாநில அரசு தயாரித்துள்ளது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், தமிழகம், மேற்கு வங்கம், பீஹார், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உட்பட, வெளிமாநிலங்களைச் சேர்ந்த, 25 லட்சம் பேர், தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், மலையாள மொழியை எளிதில் கற்கும் வகையில், ‘ஹமாரி மலையாளம்’ என்ற புத்தகத்தை மாநில அரசு தயாரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில், விரைவில் நடக்கவுள்ள விழாவில், இந்த புத்தகத்தை, மாநில கல்வித் துறை அமைச்சர், ரவீந்திரநாத் வெளியிட உள்ளார்.

இது குறித்து, எழுத்தறிவு இயக்க இயக்குனர், ஸ்ரீகலா நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ”உள்ளூர் மக்களுடன், வெளிமாநில மக்கள், எளிதில் பேசி பழகும் வகையில், இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.