IMG-20170724-WA0049-640x874பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு பொன்மனச் செம்மலின் எம்.ஜி.ஆரின் பொன்விழா 2017 எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ K.R. சோமா அரங்கில் நடைபெற இருக்கிறது*. மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மக்கள் திலகத்தை நினைவுகூறும் வகையில் இந்த கலை இரவை *எம்.ஜி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சேர்ந்த எம்.ஜி.ஆர் கலைமகள் திருமதி பூங்கொடி* *எம்.கே.யு. மலேசிய கலை உலகம்* குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த கலை நிகழ்ச்சியில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. எம்.ஜி.ஆர். சிறந்து விளங்கிய சிலம்பாட்டமும் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இவற்றுடன் சேர்ந்து ஒரு புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது.

*எம்.ஜி.ஆர். தங்கராஜு, எம்.ஜி.ஆர் மதி ஆகியோரின் அபிநயம் நடைபெறுகிறது*.

*ஏரா நடனக்குழுவினர் தங்கள் நடனத்தால் நம்மை மகிழ்விக்க இருக்கின்றனர்*.

*பார்வையிழந்த பாடகர்களான திரு. நாகா, குமாரி காயத்ரி ஆகியோருடன் பாடகர்கள் TMS சிவகுரு, சென்னை TMS ராஜா, N.பாலா, ரமேஷ், ஷர்மிளா சிவகுரு, நளினா* ஆகியோரும் இணைந்து நம்மை இசை வெள்ளத்தில் ஆழ்த்த போகிறார்கள்.

நமது பாரம்பரிய கலையான சிலம்ப சாகச நிகழ்ச்சியை *மகாகுரு ஆறுமுகம் அவர்களின் புதல்வர் மகாகுரு அ.சிவகுமார்* அவர்களின் மாணவர்கள் மேடையில் நிகழ்த்த இருக்கின்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழகத்தை சார்ந்த பேராசிரியர் மற்றும் சினிமா வரலாற்று ஆராய்ச்சியாளர் உயர்திரு *வா. பாலகிருஷ்ணன்* அவர்கள் எழுதியிருக்கும் ”எம் ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்” என்ற புத்தக வெளியீடு நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து *திரு. வெங்கட் ராவ்* மற்றும் அவரது துணைவியார், பேராசிரியர் உயர்திரு . *வா. பாலகிருஷ்ணன்* அவர்கள் , பல நாடுகளில் பெரும்புகழ் பெற்ற *சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்* மற்றும் சென்னை லயன்ஸ் கிளப் *கவர்னர் டாக்டர். மணிலால்* ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

IMG-20170724-WA0048-300x200இந்நிகழ்ச்சியின் பிரதான அறிவிப்பாளர் *திரு. தமிழ் செல்வன்*

கடந்த ஆண்டு MGR THE LEGEND 3, என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் கலைமகள் என்ற சிறப்புக்குரிய பட்டத்தினை *திருமதி பூங்கொடி* அவர்களுக்கு மதிப்புக்குரிய சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்வில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் சில கலைஞர்களுக்கு விருது வழங்க இருக்கிறார்

இந்த நிகழ்ச்சியில் MALAYSIAN ASSOCIATION FOR THE BLIND சங்கத்திற்கு *நன்கொடையாக Rm 3,000* பார்வையற்றோர் முன்னேற்றத்திற்கு அந்த நிறுவனத்தின் உறுப்பினரிடம் மேடையினில் காசோலையாக வழங்கப்படும்.

பிரமாண்டமான அரங்க அமைப்பு ஒளி ஒலி ஏற்பாடு கண்கவர் கலை நிகழ்ச்சி என  எம் ஜி.ஆரின் 100 ம் ஆண்டு பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 , சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டாளர் பொன்கொடி தெரிவித்தார். திருமதி பூங்கொடியின் இரண்டாவது நிகழ்ச்சியான பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்ச்சி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாக அமையும்.