கிள்ளை : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையில் ஏராளமானோர் ஆர்வத்துடன் புத்தகங்களை தேர்வு செய்தனர்.சிதம்பரத்தில் ஆண்டுதோறும் அபிநயா புக்ஸ் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் 18ம் தேதி கீழவீதி கோதண்டரான் திருமண மண்டபத்தில் துவங்கியது.கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் வெளியிட்ட 5000 தலைப்புகளிலான சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதை, கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, தத்துவம், உளவியல், இலக்கணம், இலக்கியம், அறிவியியல், இயற்கை மருத்துவம், யோகா, சமையல் கலை, குழந்தைகளுக்கான கதைகள், ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களுடன், கல்வி தொடர்பான ‘சிடி’க்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவை இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை தேர்வு செய்தனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 23ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.